மஞ்சிஷ்டா மூலிகையின் அசத்தலான அழகு குறிப்புகள்..!
மஞ்சிஸ்டா மூலிகை பொடியை வைத்து முகப்பரு ,கரும்புள்ளி மறையை செய்து முக பொலிவை அதிகரிப்பது எப்படி என பார்க்கலாம் .

மஞ்சிஸ்டா மூலிகை பொடியை வைத்து முகப்பரு ,கரும்புள்ளி மறையை செய்து முக பொலிவை அதிகரிப்பது எப்படி என பார்க்கலாம் .
சென்னை :நம்முடைய முகம் தான் நம் எண்ணங்களின் பிரதிபலிப்பு கண்ணாடி என்பார்கள். முகத்தோற்றம் என்பது நமக்கு அழகை தருவதோடு மட்டுமல்லாமல் மற்றவர்களின் பார்வைக்கு ஒரு நேர்மறையான எண்ணங்களையும் வெளிப்படுத்துகிறது .அந்த வகையில் சரும பாதுகாப்பையில் ஆயுர்வேத மூலிகையான மஞ்சிஸ்டா முக்கிய பங்கு வகிக்கிறது. மஞ்சிஸ்டா சருமத்திற்கு அழகு சேர்ப்பதோடு ஆரோக்கியத்திற்கும் உதவுகிறது.
மஞ்சிஸ்டாவின் ஆரோக்கிய நன்மைகள் :
மஞ்சிஸ்டா தமிழில் மஞ்சட்டி என அழைக்கப்படுகிறது .இது பார்ப்பதற்கு மர குச்சிகளை போல் காணப்படும் .இதனை முகத்திற்கு சந்தனம் போல் குலைத்து முகத்தில் தடவி வர வேண்டும். தற்போது இதன் பயன்கள் கருதி இதனைக் கொண்டு ஆயில் மற்றும் சோப் தயாரிக்கப்பட்டு பயன்படுத்த பட்டு வருகிறது. மேலும் இது பாரம்பரியமாக பயன்படுத்தப்பட்ட ஒரு அழகு சாதன மூலிகை பொருளாகவும் சொல்லப்படுகிறது.
மஞ்சிஸ்டா அதிக அளவு ஆன்ட்டி பாக்டீரியல் மட்டும் ஆன்ட்டி இன்ஃப்ளமேட்டரி பண்புகளை கொண்டுள்ளது. இது முகப்பொலிவை மட்டுமல்லாமல் இறந்த செல்களையும் நீக்குகிறது. ரத்தத்தை தூய்மைப்படுத்துவதற்கும் உதவுவதாக ஆயுர்வேத மருத்துவர்கள் கூறுகின்றனர்.
சொரியாசிஸ் மற்றும் எக்ஸீமா போன்ற சரும வியாதி உள்ளவர்கள் அரை ஸ்பூன் மஞ்சிஸ்டா பொடியை வெந்நீரில் கலந்து காலை உணவுக்குப் பிறகு 60 நாட்கள் எடுத்து வருவதன் மூலம் ரத்தம் சுத்தமாகி அரிப்பு குறைந்து நாளடைவில் சொரியாசிஸ் மறைய துவங்கி விடும் என ஆயுர்வேத மருத்துவர்கள் கூறுகின்றனர். மேலும் இது புற்றுநோய் செல்களை உருவாக்கக்கூடிய ப்ரீ ரேடிக்கல்ஸ் செல்களையும் அளிக்கிறது .குறிப்பாக கருப்பை புற்றுநோய் ,கல்லீரல் புற்றுநோய், ஓவேரியன் புற்றுநோய் வருவது தடுக்கப்படுகிறது.
மஞ்சிஸ்டாவின் அழகு குறிப்புகள்:
முதலில் எந்த ஒரு ஃபேஸ் பேக் முகத்திற்கு பயன்படுத்துவதற்கு முன்பும் முகத்திற்கு ஸ்டீமிங் செய்ய வேண்டும் .அதாவது சுடு தண்ணீரில் ஒரு துணியை நனைத்து பிழிந்து அதை முகத்தில் ஒத்தி எடுக்க வேண்டும் .அதன் பிறகு ஃபேஸ் பேக் போடும்பொழுது அதன் பலன் முழுமையாக சருமத்திற்கு கிடைக்கும் என அழகியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.
முக பொலிவு ;
அரை ஸ்பூன் மஞ்சிஸ்டா பவுடர் ,அரை ஸ்பூன் தேன், அரை ஸ்பூன் கஸ்தூரி மஞ்சள் ஆகியவற்றை கலந்து முகத்தில் தடவி 15 நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவி வர வேண்டும் .இதுபோல் தொடர்ந்து செய்து வர முகம் பிரகாசமாக மாறும்.
முக சுருக்கம் ;
பச்சை பயறு பவுடர் ஒரு ஸ்பூன்,மஞ்சிஸ்டா ஒரு ஸ்பூன், மஞ்சள் தூள் அரை ஸ்பூன், ரோஸ் வாட்டர் சேர்த்து கலந்து முகத்தில் தடவி 15 நிமிடங்கள் கழித்து முகம் கழுவி வர சருமத்தில் சுருக்கங்கள் ஏற்படுவது தடுக்கப்படும்.
முகப்பரு;
ஒரு ஸ்பூன் மஞ்சிஸ்டா பவுடரை வெந்நீரில் சேர்த்து குலைத்து முகத்தில் தடவி 20 நிமிடம் கழித்து கழுவி வரவேண்டும். இதுபோல் 30 நாட்கள் தொடர்ந்து செய்து வர கரும்புள்ளிகள் மற்றும் முகப்பரு மறைந்து முகம் கிளியராக காணப்படும்.
லேட்டஸ்ட் செய்திகள்
LIVE : மும்மொழி கொள்கை விவகாரம் முதல்…டெல்லி நிலநடுக்கம் வரை!
February 17, 2025
சோலி முடிஞ்சு.. ரிஷப் பண்ட்டை பதம் பார்த்த ஹர்திக் பாண்டியா பந்து.!
February 17, 2025
மஜாபா..மஜாபா! ஏ.ஆர்.முருகதாஸின் தரமான சம்பவம்! மதராஸி குட்டி டீசர் இதோ!
February 17, 2025
டெல்லியைத் தொடர்ந்து பீகாரிலும் மிதமான நிலநடுக்கம்!
February 17, 2025
வார தொடக்க நாளில் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வு.!
February 17, 2025
அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்பட்ட இந்தியர்கள் – மூன்றாவது விமானம் இந்தியா வந்தடைந்தது.!
February 17, 2025
ஐபிஎல் 2025 : மும்பை இந்தியன்ஸ் அட்டவணை இதோ!
February 17, 2025