நீலகிரி மாவட்டத்தில் பெய்த இடைவிடாத மழை காரணமாக மேட்டுப்பாளையம் அருகே உள்ள பில்லூர் அணைக்கு நீர்வரத்து நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. பில்லூர் அணையின் மொத்த நீர் மட்ட உயரம் 100 அடி ஆகும். நேற்று காலை 6 மணி நிலவரப்படி அணைக்கு வினாடிக்கு 10 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அப்போது அணையின் நீர்மட்டம் 97 அடியாக இருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 10 ஆயிரம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டது. நேரம் செல்லச் செல்ல […]
மேற்கு வாங்காளம் மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகளில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. அம்மாநிலத்தின் பாங்குரா மாவட்டத்தில் கனமழை காரணமாக மின்னல் தாக்கியதில் 4 பேரும், ஹூக்லி மாவட்டத்தில் 3 பேரும் உயிரிழந்துள்ளனர். மேற்கு மித்னாபூர், பிர்பூம் மற்றும் வடக்கு 24 பர்கனாஸ் மாவட்டங்களில் தலா ஒருவர் என மொத்தம் 10 பேர் மின்னலுக்கு` பலியாகியுள்ளனர். மேலும், பலர் மின்னல் தக்கியதில் படுகாயம் அடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கேரளாவில் இந்த ஆண்டு தென்மேற்கு பருவ மழை முன்கூட்டியே தொடங்கியதால் கடந்த 2 வாரங்களாக மாநிலம் முழுவதும் கன மழை பெய்து வருகிறது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழையின் போது அதிக அளவு மழை பொழிவு இருக்கும் என்று வானிலை ஆய்வு மையமும் ஏற்கனவே எச்சரித்து இருந்தது. ஒரே நாளில் 7 முதல் 11 சென்டிமீட்டர் வரை மழை பெய்யும் என்றும் சில இடங்களில் 10 முதல் 12 சென்டிமீட்டர் வரை மிக […]
மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அடர்ந்த வனப்பகுதியில் கோவை குற்றாலம் அருவி உள்ளது. கோவை மாவட்டத்தில் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் இந்த அருவி அமைந்துள்ள வனப் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் அருவியில் கடந்த 3 நாட்களாக அருவியில் வெள்ளம்பெருக் கெடுத்து பாய்கிறது. இதனால் அருவிக்கு சுற்றுலா பயணிகள் செல்ல வனத் துறை தடை விதித்தது. நேற்று பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் அருவிக்கு செல்லும் பாதையில் ஆங்காங்கே மரங்கள் சாய்ந்து விழுந்தன. இன்றும் அங்கு […]
நெல்லை மாவட்டத்தை பொறுத்தவரை களக்காடு மலைப்பகுதியில் உள்ள கொடுமுடியாறு அணைபகுதியில் நேற்று அதிகபட்சமாக 17 சென்டி மீட்டர் மழை பெய்தது. அப்பகுதியில் இன்று காலை வரை 10 செ.மீ. மழை பெய்துள்ளது. பாபநாசம் அணைப்பகுதியில் இன்று காலை வரை 12 சென்டி மீட்டரும், சேர்வலாறு அணை பகுதியில் 5 செ.மீ. மழையும், கருப்பாநதி யில் 8 செ.மீ. மழையும், குண்டாறில் 5 செ.மீ. மழையும் பெய்துள்ளது. மழை காரணமாக அனைத்து அணைகளுக்கும் தண்ணீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் அணைகளின் […]
தென்மேற்கு பருவ மழை தொடங்கியதையொட்டி தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலையையொட்டியுள்ள மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. மேலும் தெற்கு அரபிக் கடல், வங்க கடலில் அதிக காற்று வீசி வருவதால் கடலோர மாவட்டமான ராமநாதபுரம், தூத்துக்குடி, கன்னியாகுமரியில் கடல் சீற்றம் காணப்படுகிறது. ராமநாதபுரம் மாவட்டத்தில் கடல் காற்றின் தாக்கம் அதிகமாக உள்ளதால் தொண்டி, பாம்பன், தங்கச்சிமடம், ராமேசுவரம், தனுஷ்கோடி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த நாட்டுப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 4 நாட்களாக தனுஷ்கோடி […]
டெல்லியில் உள்ள மக்களை கோடைக்கால வெயிலின் தாக்கம் கடந்த 15 நாட்களாக வறுத்து எடுத்து வருகின்றது. இந்நிலையில், இன்று மாலை சுமார் 5 மணியளவில் வானத்தில் கருமேக கூட்டம் திரண்டு பல பகுதிகளை இருளாக்கியது. மேலும், பலத்த சூறைக்காற்றுடன் புழுதிப் புயலும் தாக்கியதால் இதை எதிர்பாராத வாகன ஓட்டிகள் கடும் சிரமத்துக்கு ஆளாகினர். குறிப்பாக, டெல்லியின் முக்கிய பகுதிகளான அக்பர் ரோடு, துவாரகா, ஆர்.கே.புரம் மற்றும் சத்தர்பூர் உள்ளிட்ட பகுதிகளில் மாலை வேளையில் முகப்பு விளக்குகள் ஒளிர […]
சென்னை வானிலை ஆய்வு மையம், தென் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. மாலத்தீவு மற்றும் அதனை ஒட்டியுள்ள குமரிக்கடல் கடற்பகுதியில் நிலவிய குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை அதே இடத்தில் நீடிக்கிறது. இதனால் தென் தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், வட தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களிலும் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. சென்னையை பொறுத்தவரை அதிகபட்சமாக 36 […]
வானிலையை சீராக வைப்பதற்கு உரிய வழிமுறைகள் குறித்து, விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக உலக வானிலை தினம் மார்ச் 23ம் தேதி கொண்டாடப்படுகிறது. “வாழ்க்கையையும் பொருட்களையும் பாதுகாக்க வானிலையை கண்காணிப்போம்’ என்பது இந்தாண்டு இதன் மையக்கருத்தாக உள்ளது. தற்போதைய காலநிலை மாற்றம் மற்றும் வெப்பமயமாதலால் மனிதர்கள் மட்டுமின்றி,மற்ற உயிரினங்களுக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. இது இன்றைய தலைமுறைக்கு, சவாலாக திகழ்கிறது… தொழிற்சாலைகள் வெளியிடும் கார்பன்-டை-ஆக்சைடின் அளவு அதிகரிப்பதால், சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது. ஓசோன் பாதிப்புக்குள்ளாகி, பூமியில் வெப்பம் அதிகரிக்கிறது இதில் வளரும் […]
கோவில்பட்டி பகுதியில் கடந்த சில நாள்களாக அவ்வப்போது லேசான சாரல் மழை பெய்து வந்தது. இன்று காலையில் பலத்த வெயில் அடித்தாலும், மதியத்திற்கு மேலாக வானம் மேகமூட்டத்துடன் இருள் சூழ்ந்து காணப்பட்டது. தொடர்ந்து பலத்த இடி,மின்னலுடன் மழை பெய்ய தொடங்கியது.தொடர்ந்து சுமார் 1மணி நேரத்திற்கு மேலாக மழை பெய்ததது. இந்த மழையினால் கோவில்பட்டி புதுரோடு, மார்க்கெட் சாலைகளில் மழைநீர் வெள்ளபோன்று போனதால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்திற்குள்ளாகினர்.