HUSBAND - WIFE [iMAGESOURCE :REPRESENTATIVE]
கணவன்-மனைவி உறவுக்குள் எந்த அளவுக்கு அன்பு பெறுக வேண்டும் என நினைக்கிறோமோ, அந்த அளவுக்கு மோதலும் பெருகும். சண்டை வருவது இயல்புதான். ஆனால், அது அதிகமாகி, உங்கள் உறவை பாதிக்க ஆரம்பித்தால், அதை தடுக்க சில முயற்சிகள் மேற்கொள்ள வேண்டியது அவசியம் தான்.
கணவன்-மனைவிக்குள் கலாச்சாரம், குடும்ப பின்னணி, பணம், குழந்தை, வேலை போன்ற பல்வேறு காரணங்களால் தம்பதிகளுக்குள் சண்டை வரலாம். அவ்வப்போது சண்டை வந்தால், அது இயல்புதான். ஆனால், அந்த சண்டையை ஆரோக்கியமான முறையில் தீர்த்து கொள்ள வேண்டியது அவசியமான ஒன்று.
சண்டை வந்தால் என்ன செய்ய வேண்டும்?
கணவன்-மனைவிக்குள் சண்டை வரும் போது இருவருமே எதிர்த்து பதில் சொல்லும் போது அது பெரிய பிரச்னையாகிவிடுகிறது. மாறாக, கணவன் பேசினால் மனைவி அமைதியாகவும், மனைவி பேசினால் கணவன் அமையாகவும் சென்று விட்டால் சண்டைகள் தவிர்க்கப்படலாம்.
தங்களது கோபத்தில் மாறி மாறி ஒருவருக்கொருவர் பேசிக் கொள்ளாமல், ஓரிரு மணி நேரம் தனியாக இருந்து, கோபத்தை தணித்துக் கொள்ளுங்கள். இருவருக்கும் கோபம் தணிந்த பின் இருவரும் பேசி தீர்வு காணலாம்.
உறவை பலப்படுத்தும் சண்டைகள்
சண்டை என்பது உங்கள் உறவை பலப்படுத்துவதற்கான ஒரு வழி. சண்டை மூலம், நீங்கள் ஒருவருக்கொருவர் நன்கு புரிந்து கொள்ள முடிவதோடு, உங்கள் குறைகளையும் சரிசெய்ய முடிவதோடு, உங்கள் உறவையும் வலுப்படுத்த முடியும்.
தம்பதியர்களுக்கு கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். அதை அவர்கள் ஒருவருக்கொருவர் மரியாதையுடனும் புரிந்துகொண்டும் பார்க்க வேண்டும். அதேசமயம், தம்பதியர்கள் ஒருவருக்கொருவர் தவறு செய்தால், அதை மன்னிக்க வேண்டும். அதற்கு அவர்கள் ஒருவருக்கொருவர் திறந்த மனதுடன் இருக்க வேண்டும்.
தம்பதியர்கள் ஒருவருக்கொருவர் மரியாதையின்றி பேசுவது அல்லது ஒருவருக்கொருவர் தவறாக நடப்பது போன்ற சண்டைகள் உறவை பலப்படுத்தாது. அவை உறவை பலவீனப்படுத்தவும் சேதப்படுத்தவும் கூடும். எனவே, உறவுக்கு மதிப்பளித்து தம்பதியர்கள் தங்களுக்குள் உள்ள பிரச்சினைகளை திறந்த மனதுடன் கையாள வேண்டும்.
ஜம்மு காஷ்மீர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய எல்லையோரம் உள்ள மாநில…
ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்…
லாகூர் : இந்தியா மீது தாக்குதல் தொடுத்த பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள் வான்பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில்…
தர்மசாலா : இன்று ஐபிஎல் 2025 இன் 58-வது போட்டி பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே…
பஞ்சாப் : ஜம்முவில் தற்போது பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி, ஜம்மு விமானப்படை தளமான…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த நேற்றைய தினம் செய்தியாளர்கள் மத்தியில் விளக்கமளித்த இந்திய ஆயுதப் படைகளின் இரண்டு பெண்…