PSPCL [file image]
PSPCL பஞ்சாப் மாநில பவர் கார்ப்பரேஷன் லிமிடெட் (PSPCL) தற்போது உதவி துணை நிலைய உதவியாளர் (Assistant Sub-Station Attendant) மற்றும் டெஸ்ட் மெக்கானிக் (Test Mechanic) ஆகிய பதவியின் வேலைவாய்ப்புக்கான அறிவிப்பை வெளியீட்டு இருக்கிறது. இந்த வேலையில் சேர என்னென்ன தகுதி வேண்டும் எப்படி விண்ணப்பிப்பது என்பதற்கான விவரம் கீழே விவரமாக கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த உதவி துணை நிலைய உதவியாளர் (Assistant Sub-Station Attendant) மற்றும் டெஸ்ட் மெக்கானிக் (Test Mechanic) ஆகிய பணியில் வேலைக்கு சேர மொத்தமாக 433 காலியிடங்கள் உள்ளது. உதவி துணை நிலைய உதவியாளர் பணிக்கு 408 இடங்களும், டெஸ்ட் மெக்கானிக் பணிக்கு 25 காலியிடங்கள் உள்ளது.
(Assistant Sub-Station Attendant) – பணிக்கு
(Test Mechanic) – பணிக்கு
இந்த பணியில் வேலைக்கு சேர விரும்பி விண்ணப்பிக்கும் விண்ணப்ப தாரர்களில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் பணியமர்த்தப்பட்டு அவர்களுக்கு சம்பளமாக மாதம் 19,900 வழங்கப்படும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், வேலையில் சேர விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்களின் வயது 18 வயதில் இருந்து 37 வயதிற்குள் இருக்கவேண்டும். அப்படி இருந்தால் மட்டுமே நீங்கள் இந்த பணிக்கு விண்ணப்பம் செய்யமுடியும்.
இந்த பணியில் வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு கடந்த கடந்த பிப்ரவரி 29-ஆம் தேதி வெளிவந்தது. மார்ச் 5-ஆம் தேதி முதல் விண்ணப்பம் தொடங்கியது. மார்ச் 26 -ஆம் தேதி இந்த பணியில் சேர கடைசி தேதி எனவும் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த பணியில் சேர விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான https://www.pspcl.in/ க்கு சென்று அதில் கொடுக்கப்பட்டு இருக்கும் “ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்” இணைப்பைக் கிளிக் செய்யவும். பிறகு ஒரு படிவம் வரும் அந்த படிவத்தை கிளிக் செய்து அதில் கொடுக்கப்பட்டு இருக்கும் விவரத்தை உங்களுடைய சரியான ஆவணங்களை வைத்து நிரப்பவேண்டும். நிரப்பிவிட்டு நீங்கள் நிரப்பியது சரியானதா என்று பார்க்கவேண்டும். விண்ணப்பதாரர்கள் விண்ணப்பப் படிவத்தை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி அல்லது அதற்கு முன் சமர்ப்பிக்க வேண்டும்.
மேலும் தகவலை தெரிந்து கொள்ள இந்த PDF-யை பார்வையிடவும்.
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…