பிரம்ம முகூர்த்தத்தின் ரகசியம் தெரிஞ்சா..இந்த நேரத்தை மிஸ் பண்ண மாட்டீங்க .!

Published by
K Palaniammal

பிரம்ம முகூர்த்தம்– பிரம்ம முகூர்த்த நேரத்தின் ரகசியம் பற்றி இப்பதிவில் தெரிந்து கொள்வோம் .

பிரம்ம முகூர்த்தம் என்றால் என்ன ?

பிரம்மன் தான் இந்த பிரபஞ்சத்தை படைத்தவர் என இந்து மதத்தில் நம்பப்படுகிறது. ஒரு நாளைக்கு 30 முகூர்த்தங்கள் உள்ளது. இதில் இரவின் கடைசி முகூர்த்தம் பிரம்ம முகூர்த்தம் ஆகும்.

இந்த நேரத்தில் சரஸ்வதியும் பிரம்மனும் தன் பக்தர்களுக்கு ஆசி வழங்குவார்கள் என கூறப்படுகிறது. சூரியன் உதயமாகும் ஒன்றரை மணி நேரத்திற்கு முன்பு பிரம்ம முகூர்த்தம் தொடங்கிவிடும், இது ஒவ்வொரு நாளும் மாறுபடும்.

உதாரணமாக இன்றைக்கு சூரியன் ஆறு மணிக்கு உதிக்கிறது என்றால் அதற்கு ஒன்றரை மணி நேரத்திற்கு முன்பு அதாவது நான்கு முப்பதுக்கு ஆரம்பித்து விடும். பொதுவாக கூற வேண்டும் என்றால் அதிகாலை 4 -6 பிரம்ம மூகூர்த்தம்  ஆகும்.

பல மதத்தினரும் அதிகாலையில் இந்த நேரத்தில் ஜெபம் செய்வது, தியானம் மேற்கொள்வது, இஸ்லாமியர்களின்  முதல் தொழுகை என மேற்கொள்ளப்படுகிறது. இதற்கு ஒவ்வொரு மதத்தினரும் ஒவ்வொரு பெயர் கூறிக் கொண்டாலும் இந்து மதத்தில் இருந்து தோன்றியதுதான் பிரம்ம முகூர்த்தம்.

பல வெற்றியாளர்களின் ரகசியமான நேரம் இந்த நேரம் தான் . நமது மனநிலையில்  நிம்மதி தரக்கூடிய நேரம் பிரம்ம முகூர்த்த நேரம் என அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

அதிகாலையில் நாம் எழுந்து விட்டோம் என்றால் அன்றைய நாள் நீண்ட நேரம் நமக்கு கிடைக்கும். நமக்காக கூட நேரங்களை ஒதுக்கிக் கொள்ளலாம்.

பிரம்ம முகூர்த்தத்தில் செய்ய வேண்டியவை:

இந்த நேரத்தில் கடவுளின் மந்திரங்களை உச்சரிப்பதும் , கடவுள் வழிபாட்டிற்கு உகந்த நேரம் .அதிகாலையில் குளித்துவிட்டு பூஜை செய்வது விளக்கேற்றுவது போன்றவற்றை மேற்கொள்வது  இரட்டிப்பான பலன்களை கொடுக்கும்.

தியானம் மேற்கொள்ள உகந்த நேரம் ஆகும். இந்த பிரம்ம முகூர்த்த நேரத்தில் வெட்ட வெளியான பகுதியில் அமர்ந்து இயற்கையான காற்றை சுவாசித்து தியானம் செய்வதன் மூலம் பல உடல் ஆரோக்கிய நன்மைகள் நமக்கு கிடைக்கிறது. இந்த நேரத்தில் நமது உடல் புதுப்பிக்கப்படுகிறது.

மேலும் புத்தகம் படித்தல் மற்றும் இன்றைய நாளுக்கான தீர்மானங்களை திட்டம் செய்வதற்கும் இந்த நேரத்தை பயன்படுத்திக் கொள்ளலாம். பிரம்ம முகூர்த்த நேரத்தில்  பிரபஞ்ச ஆற்றல் அதிகமாக கிடைக்கக்கூடிய நேரம் ஆகும்.

இந்த நேரத்தில் நாம் செய்யும் செயல்களின் பலன்கள் இரட்டிப்பாகவும் விரைவிலும்  நமக்கு வந்து சேரும்.உங்கள் ஆசைகள் எதுவாயினும் இந்த நேரத்தில் தொடர்ந்து கூறி செபிக்கும் போது விரைவில் நடக்கும் .

பிரம்ம முகூர்த்தத்தில் செய்யக்கூடாதவைகள்:

இந்த நேரத்தில் சாப்பிடக்கூடாது. ஏனெனில் இரவில் நாம் எடுத்துக் கொண்ட உணவே பாதி செரித்துக் கொண்டிருக்கும். இந்த நிலையில் நாம் ஏதேனும் உணவை சாப்பிட்டால் அது அஜீரணத்தை ஏற்படுத்தும்.

கடுமையான வேலைகளை செய்யக்கூடாது இது ஆயிலை குறைக்கும் எனவும் கூறப்படுகிறது. இந்த நேரத்தில் தேவையில்லாத பேச்சுக்களை பேசக்கூடாது.

எனவே பிரபஞ்ச சக்தியும் தெய்வ சக்தியும் நிறைந்த இந்த நேரத்தை பயன்படுத்தி உங்கள் ஆசைகளை நிறைவேற்றிக் கொள்ளுங்கள்.

Recent Posts

ஜூலை 19ஆம் தேதி நாடாளுமன்ற அனைத்துக் கட்சி கூட்டம்.!

டெல்லி :நாடாளுமன்றத்தின் வரவிருக்கும் மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 21 முதல் ஆகஸ்ட் 21ம் தேதி வரை நடைபெறும், ஆகஸ்ட் 13…

5 minutes ago

அஜித் மரணம்: மாநில மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணை.!

சிவகங்கை : திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக காவலராகப் பணியாற்றிய அஜித்குமார் (27), நகை திருட்டு புகாரில்…

48 minutes ago

நீலகிரி, கோவை மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு! அலர்ட் கொடுத்த வானிலை மையம்!

சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக,03-07-2025 முதல் 05-07-2025 வரை தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும்…

2 hours ago

7 நாட்கள் ஓய்வு கிடைத்த பிறகும் பும்ராவுக்கு அணியில் இடம் கொடுக்கவில்லை? ரவி சாஸ்திரி ஆதங்கம்!

எட்ஜ்பாஸ்டன் : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பயிற்சியாளரும், முன்னாள் வீரரும், தற்போதைய வர்ணனையாளருமான ரவி சாஸ்திரி, இந்திய அணியின்…

2 hours ago

வேறு மாதிரி என்றால், எந்த மாதிரி? டென்ஷனா எடப்பாடி பழனிசாமி!

சென்னை : விருதுநகர் மாவட்டத்தின் சாத்தூர் வட்டம், சின்னக்காமன்பட்டி கிராமத்தில் உள்ள தனியார் பட்டாசு ஆலையில் நேற்று காலை 8:30 மணியளவில்…

3 hours ago

போதைப்பொருள் வழக்கு : ஜாமின் கேட்ட கிருஷ்ணா, ஸ்ரீகாந்த்! தீர்ப்பை தள்ளி வைத்த நீதிமன்றம்!

சென்னை : போதைப் பொருள் (கொக்கைன்) பயன்படுத்தியதாக கைது செய்யப்பட்ட நடிகர்கள் ஸ்ரீகாந்த் மற்றும் கிருஷ்ணா, ஜாமீன் கோரி சென்னை…

3 hours ago