விடிய விடிய வெடிகுண்டு சத்தம்! தட்டி தூக்கும் இந்திய ராணுவம்.., எல்லையில் தொடரும் பதற்றம்!
இந்தியா - பாகிஸ்தான் போர் சூழல் நிலவும் சமயத்தில் இரு நாட்டு எல்லை பகுதியிலும் வான்வெளி தாக்குதல்கள் தொடர்ந்து நடைபெறுகின்றன. பாக். தாக்குதலை இந்தியா தொடர்ந்து முறியடித்து வருகிறது.

டெல்லி : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து நேற்று முந்தினம் இந்திய ராணுவம் பாகிஸ்தான் பகுதிக்குள் இருந்த பயங்கரவாதிகள் முகாம்கள் மீது ஆபரேஷன் சிந்தூர் எனும் பெயரில் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலை தொடர்ந்து இந்தியா – பாகிஸ்தான் பகுதியில் எல்லை பதற்றம் என்பது அதிகரித்த வண்ணம் இருக்கிறது.
ஜம்மு காஷ்மீர், பஞ்சாப் உள்ளிட்ட இந்தியா – பாகிஸ்தான் எல்லை பகுதியில் அமைந்துள்ள மாநிலங்களில் தாக்குதல்கள் தொடர்ந்து நடைபெற்ற வண்ணம் உள்ளன. இதில் பாகிஸ்தான் ராணுவம் நடத்திய டிரோன் தாக்குதல்களை இந்திய ராணுவம் தொடர்ந்து முறியடித்த வண்ணம் இருக்கிறது. இதுவரை நேற்று 50 டிரோன் தாக்குதலை இந்திய ராணுவம் வானிலேயே முறியடித்ததாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.
பதான்கோட் (பஞ்சாப்), ஜம்மு காஷ்மீரில் ஜம்மு , உதாம்பூர், அக்னூர், சம்பா, பாரமுல்லா மற்றும் குப்வாரா உள்ளிட்ட பல இடங்களில் சைரன்கள் மற்றும் ஏராளமான வெடிகுண்டு சத்தங்கள் இரவு முழுக்க கேட்டுக்கொண்டே இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நேற்று (மே 8) இரவு 11 மணி அளவில் ஜம்மு-காஷ்மீரின் சம்பா மாவட்டத்தில் உள்ள சர்வதேச எல்லை பகுதியில் ஒரு கும்பல் ஊடுருவ முயற்சி செய்ததாகவும், அந்த ஊடுருவல் முயற்சியை BSF (இந்திய எல்லை பாதுகாப்பு படையினர்) முறியடித்தது என்று எல்லைப் பாதுகாப்புப் படை தகவல் தெரிவித்துள்ளது.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பூஞ்சில் பாகிஸ்தான் ராணுவம் நேற்று இரவு எல்லை தாண்டிய தாக்குதலில் ஈடுபட்டது. இதில் பூஞ்சில் அஜோட் கிராமத்தில் பொதுமக்களின் சொத்துக்கள் சேதம் ஏற்பட்டுள்ளது. இந்த தாக்குதல்களில் இதுவரை உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை என்றே தகவல்கள் வெளியாகி வருகின்றன.
லேட்டஸ்ட் செய்திகள்
”பயணிகள் விமானத்தை கேடயமாக பயன்படுத்தி பாக். ராணுவம் பெரும் இழப்புகளை சந்தித்தது” – வியோமிகா சிங்.!
May 9, 2025
” பள்ளி மீது தாக்குதல்.., 2 மாணவர்கள் உயிரிழப்பு” – வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி.!
May 9, 2025