டிச 11 இந்த 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! வானிலை ஆய்வு மையம் தகவல்!
சென்னை : தென் கிழக்கு வங்க கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி அடுத்த 24 மணி நேரத்திற்குள் வலுப்பெறும் எனவும், இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, 11-ஆம் தேதி வாக்கில், தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் இலங்கை தமிழக கடலோரப் பகுதிகளை ஒட்டி நிலவக்கூடும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்திருந்தது. இதனையடுத்து, டிசம்பர் 11-ஆம் தேதி 5 மாவட்டங்களுக்கு சென்னை வானிலை ஆய்வு மையம் மழைக்கான ஆரஞ்சு அலர்ட் கொடுத்துள்ளது. கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், […]