மூவலூர் இராமமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித்திட்டத்தின் கீழ் மேற்படிப்பில் சேரும் அனைத்து மாணவிகளுக்கும், மாதம் ரூ.1,000/ வழங்கும் திட்டத்தை தமிழக அரசு அறிவித்திருந்தது. இந்த திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க ஜூலை 10 ஆம் தேதியுடன் அவகாசம் முடிந்த நிலையில் ஜூலை 18 ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. அரசுப் பள்ளிகளில் 6 முதல் 12ஆம் வகுப்பு வரை படித்த மாணவிகளுக்கு உயர் கல்வி உறுதித் திட்டத்தின்கீழ் மாதாமாதம் ரூ.1,000 கல்வி உதவித்தொகை வழங்கப்பட உள்ளது. […]
நாடு முழுவதும் +2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகி பல்கலைக்கழகங்கள்,கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.ஆனால்,சிபிஎஸ்இ +2 தேர்வு முடிவுகள் மட்டும் இன்னும் வெளியாகவில்லை.இதனால்,கல்லூரிகளில் மாணவர்கள் சேருவதற்கு சிரமம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில்,சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் வெளியாகும் முன்னரே மாணவர் சேர்க்கையை முடித்து கொள்ளக்கூடாது என பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) அறிவித்துள்ளது.அதன்படி,சிபிஎஸ்இ +2 தேர்வு முடிவுகள் வெளியாகாத நிலையில்,நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளுக்கு இவ்வாறு யுஜிசி அறிவுறுத்தியுள்ளது.மேலும், பல்கலைக்கழகங்கள்,கல்லூரிகளில் சேர சிபிஎஸ்இ மாணவர்களுக்கு உரிய கால அவகாசம் […]
இன்று முதல் வரும் ஜூலை 29 ஆம் தேதி வரை சட்டப்படிப்பு சேர்க்கைக்கான ஆன்லைன் பதிவு. தமிழகத்தில் ஐந்தாண்டு சட்டப்படிப்பு சேர்க்கைக்கான ஆன்லைன் பதிவு இன்று முதல் வரும் ஜூலை 29 ஆம் தேதி வரை நடைபெறுகிறது என தமிழ்நாடு அம்பேத்கர் சட்டப்பல்கலைக்கழகம் அறிவிப்பு விடுத்துள்ளது. எனவே,சட்டப்படிப்பு படிக்க விரும்பும் மாணவர்கள் http://tndalu.ac.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று அம்பேத்கர் சட்டப்பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. மேலும்,ஆன்லைன் பதிவு தொடர்பான விபரங்களுக்கு இங்கே http://www.tndalu.ac.in/pdf/2022/july/Notification_for_5_Years_Integrated_Law_Courses2021-2022.pdf பார்வையிடவும்.
கூட்டு நுழைவுத் தேர்வு முதன்மை (JEE Main) 2022 அமர்வு 1 க்கான முடிவுகள் தேசிய தேர்வு நிவனத்தால்(NTA) இன்று காலை அறிவிக்கப்பட்டது. ஜேஇஇ முதன்மை தேர்வு ஜூன் 23 முதல் 29, 2022 வரை 501நகரங்களில் உள்ள தேர்வு மையங்களில் தேர்வு நடத்தப்பட்டது. மேலும் அதன் விடைத்தாள் ஜூலை 2ஆம் தேதி வெளியிடப்பட்டது. தேர்வு எழுதியவர்கள் தங்கள் மதிப்பெண் முடிவுகளளை பின்வரும் இணையதளங்களில் nta.ac.in, ntaresults.nic.in மற்றும் jeemain.nta.nic.in பார்க்கலாம். ஜேஇஇ முதன்மை அமர்வு 1க்கான […]
மூவலூர் ராமாமிர்தம் உயர்கல்வி மேம்பாட்டு திட்டம் மூலம்,பெண்கள் உயர்கல்வி இடைநிற்றலை தடுக்க 12 ஆம் வகுப்பு முடித்த அரசுப் பள்ளி மாணவியர்கள் கல்லூரியில் சேர்ந்து அவர்களின் படிப்பு முடியும் வரை வங்கிக் கணக்கில் மாதம் ஆயிரம் ரூபாய் நேரடியாக செலுத்தப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது. அதன்படி,மாதம் ரூ.1000 பெரும் இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்க முன்னதாக ஜூன் 30 ஆம் தேதி கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்ட நிலையில்,ஜூலை 10 ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது. இந்நிலையில்,மூவலூர் […]
நாடு முழுவதும் உள்ள 546 நகரங்களிலும்,இந்தியாவிற்கு வெளியே உள்ள 14 நகரங்களிலும் அமைந்துள்ள வெவ்வேறு மையங்களில் வருகின்ற ஜூலை 17-ம் தேதி நீட் இளங்கலை(யுஜி) படிப்பில் சேருவதற்கான நுழைவுத்தேர்வு நடைபெற உள்ளது.குறிப்பாக,நீட் யுஜி தேர்வானது தமிழ்,உருது,ஆங்கிலம், இந்தி,மராத்தி,அஸ்ஸாமி,ஒடியா,குஜராத்தி,பெங்காலி,பஞ்சாபி,கன்னடம், தெலுங்கு மற்றும் மலையாளம் உட்பட 13 வெவ்வேறு மொழிகளில் நடைபெறவுள்ளது. இந்த நிலையில்,நீட் யுஜி தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் இன்று முதல் ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.அதன்படி,இன்று காலை 10 மணிக்கு ஹால் […]
481 பொறியியல் கல்லூரிகளுக்கான தரவரிசைப் பட்டியலை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.தரவரிசைப் பட்டியலின்படி,சென்னை கிண்டி,குரோம்பேட்டை பொறியியல் கல்லூரிகள் முதல் இரு இடத்தை பிடித்துள்ளன. இதனைத் தொடர்ந்து,பொறியியல் கலந்தாய்வுக்கு விண்ணப்பித்துள்ள மாணவர்கள் கல்லூரிகளின் தரவரிசைப் பட்டியலை பார்த்து கல்லூரிகளை தேர்வு செய்யலாம் என்று அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. மேலும்,பொறியியல் கல்லூரிகளின் தரவரிசைப் பட்டியலைக் காண https://www.annauniv.edu/pdf/COLLEGE%20RANKING%20BASED%20ON%20PERCEPTION.pdf இங்கே க்ளிக் செய்யவும்.
கோவை:வால்பாறையில் இன்றும்,நாளையும் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து கோவை மாவட்ட ஆட்சியர் உத்தரவு. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக லேசான மழை முதல் கனமழை பெய்து வருகிறது.குறிப்பாக,கோவை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் தொடர் மழை பெய்து வருகிறது. இந்நிலையில்,கனமழை காரணமாக கோவை மாவட்டத்தின் வால்பாறை தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்றும் (ஜுலை 7),நாளையும் விடுமுறை அளிக்கப்படுவதாக கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் அறிவிப்பு விடுத்துள்ளார். மேலும்,தொடர் மழை பெய்து வருவதால் வாகன […]
மேற்கு திசை காற்றின் மாறுபாடு காரணமாக தமிழகத்தின் நீலகிரி,கோவை,தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக மிதமான மழை முதல் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில்,தொடர் கனமழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் உள்ள உதகை,குந்தா,கூடலூர் மற்றும் பந்தலூரில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை வழங்கி அம்மாவட்ட ஆட்சியர் அம்ரித் உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தில் உள்ள 225 பொறியியல் கல்லூரிகளுக்கு அண்ணா பல்கலைக்கழகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.அதில்,தகுதியான ஆசிரியர்கள் மற்றும் போதிய உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாதது குறித்து கல்லூரிகள் இரண்டு வாரத்தில் பதில் அளிக்க வேண்டும் என அண்ணா பல்.கழகம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி,உரிய விளக்கம் தராத கல்லூரிகளுக்கு அங்கீகார நீட்டிப்பு இல்லை என்றும்,மாணவர் சேர்க்கைக்கும் அனுமதி வழங்கப்படாது எனவும் எச்சரித்துள்ளது. தமிழகத்தில் தங்களது கட்டுப்பாட்டின்கீழ் உள்ள 476 பொறியியல் கல்லூரிகளை ஆய்வு செய்த பிறகு அதில் 225 கல்லூரிகளுக்கு இத்தகைய உத்தரவை அண்ணா […]
தமிழகத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு(TET) கடந்த 14-03-2022 முதல் 13-04-2022 வரை, http://www.trb.tn.nic.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தில் விண்ணப்பிக்கலாம் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் முன்னதாக அறிவித்திருந்தது.அதன்படி,இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க ரூ.500 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டது.அதே சமயம்,தாழ்த்தப்பட்டோர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் பழங்குடியினருக்கு தேர்வு கட்டணம் ரூ.250 ஆக நிர்ணயிக்கப்பட்டது. இதனிடையே,சர்வர் கோளாறால் விண்ணப்பிக்கும் கால அவகாசத்தை நீட்டிக்குமாறு ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு தேர்வர்கள் கோரிக்கை விடுத்தனர்.இதனைத் தொடர்ந்து,ஆசிரியர் தேர்வுக்கு விண்ணப்பிக்க கடந்த ஏப்ரல் 26 வரை கால அவகாசம் வழங்கப்பட்டது.அதன்பின்னர்,நடப்பு […]
கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டாறு ஆதிகேசவ பெருமாள் கோவிலின் கும்பாபிஷேகம் இன்று(ஜூலை 6 ஆம் தேதி) நடைபெற்று வருகிறது. இதனை முன்னிட்டு,கல்வி நிறுவனங்கள் மற்றும் மாவட்ட அரசு அலுவலங்களுக்கு இன்று உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.எனினும்,அவசர கால பணிகளுக்காக மட்டும் மாவட்டத்தில் உள்ள தலைமை அலுவலகம் வழக்கம் போல இயங்கும். மேலும்,இன்றைய உள்ளூர் விடுமுறையை ஈடுசெய்யும் விதமாக வருகின்ற ஜூலை 23 ஆம் தேதியன்று சனிக்கிழமை வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பாக அரசாணையையும் தமிழக அரசு வெளியிட்டுள்ளது.திருவட்டாறு ஆதிகேசவ பெருமாள் கோவிலின் கும்பாபிசேகமானது […]
தமிழகத்தில் உள்ள 8 அரசு மற்றும் அரசு உதவிபெறும் பொறியியல் கல்லூரிகளில் 2022-23-ஆம் கல்வியாண்டுக்கான பகுதி நேர பொறியியல் பட்டப் படிப்புக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் அறிவித்துள்ளது.மேலும்,இது தொடர்பாக, தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: “கோவை,சேலம், திருநெல்வேலி மாவட்டங்களில் உள்ள அரசினர் பொறியியல் கல்லூரி மற்றும் காரைக்குடியில் உள்ள அழகப்ப செட்டியார் அரசு பொறியியல் மற்றும் தொழில் நுட்ப கல்லூரி, வேலூரில் தந்தை பெரியார் அரசினர் பொறியியல் கல்லூரி,பர்கூர் […]
நாட்டில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் MBBS,BDS உள்ளிட்ட இளநிலை மருத்துவப் படிப்புகளில் சேர NEET UG தேர்வு நடத்தப்படுகிறது.அதன்படி, 2022-2023-ஆம் கல்வியாண்டுக்கான நீட் தேர்வு ஜூலை 17-ம் தேதி நடைபெற உள்ள நிலையில்,தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு கடந்த ஏப்ரல் 6-ம் தேதி தொடங்கிய நிலையில்,விண்ணப்பிக்கும் அவகாசம் மே 20-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. இந்நிலையில்,ஜூலை 17 ஆம் தேதி திட்டமிட்டப்படி நீட் தேர்வு நடைபெறும் என்று தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.குறிப்பாக,ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதத்திற்கு […]
தமிழக அரசின் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதியுதவி திட்டம் உயர்கல்வி உறுதி திட்டமாக மாற்றப்பட்டுள்ளது. இதனடிப்படையில், 6-ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை அரசுப் பள்ளிகளில் படித்த மாணவிகள் கல்லூரி,பாலிடெக்னிக் அல்லது ஐடிஐயில் சேர்ந்து படிக்கும்போது அவர்களுக்கு மாதம்தோறும் ரூ.1,000 வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது. இதனைத் தொடர்ந்து,தமிழகத்தில் கல்லூரிகள் திறக்கப்பட்டதும் முதலாமாண்டு மாணவிகளுக்கு ரூ.1000 உதவித்தொகை வழங்கப்படும் என்று சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் […]
தமிழகத்தில் கடந்த மே மாதம் 2021-22 ஆம் கல்வியாண்டிற்கான பதினொன்றாம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெற்ற நிலையில்,இந்த பொதுத் தேர்வு முடிவுகளை தற்போது (ஜூன் 27-ஆம் தேதி) அரசு தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ளது.அதன்படி,தேர்வர்கள் http://tnresults.nic.in & http://dge.tn.gov.in என்ற இணைய தளத்தில் தங்களது பதிவு எண் மற்றும் பிறந்த தேதியை பதிவு செய்து தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு முடிவுகள் வெளியான நிலையில்,தமிழகம்,புதுச்சேரியில் 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 90.07% மாணவ,மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.அந்த வகையில்,8,43,675 பேர் தேர்வு எழுதிய […]
தமிழகத்தில் கடந்த மே மாதம் 2021-22 ஆம் கல்வியாண்டிற்கான பதினொன்றாம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெற்ற நிலையில்,இந்த பொதுத் தேர்வு முடிவுகளை தற்போது (ஜூன் 27-ஆம் தேதி) அரசு தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ளது.அதன்படி,தேர்வர்கள் http://tnresults.nic.in & http://dge.tn.gov.in என்ற இணைய தளத்தில் தங்களது பதிவு எண் மற்றும் பிறந்த தேதியை பதிவு செய்து தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம்,தமிழகம்,புதுச்சேரியில் 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 90.07% மாணவ,மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.அந்த வகையில்,8,43,675 பேர் தேர்வு […]
தமிழகத்தில் 11-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியாகும் என அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு. தமிழகத்தில் 10, 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அண்மையில் முன்னர் வெளியிட்டார்.அதன்படி,தமிழகம்,புதுச்சேரியில் 93.76% மாணவ, மாணவிகள் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சியடைந்தனர்.12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய 8,06,277 பேரில் 7,55,998 மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். இதுபோன்று தமிழகம், புதுச்சேரியில் 10-ஆம் வகுப்பில் மொத்தம் 90.7% மாணவ,மாணவிகள் தேர்ச்சி பெற்றனர்.10-வகுப்பு பொதுத்தேர்வை 9,12,620 மாணவர்கள் எழுதிய […]
தமிழகத்தில் 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நாளை வெளியாகும் என அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு. தமிழகத்தில் 10, 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அண்மையில் முன்னர் வெளியிட்டார்.அதன்படி,தமிழகம்,புதுச்சேரியில் 93.76% மாணவ, மாணவிகள் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சியடைந்தனர்.12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய 8,06,277 பேரில் 7,55,998 மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். இதுபோன்று தமிழகம், புதுச்சேரியில் 10-ஆம் வகுப்பில் மொத்தம் 90.7% மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றனர்.10-வகுப்பு பொதுத்தேர்வை 9,12,620 மாணவர்கள் […]
தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் உள்ள 13,331 ஆசிரியர் காலிப்பணியிடங்களை பள்ளி மேலாண்மை குழுக்கள் மூலம் தற்காலிக அடிப்படையில் நியமணம் செய்ய தமிழக பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.அதன்படி,அரசு தொடக்கப்பள்ளிகளில் காலியாக உள்ள 4,989 இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் மாதம் ரூ.7,500 தொகுப்பூதியத்தில் ஜூலை முதல் அடுத்த ஆண்டு ஏப்ரல் வரையிலும்,5,154 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் மாதம் ரூ.10,000 தொகுப்பூதியத்தின் அடிப்படையில் ஜூலை மாதம் முதல் அடுத்த ஆண்டு பிப்ரவரி வரையிலும், 3,188 முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் மாதம் ரூ.12,000 தொகுப்பூதிய […]