RITES [Image Source : Studycafe]
இரயில் இந்தியா தொழில்நுட்ப மற்றும் பொருளாதார சேவை (RITES) நிறுவனம் வேலைவாய்ப்புக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
ஒரு மினி ரத்னா மத்திய பொதுத் துறை நிறுவனமானது இந்திய அரசின் ரயில்வே அமைச்சகத்தின் கீழ், ஏப்ரல் 26, 1974 இல் இணைக்கப்பட்டது. இது ஒரு பல்துறை பொறியியல் மற்றும் ஆலோசனை நிறுவனமாகும். இது கருத்து முதல் ஆணையிடுதல் வரை அனைத்து அம்சங்களிலும் விரிவான சேவைகளை வழங்குகிறது.
இந்த RITES நிறுவனம், கீழே குறிப்பிடப்பட்டுள்ள பணியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான தகுதி மற்றும் ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்களை வரவேற்கிறது.
பதவியின் விவரம்:
RITES நிறுவனம், பட்டதாரி பொறியாளர் பயிற்சி (சிவில் இன்ஜினியரிங்) பணியில் காலியாக உள்ள 20 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள் நிறுவனம் வெளியிட்டுள்ள Notification அதிகாரப்பூர்வ அறிவிப்பை படித்தவிட்டு விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு:
பட்டதாரி பொறியாளர் பயிற்சி (சிவில் இன்ஜினியரிங்) பணிக்கு விண்ணப்பிப்பவர் 21 முதல் 30 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும். வயது தளர்வு குறித்த விவரங்களுக்கு Notification அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.
தகுதி:
விண்ணப்பதாரர் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இருந்து சிவில் இன்ஜினியரிங்கில் முழுநேர இளங்கலைப் பட்டம் அல்லது அதற்கு இணையான தகுதி பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பக்கட்டணம்:
பொது/ஓபிசி விண்ணப்பதாரர்கள் கட்டணமாக ரூ.600 செலுத்த வேண்டும். EWS/எஸ்சி/எஸ்டி/ PWD வேட்பாளர்கள் விண்ணப்பதாரர்கள் கட்டணமாக ரூ.300 செலுத்த வேண்டும்.
தேர்வு முறை மற்றும் சம்பள விவரம்:
பட்டதாரி பொறியாளர் பயிற்சி பணிக்கான தேர்வு GATE மதிப்பெண் 2023 மற்றும் நேர்காணல் முறைப்படி நடைபெறும். தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் 2 மாதங்களுக்கு பயிற்சியில் ஈடுபடுவார்கள். பயிற்சிக் காலம் முடிந்ததும், விண்ணப்பதாரருக்கு மாதம் ரூ.40,000 முதல் ரூ.1,40,000 வரை சம்பளமாக வழங்கப்படும்.
கடைசி தேதி:
விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பத்தை பதிவு செய்ய வேண்டிய கடைசி தேதி ஜூன் 30 ஆகும். அதனை தாண்டி அனுப்பப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.
டெக்சாஸ் : அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தின் தென்-மத்திய பிராந்தியத்தில் உள்ள கெர் கவுண்டியில் கனமழை பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. டெக்சாஸ்…
கோவை : 2026 தேர்தலுக்காக இன்னும் சற்று நேரத்தில் இபிஎஸ் தனது சுற்றுப்பயணத்தை தொடங்க உள்ளார். இன்று (ஜூலை 7,…
சென்னை : தமிழ்நாடு பிரீமியர் லீக் (TNPL) 2025 தொடரை சாய் கிஷோர் தலைமையிலான திருப்பூர் தமிழன்ஸ் அணி வென்றது.…
சென்னை : தமிழ்நாடு முழுவதும் பல்வேறு துறைகளின்கீழ் செயல்பட்டு வரும், ஏழை மாணவர்களுக்கான பள்ளி மற்றும் கல்லூரி விடுதிகள் இனி…
சென்னை : தமிழகத்தில் 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டத்திற்கான விண்ணப்பம் மற்றும் தகவல் கையேடு வழங்கும் பணி இன்று (ஜூலை 07,…
பர்மிங்ஹாம் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபேற்று வந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்தியா 336 ரன்கள்…