கனமழை காரணமாக மதுரை,நாமக்கலில் ஏற்கனவே விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில்,தற்போது விருதுநகர் மாவட்டத்திலும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில்,தமிழகத்தில் கடந்த வாரம் கனமழை வெளுத்து வாங்கியது.இதனால்,சாலைகள்,வீடுகள் என மழைநீர் புகுந்து மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பது. இதன்காரணமாக பள்ளிகள்,கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. இந்நிலையில்,இன்று காலை முதல் பெய்து வரும் கனமழை காரணமாக விருதுநகர் மாவட்டதில் அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே,மதுரை,நாமக்கலில் விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில்,தற்போது விருதுநகர் மாவட்டத்திலும் விடுமுறை அறிவிக்கப்பட்டதையடுத்து,தமிழகத்தில் இன்று […]
காற்று மாசு காரணமாக ஹரியானாவில் 4 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தலைநகர் டெல்லியில் காற்று மாசு அதிகரிப்பு காரணமாக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் டெல்லியில் மட்டுமல்லாமல் பஞ்சாப், ஹரியானா ஆகிய மாநிலங்களிலும் காற்று மாசு அதிகரித்து காணப்படுகிறது. இதனை அடுத்து ஹரியானா மாநிலத்தில் உள்ள குருகிராம், சோனிபட், பரிதாபாத் மற்றும் ஜஜ்ஜார் ஆகிய 4 மாவட்டங்களிலும் உள்ள பள்ளிகளை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மறு அறிவிப்பு வரும் வரை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக […]
M.Phil., Ph.D., இறுதியாண்டு பயிலும் மாணவர்கள் ஆய்வுக்கட்டுரைகளை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி 2022ம் ஆண்டு ஜூன் 30 வரை நீட்டிப்பு. இதுகுறித்து யுஜிசி வெளியிட்டுள்ள அறிக்கையில், எம்ஃபில் மற்றும் பிஎச்டி படிக்கும் மாணவர்களுக்கான ஆய்வுக் கட்டுரை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதியை நீட்டித்துள்ளது. தேதி நீட்டிக்கப்பட்ட பிறகு, இப்போது ஆய்வறிக்கையை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி அடுத்த ஆண்டு ஜூன் 30, 2022 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை யுஜிசி செயலாளர் ரஜ்னிஷ் ஜெயின் பொது அறிவிப்பை வெளியிட்டு தெரிவித்துள்ளார். […]
பெற்றோரை இழந்த பள்ளி மாணவர்களுக்கு ரூ.75,000 நிதியுதவி வழங்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. நிரந்தர முடக்கம் அடைந்த பெற்றோர்,விபத்தில் இறந்த தாய் அல்லது தந்தை உள்ளிட்ட பெற்றோரை இழந்த பள்ளி மாணவ,மாணவிகளின் கல்வி பராமரிப்பு செலவுகளுக்கு ரூ.75,000 நிதியுதவி வழங்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. மேலும்,இந்த உதவித்தொகையப் பெற மாணவர்கள் தாங்கள் பயிலும் பள்ளிகள் மூலமாக விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவித்துள்ளது. குறிப்பாக,இத்திட்டத்தில் பயனடையும் மாணவ – மாணவியர் தற்போது வேறு பள்ளியில் சேர்க்கப்பட்டு கல்வி பயின்றால், தற்போது […]
பொதுத்தேர்வு வினாத்தாளில் குஜராத்தில் நடந்த கலவரம் பற்றி கேள்வி கேட்கப்பட்டதற்கு சிபிஎஸ்இ கண்டனம் தெரிவித்துள்ளது. கொரோனா பரவல் காரணமாக நடப்பு கல்வியாண்டில் சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வுகள் 2 பருவங்களாக நடத்தப்படும் என சிபிஎஸ்இ வாரியம் அறிவித்திருந்தது. அதன்படி முதல் பருவத் தேர்வு நவம்பர் -டிசம்பர் மாதத்திலும், 2-ஆம் பருவத் தேர்வு மார்ச் – ஏப்ரல் மாதத்திலும் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு வரும் 30-ம் தேதி தொடங்கி டிசம்பர் […]
தூத்துக்குடி வட்டம் (தாலுகா) மற்றும் மாநகராட்சிக்கு உட்பட்ட பள்ளிகளுக்கு விடுமுறை கனமழை காரணமாக தூத்துக்குடி வட்டம் (தாலுகா) மற்றும் மாநகராட்சிக்கு உட்பட்ட பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் செந்தில்ராஜ் அறிவித்துள்ளார்.
ஜனவரி, மார்ச் மாதங்களில் பருவத் தேர்வுகள் நடத்தப்படும் -அமைச்சர் அன்பில் மகேஷ் தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்த நிலையில், கடந்த சில வாரங்களாக தான் நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. மாணவர்கள் படிக்க ஏதுவாக பாடத்திட்டங்களும் குறைக்கப்பட்டிருந்தன. இதற்கிடையில் பருவமழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது. இதனால், பாடத்திட்டங்கள் குறைக்கப்படுமா..? அல்லது தேர்வுகள் ஒத்திவைக்கப்படுமா..? என்ற கேள்விகள் எழுந்துள்ளது. இந்நிலையில், இன்று செய்தியாளர்களிடம் பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், தமிழக அரசு ஏற்கனவே முடிவு […]
சிவகங்கை மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர் கனமழை மற்றும் மழை பாதிப்பு காரணமாக இன்று நெல்லை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, தேனி, கடலூர், ராமநாதபுரம் மற்றும் திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தூத்துக்குடி, திருவள்ளூர், மதுரை ஆகிய மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு முன்னதாக விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தற்பொழுதும் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கும் இன்று விடுமுறை அறிவித்து அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
கனமழை காரணமாக இன்று கீழ்க்கண்ட 8 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், பல மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால், பல மாவட்டங்களில் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ள நிலையில், வீடுகளுக்குள்ளும் மழைநீர் புகுந்துள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரும் பாதிப்புக்குள்ளாகி உள்ளது.மேலும்,சாலைகளில் தண்ணீர் தேங்கியுள்ளதால் பள்ளிகள்,கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்களுக்கு சிரமம் ஏற்பட்டுள்ளது. இதனால், பல மாவட்டங்களில் தொடர்ந்து பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு வருகிறது.அந்த வகையில்,கனமழை […]
கனமழை காரணமாக இன்று கீழ்க்கண்ட இரண்டு மாவட்டங்களில் பள்ளி,கல்லூரிகளுக்கும்,3 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், பல மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால், பல மாவட்டங்களில் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ள நிலையில், வீடுகளுக்குள்ளும் மழைநீர் புகுந்துள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரும் பாதிப்புக்குள்ளாகி உள்ளது. இதனால், பல மாவட்டங்களில் தொடர்ந்து பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு வருகிறது.அந்த வகையில், கனமழை காரணமாக,இன்று தூத்துக்குடி, திருவள்ளூர் […]
ஒமிக்ரான் பரவல் அச்சுறுத்தலால் தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு காலவரையற்ற விடுமுறை என்ற தகவல் தவறானது. கொரோனா வைரஸ் கடந்த ஒன்றை ஆண்டுகளாக உலகம் முழுவதும் பரவி மக்களை பெரும் அச்சுறுத்தி வந்த நிலையில், தற்பொழுது குறைந்து வருகிறது. இதற்கிடையில் கடந்த வாரம் தென் ஆப்பிரிக்காவில் உருமாறிய புதிய வகை கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டு உள்ளது. இந்த வைரஸ் இது வேகமாகப் பரவலாம் என்றும் இதுவரை வந்த திரிபுகளில் இது மிகவும் ஆபத்தானதாக இருக்கக்கூடும். இந்தப் புதிய வகை […]
டெல்லியில் இன்று முதல் அனைத்து பள்ளிகளும் திறக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக கடந்த பல மாதங்களாக அடைக்கப்பட்டிருந்த பள்ளிகள் கடந்த சில மாதங்களுக்கு முன்புதான் ஒவ்வொரு மாநிலங்களிலும் திறக்கப்பட்டு வந்தது. அந்த வகையில் தலைநகர் டெல்லியிலும் கடந்த நவம்பர் 1-ஆம் தேதி முதல் அனைத்து பள்ளிகளும் கொரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகளை பின்பற்றி திறக்கப்பட்ட நிலையில், டெல்லியில் காற்று மாசு அதிகரித்ததன் காரணமாக சாலைகளில் பொதுமக்கள் நடமாட முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. எனவே அடுத்த அறிவிப்பு […]
புதுச்சேரி மற்றும் காரைக்காலில் இரண்டு நாட்கள் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகம், ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் தொடர் கனமழை பெய்து வருகிறது. இதனால் ஆங்காங்கு உள்ள நிலவரத்தின்படி மாவட்ட ஆட்சியர்கள் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து வருகின்றனர். அந்த வகையில் தமிழகத்தில் 6 மாவட்டங்களில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து புதுச்சேரி மற்றும் காரைக்காலிலும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை மற்றும் […]
காஞ்சிபுரத்தில் நாளை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கனமழை காரணமாக சாலைகளிலும், தாழ்வான பகுதிகளிலும் வெள்ள நீர் தேங்கி காணப்படுகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, பள்ளி செல்லும் மாணவர்களுக்கு சிரமம் உள்ளதால் சில மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் ஏற்கனவே, தூத்துக்குடி, நெல்லை, செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. திருவாரூரில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தற்பொழுதும் காஞ்சிபுரத்தில் […]
தொடர் மழை காரணமாக திருவாரூரில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் பருவமழை காரணமாக பல்வேறு மாவட்டங்களிலும் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. எனவே சாலைகளில் வெள்ளநீர் தேங்கி உள்ளதால் பள்ளி செல்லும் மாணவர்களுக்கு சிரமம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக சில மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் நாளை திருவாரூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக தூத்துக்குடி, நெல்லை மற்றும் செங்கல்பட்டில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை […]
இன்று நடைபெறவிருந்த உத்தரப்பிரதேச ஆசிரியர் தகுதித் தேர்வு (UPTET) தேர்வு தாள் கசிவு காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. உத்தரப் பிரதேசத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதாவது நவம்பர் 28ஆம் தேதி நடைபெற இருந்த UPTET தேர்வு தாள் கசிவு காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. வினாத்தாள் வாட்ஸ்அப்பில் கசிந்துள்ளது. இதனால், இரண்டு ஷிப்ட்டுகளில் நடைபெறவிருந்த ஆசிரியர் தகுதித் தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. முதல் ஷிப்ட காலை 10 மணி முதல் 12:30 மணி வரை 2554 மையங்களிலும், 2-ஆம் ஷிப்ட் […]
தொலைதூரக் கல்வியில் பி.ஏ.,எம்.ஏ.,பி.காம். உள்ளிட்ட படிப்புகளுக்கு விண்ணப்பிக்கும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு 100% கட்டணம் இலவசம் என்றும் புதுவைப் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. தொலைதூரக் கல்வியில் பி.ஏ.,எம்.ஏ.,பி.காம்.,எம்.பி.ஏ உள்ளிட்ட (B.A,M.A,BBA, MBA) படிப்புகளில் சேர மாணவர்களிடம் இருந்து புதுவைப் பல்கலைக்கழகம் விண்ணப்பங்களை வரவேற்றுள்ளது. அதன்படி, https://dde.pondiuni.edu.in/notifications/admissions-2021-22-apply-online/ என்ற இணையதளத்தில் டிசம்பர் 15 வரை மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்றும்,அவ்வாறு விண்ணப்பிக்கும் மாணவர்களில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு 100% கட்டணம் இலவசம் என்றும் புதுவைப் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. அதைப்போல,3 ஆம் பாலினத்தவர்கள்,கணவனை இழந்தவர்கள், கைதிகள், ராணுவத்தினர், […]
சிபிஎஸ்இ தேர்வு நடத்துவது பற்றி பள்ளியே முடிவு செய்யலாம் என சிபிஎஸ்இ நிர்வாகம் அறிவித்துள்ளது. கொரோனா பரவல் காரணமாக நடப்பு கல்வியாண்டில் சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வுகள் 2 பருவங்களாக நடத்தப்படும் என சிபிஎஸ்இ வாரியம் அறிவித்திருந்தது. அதன்படி முதல் பருவத் தேர்வு நவம்பர் -டிசம்பர் மாதத்திலும், 2-ஆம் பருவத் தேர்வு மார்ச் – ஏப்ரல் மாதத்திலும் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு வரும் 30-ம் தேதி தொடங்கி டிசம்பர் […]
நாளை 9 மாவட்டங்களுக்கு பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக பல்வேறு மாவட்டங்களிலும் தொடர்ச்சியாக கனமழை பெய்து வருகிறது. இதனால், பெரம்பலூர், காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே தூத்துக்குடி, திருவாரூர், புதுக்கோட்டை, நெல்லை, அரியலூர் மற்றும் நாகை ஆகிய மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
நாளை 6 மாவட்டங்களுக்கு பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக பல்வேறு மாவட்டங்களிலும் தொடர்ச்சியாக கனமழை பெய்து வருகிறது. இதனால், இன்று 18 மாவட்டங்களில் பள்ளிகள், கல்லூரிகளுக்கும், 9 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், பல மாவட்டங்களில் தொடர் மழை பெய்து வரும் நிலையில் அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து வருகின்றனர். அந்த வகையில் நாளை தூத்துக்குடி, திருவாரூர் மற்றும் புதுக்கோட்டை ஆகிய […]