apple halwa [File Image]
தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் மருத்துவரை அணுகத் தேவையில்லை என்பது நாம் அனைவரும் அறிந்து கொண்ட ஒன்று. ஆப்பிளை நாம் ஜூஸாகவும் முழு பழமாகவும் அல்லது வேகவைத்தும் சாப்பிட்டு பழகியிருப்போம். ஆனால் குழந்தைகளுக்கு இதே வகையில் கொடுத்தால் சாப்பிட மாட்டார்கள். நாம் ஒரு புதுமையான முறையில் செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். அந்த வகையில் நாம் இன்று ஆப்பிளை வைத்து அசத்தலான அல்வா எப்படி செய்வது என்பதை பார்ப்போம்.
தேவையான பொருள்கள் :
ஆப்பிள்- 2
சோள மாவு – 3ஸ்பூன்
நெய் – 5ஸ்பூன்
முந்திரி -10
சர்க்கரை -1/2 கப்
செய்முறை:
ஆப்பிளை தோல் நீக்கி அல்லது சுடு தண்ணீரில் கழுவி அரைத்து கொள்ளவும். பிறகு ஒரு பாத்திரத்தில் நெய் ஊற்றி முந்திரியை வறுத்து எடுத்துக் கொள்ளவும். அந்த நெய்யிலே அரைத்த ஆப்பிளை ஊற்றி மிதமான தீயில் தண்ணீர் வற்றும் வரை கிளறவும்.
ஒரு கப்பில் சோளமாவை கரைத்து அதிலே ஊற்றி கைவிடாமல் ஒரு ஐந்து நிமிடம் கிளறவும். பின்பு அரை கப் சர்க்கரையும் சேர்த்து அல்வா பதம் வரும் வரை கிளறவும். பெண் அதிலே முந்திரியை தூவி இறக்கவும். இப்போது அட்டகாசமான தித்திப்பான ஆப்பிள் அல்வா ரெடி.
சத்துக்கள்:
விட்டமின் ஏ , விட்டமின் சி , விட்டமின் ஈ , விட்டமின் பி1,பி2, நார்ச்சத்து, புரதம், இரும்புச்சத்து சோடியம் பொட்டாசியம், பாஸ்பேட்,பெக்டின், சர்க்கரை மற்றும் மேலே கியூரிக் அமிலம், மாலிக் அமிலம்,மாவுச்சத்து போன்றவை நிறைந்து காணப்படுகிறது.
இதில் உள்ள இரும்புச் சத்தை உடல் எளிதில் கிரகித்துக் கொள்ளும்.
பயன்கள்:
பக்க விளைவுகள் :
ஆப்பிளை நாம் அதிக அளவு எடுத்துக் கொள்ளும் போது அதில் உள்ள கார்பன் டை ஆக்சைடு கொழுப்பாக மாறுகிறது. இது ரத்தத்தில் சர்க்கரையின் அளவை அதிகரிக்கிறது. மேலும் உடல் எடையையும் அதிகரிக்கும். நீரிழிவு நோயாளிகள் மிகக் குறைந்த அளவே எடுத்துக்கொள்ள வேண்டும்.
பூச்சிக்கொல்லி மருந்து மற்றும் நிக்கல் போன்ற மெழுகு பூசப்படுவதால் புற்றுநோயை உருவாக்கும். ஆப்பிளை நாம் பயன்படுத்தும் போது தோலை சீவி விட்டு பயன்படுத்த வேண்டும். ஆப்பிள் விதைகளில் சைனைட் போன்ற நச்சு இருப்பதால் விதைகளை தவிர்ப்பது நல்லது. ஆகவே நாம் அளவோடு பயன்படுத்தி ஆரோக்கியத்தை பெறுவோம்.
சென்னை : சினிமாவில் பொதுவாகவே ஒரு நடிகர் நடிக்கும் படங்கள் பெரிய வெற்றியை பெற்றுவிட்டது என்றாலே அவர்கள் அடுத்ததாக நடிக்கும் படங்களின்…
சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்…
பஞ்சாப் : இந்தியா vs பாகிஸ்தான் போர் நின்றாலும் இன்னும் இந்த தலைப்பு தான் உலக அளவில் ஹாட் டாப்பிக்கான…
பஞ்சாப் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த மே 8-ஆம் தேதி இந்தியா-பாகிஸ்தான் இடையேயான…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த…