Tea [Imagesource : Dailymail]
இன்று குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை பலரும் காபிக்கு அடிமையாகியுள்ளனர் என்று தான் சொல்ல வேண்டும். பெரும்பாலானருக்கு காலை தூங்கி எழுந்தவுடன், காபி குடித்தால் தான் அன்றைய பொழுது விடியும். ஒரு நாளைக்கு நான்கு முதல் ஐந்து முறை காபி குடிக்கின்றனர். தற்போது இந்த பதிவில் காபி குடிப்பதால் ஏற்படும் தீமைகள் பற்றி பார்ப்போம்.
காபியில் அதிகப்படியான காஃபின் உள்ளதால், இது தூக்கமின்மை, பதட்டம் மற்றும் தலைவலி போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும். அதேபோல், கல்லீரல் நோய் உள்ளவர்கள் காஃபின் உட்கொள்வதைக் கட்டுப்படுத்த வேண்டும்.
காபியில் உள்ள காஃபின் வயிற்றுப்போக்கு மற்றும் வயிற்று வலி போன்ற அஜீரணப் பிரச்சனைகளை ஏற்படுத்தும். காஃபின் இரத்த அழுத்தத்தை அதிகரித்து, இதயம் சம்பந்தமான பிரச்னைகளை ஏற்படுத்தும். கர்ப்பிணி மற்றும் தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் அதிக காஃபின் உட்கொள்வதை தவிர்க்க வேண்டும். எண்ணெயால், இது கருச்சிதைவு மற்றும் பிற சிக்கல்களுக்கு வழிவகுக்கும்.
இதையும் படிங்க – Carrot payasam : உங்க வீட்டுல கேரட் இருக்கா..? அப்ப இந்த ரெசிபியை செய்து பாருங்க..!
குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் அதிக காஃபின் உட்கொள்வதை தவிர்ப்பது சிறந்தது. ஏனென்றால், தூக்கமின்மை பிரச்சனைகளை ஏற்படுத்துவதோடு, அதன் வளர்ச்சியையும் பாதிக்கிறது. எனவே குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அளவோடு காபி குடிப்பது மிகவும் நல்லது.
தினமும் இரண்டு கப் காபி குடிப்பது பொதுவாக பாதுகாப்பானது. தூங்கும் நேரத்திற்கு குறைந்தது ஆறு மணி நேரத்திற்கு முன்பு காபி குடிப்பதைத் தவிர்க்கவும். காபி குடிக்கும் பழக்கத்தை மாற்றுவதற்கு தேநீர், பழச்சாறுகள் அல்லது தண்ணீர் போன்ற பிற பானங்களை முயற்சி செய்வது நல்லது.
அகமதாபாத் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில்…
சென்னை : இன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது…
ஈரோடு : பண்ணை வீட்டில் தனியாக இருந்த தம்பதி கொலை செய்யப்பட்டதாக நேற்று இரவு ஈரோடு பகுதி போலீசாருக்கு தகவல்…
நெல்லை : இன்னும் ஒரு வருடத்திற்குள் தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளதால் தற்போதே கூட்டணி குறித்த பேச்சுக்கள் அரசியல்…
மும்பை : WAVES 2025 மாநாடு நேற்று மும்பையில் தொடங்கியது. பிரதமர் நரேந்திர மோடி நேற்று விழாவில் கலந்து கொண்டு…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…