12-ஆம் வகுப்பு போதும்! சத்யஜித் ரே திரைப்பட நிறுவனத்தில் மத்திய அரசு வேலை ..!

Sathyajith Ray Film Recruitment 2024

சத்யஜித் ரே நிறுவனம் : சத்யஜித் ரே திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி (SRFTI) நிறுவனம் சார்பாக திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி நிறுவனம் இந்த ஆண்டுக்கான (2024) பல்வேறு மத்திய அரசு பதிவளுக்காக பணிபுரிய காலியாக உள்ள இடங்களை அறிவித்துள்ளனர்.

அதன்படி இந்த பணிக்கான கல்வி தகுதி, சம்பளம், வயது வரம்பு, விண்ணப்பிக்கும் முறை, தேர்ந்தெடுக்கும் முறை போன்றவற்றின் முழு தகவல்களையும் கீழே கண்டு தெரிந்து கொள்ளலாம்.

முக்கிய தேதிகள் :

விண்ணப்பிக்க தொடங்கிய தேதி 28-07-2024
விண்ணப்பிக்க கடைசி தேதி 09-09-2024

காலியிட விவரங்கள் :

  • அனிமேட்டர், மேல் பிரிவு எழுத்தர், கேமரா உதவியாளர், திட்ட உதவியாளர், விளக்கு உதவியாளர், கீழ் பிரிவு எழுத்தர் போன்ற பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.

கல்வி தகுதி :

  • மேற்கண்ட பணிகளுக்கு அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் சம்மந்தப்பட்ட பாடப்பிரிவில் மெட்ரிகுலேஷன், 12-ம் வகுப்பு, நுண்கலை பட்டம், 3டி அனிமேஷன் மென்பொருள் மற்றும் கணினி கிராபிக்ஸ்ஸில் டிப்ளமோ போன்ற ஏதேனும் ஒரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம் : 

  • இந்த பணிகளுக்கு தேர்வாகும் தகுதி மற்றும் விருப்பம் உடைய விண்ணப்பதாரர்களுக்கு மாத ஊதியமாக ரூ.19,900 முதல் ரூ.1,42,400 வரை வழங்கப்படும்.

வயது வரம்பு & வயது தளர்வு :

  • இந்த பணிகளுக்காக விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு 27 வயதுக்கு மேல் இருத்தல் கூடாது.
வயது வரம்பு
OBC 03 ஆண்டுகள்
SC / ST 05 ஆண்டுகள்
PwBD (Gen/ EWS) 10 ஆண்டுகள்
PwBD (OBC) 13 ஆண்டுகள்
முன்னாள் படைவீரர்கள் அரசாங்க கொள்கையின்படி
PWD (SC/ST) 15 ஆண்டுகள்

தேர்ந்தெடுக்கும் முறை :

  • எழுத்துத் தேர்வு, டிரேட் தேர்வு மற்றும் நேர்காணல் மூலமாக தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்கள்.

விண்ணப்பக்கட்டணம் :

அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் ரூ.1200
SC, ST, PWD & பெண்கள் கட்டணம் இல்லை
  • இந்த பணிகளுக்காக  பதிவு செய்வதற்கு அதற்கான கட்டணத்தை  ஆன்லைன் மூலமாகவே கட்ட வேண்டும் என அறிவிப்பில் அறிவித்துள்ளனர்.

விண்ணப்பிக்கும் முகவரி :

சத்யஜித் ரே திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி நிறுவனம், பைபாஸ் சாலை, பஞ்சாசயர், கொல்கத்தா-700094 என்ற முகவரிக்கு விண்ணப்பங்களை தபால் மூலம் அனுப்ப வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை :

  • சத்யஜித் ரே நிறுவனத்தில் அறிவிக்கப்பட்ட இந்த அறிவிப்பை இணையத்தில் தெரிந்து கொள்ள அதிகாரப்பூர்வ இணையதளமான  https://srfti.ac.in/ -ஐ கிளிக் செய்து தெரிந்து கொள்ளலாம்.
  • பின் அறிவிக்கப்பட்டுள்ள இந்த பணிகளுக்கான முழு விவரத்தையும் தெரிந்து கொள்வதற்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணவும் PDF -ஐ பதிவிறக்கம் செய்து தெரிந்து கொள்ளலாம்.
  • மேலும், இப்பணிக்கு ஆன்லைனில் பதிவு செய்வதற்கு இங்கே கிளிக் செய்து விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
  • அத்துடன் அதிகாரப்பூர்வ விண்ணப்பத்தை பிரிண்ட் அவுட் எடுத்து அதை பூர்த்தி செய்து.
  • அதில் கேட்கப்பட்டுள்ள ஆவணங்களை இணைத்து மேற்கண்ட முகவரிக்கு வரும் 09-09-2024-க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்