murugar
வைகாசி விசாகம் 2024 -இந்த ஆண்டிற்கான வைகாசி விசாகம் எப்போது என்றும் தேதி, நேரம் மற்றும் அதன் சிறப்புகள் பற்றி இப்ப பதிவில் காணலாம்.
வைகாசி மாதத்தில் வரும் பௌர்ணமி திதியும் விசாக நட்சத்திரமும் இணையும் நாள் வைகாசி விசாகம் என கொண்டாடப்படுகிறது. இன்றைய நாளில் தான் முருகப்பெருமான் சிவபெருமானின் நெற்றி கண்ணில் இருந்து அவதரித்த நாளாகும். மேலும் எமதர்மன் அவதரித்த நாளும் இன்று தான் எனவும் கூறப்படுகிறது.
விசாக நட்சத்திரத்தால் வைகாசி மாதத்திற்கே சிறப்பாகும். விசாக நட்சத்திரம் ஆறு நட்சத்திரங்களின் கூட்டு எனவும் சாஸ்திரங்கள் கூறுகிறது .
இன்றைய தினம் முருகப் பெருமானுக்கு சிறப்பு வாய்ந்த தினமாக இருப்பதாலும் நெருப்பிலிருந்து முருகன் அவதரித்ததால் முருகனை குளிர்விக்க பக்தர்கள் பால்குடம் எடுத்து வழிபாடு செய்வது மிகச் சிறப்பாக கருதப்படுகிறது.
இந்நாளில் முருகப்பெருமானின் அனைத்து ஆலயங்களிலும் சிறப்பு வழிபாடுகள், அபிஷேகங்கள் நடைபெறும். மேலும் விரதம் இருந்து வழிபட்டால் நினைத்த காரியம் கைகூடும் , பகை விலகும்.
பொதுவாக குழந்தை பேறு கிடைக்க கந்த சஷ்டி விரதத்தை மேற்கொள்வார்கள் ஆனால் முருகன் அவதரித்த இத்தினத்தில் விரதம் இருந்து வழிபாடுகளை மேற்கொண்டால் முருகப்பெருமானே மகனாக பிறப்பார் என்ற நம்பிக்கை உள்ளது.
இந்த ஆண்டுக்கான வைகாசி விசாகம் மே மாதம் 22ஆம் தேதி காலை 8:18 க்கு துவங்கி மே மாதம் 23ஆம் தேதி 9:43 வரை உள்ளது. இந்த நாளில் முருகப்பெருமானை வழிபாடு செய்து கந்த சஷ்டி கவசம், கந்தர் அனுபூதி, திருப்புகழ் போன்றவற்றை படிப்பது மிகச் சிறப்பாகும்.
படிக்க இயலாதவர்கள் முருகனுக்கு உரிய மூல மந்திரமான ஓம் சரவணபவ என்று இந்த ஒரு மந்திரத்தை மட்டுமே கூறினாலே முருகப்பெருமானின் பரிபூரண அருள் கிடைத்து விடும்.
எந்த ஒரு பிரச்சனை வந்தாலும் கந்த பெருமானை வழிபாடு செய்தாலே அதிலிருந்து விலகி கர்ஜனையோடு வலம் வரும் பாக்கியத்தை கந்த பெருமான் தருவார் என்று ஆன்மீக வரலாறு கூறுகிறது. ஆகவே இந்த வைகாசி விசாகத்தன்று முருகப்பெருமானை மனம் உருகி வழிபாடு செய்து இந்த நாளுக்குரிய அனுகூலத்தை பெறுங்கள்.
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் இந்தியா முழுக்க போர்க்கால பாதுகாப்பு…
டெல்லி : பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூரை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் என்பது நாளுக்கு…
டெல்லி : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து நேற்று முந்தினம் இந்திய ராணுவம் பாகிஸ்தான் பகுதிக்குள் இருந்த பயங்கரவாதிகள் முகாம்கள்…
ஜம்மு காஷ்மீர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய எல்லையோரம் உள்ள மாநில…
ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்…
லாகூர் : இந்தியா மீது தாக்குதல் தொடுத்த பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள் வான்பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில்…