not gaining weight [File Image ]
ஒரு சிலருக்கு எவ்வளவு உணவு எடுத்துக் கொண்டாலும் உடல் எடை அப்படியேதான் இருக்கிறது என்ற கவலையை வேண்டாம் இந்த டிப்ஸ் எல்லாம் நீங்க தொடர்ந்து ஆறு மாதங்கள் பின்பற்றி பாருங்கள் நல்ல முன்னேற்றம் தெரியும்.முதலில் உடல் எடை அதிகரிக்கவில்லை என்றால் உங்கள் குடல் ஆரோக்கியமாக இருக்கிறதா அல்லது குடல் புழுக்கள் எதுவும் இருக்கிறதா என்றும் உடலில் வேறு ஏதேனும் பிரச்சனைகள் உள்ளதா எனவும் கண்டறிய வேண்டும். முதலில் கண்டறிந்து அதனை சரி செய்ய வேண்டும்.
சரியாக சாப்பிடாமல் இருந்தால் குடல் சுருங்கிவிடும். இந்த குடல் சுருக்கத்தை முதலில் சரி செய்ய வேண்டும். காலை எழுந்தவுடன் தண்ணீர் குடிக்கும் பழக்கத்தை தொடர்ந்து 45 நாட்கள் செய்து வர குடல் விரிவடையும் இதனால் நன்கு பசியும் எடுக்கும் நிறைய உணவுகளையும் உட்கொள்ள முடியும். மேலும் உடல் எடையை அறிய அதிகரிக்க வேண்டும் என்று தவறான உணவு பழக்கவழக்கத்தை கையால கூடாது. பீட்சா பர்கர் போன்ற துரித உணவுகளை மேற்கொள்வதை தவிர்க்க வேண்டும்.
உடல் எடை அதிகரிப்பதில் புரோட்டின் முக்கிய பங்காற்றுகிறது இது தசையின் வளர்ச்சிக்கு உதவுகிறது. மேலும் நல்ல கொழுப்பு நிறைந்த உணவுகளை உட்கொள்ள வேண்டும். கார்போஹைட்ரேட் உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
கீரை வகைகளில் குறிப்பாக முருங்கைக் கீரையை வாரத்திற்கு இரு முறை உட்கண்டால் உடல் எடை அதிகரிக்கும்.
மாதுளை பிரியர்களே.! மறந்தும் கூட இந்த நேரத்தில் மாதுளையை சாப்பிடாதீங்க..
பழங்களில் குறிப்பாக வாழைப்பழம் அதிகமாக எடுத்துக் கொள்ள வேண்டும். பாதாம் பருப்பு ஊறவைத்து தினமும் 10 எடுத்துக் கொள்ளலாம் மற்றும் வேர்க்கடலை வேகவைத்து சாப்பிட்டு வரலாம். பால் மற்றும் பால் சார்ந்த பொருட்களான தயிர் பன்னீர் போன்றவற்றை உணவில் அதிகம் எடுத்துக் கொள்ள வேண்டும். தயிரில் ப்ரோபயாட்டிக் அதிகம் உள்ளதால் நல்ல செரிமானத்தை தூண்டும் இதனால் நல்ல பசி ஏற்படும். பேரிச்சம் பழத்தை இரவில் தூங்கும் முன் தேனிலோ அல்லது நல்லெண்ணெயில் ஊற வைத்து நான்கு வீதம் தினமும் எடுத்துக்கொள்ள வேண்டும்.
பயிறு வகைகளில் கருப்பு சுண்டல் வகைகளை இரவில் ஊற வைத்து காலை வெறும் வயிற்றில் பச்சையாகவோ அல்லது வேக வைத்தோ எடுத்துக் கொள்ளலாம்.
காய்ச்சாத பசும் பாலில் தேன் கலந்து காலை வெறும் வயிற்றில் குடித்து வரவேண்டும். மாட்டுப் பாலை விட எருமை பாலைஉணவில் சேர்த்துக்கொள்வது சிறந்தது. எருமை பால் ஒரு சிலருக்கு ஒவ்வாமை போன்றவற்றை ஏற்படுத்தும் அதனால் ஒவ்வாமை இருப்பவர்கள் தவிர்க்கலாம். ஒவ்வொரு உணவு இடைவேளைக்கும் இடையில் ஏதேனும் ஒரு பயறு வகைகளை தினமும் எடுத்துக் கொள்ள வேண்டும். தினமும் சாப்பிடும் அளவைவிட ஒரு மடங்கு அதிகமாக சாப்பிட வேண்டும். அசைவ விரும்பிகளாக இருந்தால் வாரத்தில் இரண்டு அல்லது மூன்று நாட்களும் அசைவம் எடுத்துக் கொள்ளலாம், செரிமான தொந்தரவு இல்லை என்றால் எடுத்துக் கொள்ளலாம் ,முட்டை நாள் ஒன்றுக்கு இரண்டு முட்டை வேகவைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
இந்த உணவு முறைகளை மூன்று முதல் ஆறு மாதங்கள் வரை பின்பற்றி உடல் எடையை அதிகரிக்கலாம். உடற்பயிற்சி மேற்கொள்பவர் பயிற்சி கேட்ப உணவுகளை அதிகமாக எடுத்துக் கொள்ள வேண்டும். இல்லையென்றால் உடல் எடை குறைய துவங்கும் . இந்த வழிமுறைகளை பின்பற்றியும் எடை அதிகரிக்கவில்லை என்றால் நம்முடைய பெற்றோர்கள் அவர்களின் இளம்வயதில் எப்படி இருந்தார்களோ இப்படித்தான் நாமும் இருப்போம் என்பதை புரிந்து கொண்டு ஆரோக்கியமான உணவு முறைகளை மட்டுமே எடுத்துக்கொள்ள வேண்டும்
சென்னை : 2026 தேர்தலில் முதல்வர் வேட்பாளர் விஜய் என்று தவெக சமீபத்தில் அறிவித்திருந்தது. எனவே, இது குறித்து அரசியல்…
வாஷிங்டன் : டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்புடனான மோதலைத் தொடர்ந்து, நேற்றைய தினம் ''அமெரிக்கா…
வாசிங்டன் : பிரேசிலில் நடைபெற்று வரும் பிரிக்ஸ் உச்சிமாநாட்டில் பங்கேற்கும் நாடுகள், அமெரிக்காவின் பெயரைக் குறிப்பிடாமல், ஈரான் மீதான சமீபத்திய…
திருவனந்தபுரம்: திருவனந்தபுரம் மாவட்டம் காட்டாக்கடை அருகே உள்ள குடியிருப்புப் பகுதியின் அருகில் உள்ள ஓடையில் பதுங்கியிருந்த 18 அடி நீளமுள்ள ராஜநாகத்தை…
தெலுங்கானா: டோலிவுட் சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு ஒரு ரியல் எஸ்டேட் சர்ச்சையில் சிக்கியுள்ளார். ஆம், ஒரு ரியல் எஸ்டேட்…
சென்னை : பேட்டிங் அதிரடி சூறாவளி, விக்கெட் கீப்பிங்கில் மின்னல் வேகம், கேப்டன்ஷிப்பின் உச்சம் தொட்ட தமிழகத்தின் தத்துப்பிள்ளையான 'கேப்டன்…