பிஸ்கட்டை தினமும் நீங்க இந்த மாதிரி சாப்பிட்டா இவ்வளவு ஆபத்தா?..

Biscuits eating

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பிஸ்கட்டை நாம் பால் மற்றும் டீ, காபியில் நனைத்து  சாப்பிடுகிறோம் இவ்வாறு சாப்பிடும்போது பல பின்விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை இந்த பதிவின் மூலம் அறிந்து கொள்வோம்.

பெரும்பாலும் பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு இதுவே காலை உணவாக இருக்கிறது. இது சாப்பிடுவதற்கு மிக எளிதாகவும் விரைவாகவும் சாப்பிடக்கூடிய பொருளாக இருப்பதால் குழந்தைகள் அதிகம் விரும்புகிறார்கள். இதைப் பெற்றோர்களும் சத்தான உணவு தானே என்று திடமாக நம்புவது மேலும் இந்த பழக்கம் அதிகரிக்கிறது.பிஸ்கட்டில் கலோரி அதிகம் இதனால் உடல் பருமன் போன்ற பிரச்னை ஏற்படும் .

ஆனால் டீ காபியில் பிஸ்கட்டை நனைத்து  சாப்பிடுவதால் பல சிக்கல்கள் உள்ளது .நாம் சாப்பிடும் பிஸ்கட்டின் பொதுவான மூலப்பொருள் சுத்திகரிக்கப்பட்ட கோதுமை தான் அதாவது மைதா. ஆகவே மைதாவை மூலப்பொருளாகக் கொண்டு பிஸ்கட் தயாரிக்கப்படுகிறது. இது நம் உடலுக்கு ஆரோக்கியம் இல்லை என பல மருத்துவர்கள் கூறுகின்றனர். குறிப்பாக கிரீம் பிஸ்கட், குளுக்கோஸ் பிஸ்கட் என பல வித பிளேவர்களில் வரும் பிஸ்கட்டுகள் நம் சாப்பிடும் போது அதிக விழிப்போடு இருக்க வேண்டும்.

காலை உணவு நம் உடலின் எனர்ஜிக்கும் வளர்ச்சிக்கும் மிக முக்கியமானது. அந்த காலை உணவாக நாம்  பிஸ்கட்டை தேர்வு செய்வது மிகவும் தவறான பழக்கம். இது குழந்தையின் வளர்ச்சியை பாதிக்கிறது. 40 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் அனைத்தும் இன்று ஐந்து வயது குழந்தைகளுக்கு ஏற்படுகிறது அதில் சேர்க்கப்படும் ரசாயனம் மற்றும் பதப்படுத்தப்பட்ட பொருள்கள் குழந்தையின் குடலை பெரிதும் பாதிக்கின்றது.

ஒருவேளை நாம் பிஸ்கட் எடுத்துக் கொள்ள வேண்டும் என்றால் தானிய வகையில் தயார் செய்யப்பட்ட பிஸ்கட்கள் வெண்ணெய் மற்றும் நெய் சேர்த்து தயாரிக்கப்பட்ட பிஸ்கட் வகைகளை எடுத்துக் கொள்ளலாம்.

பின் விளைவுகள்:

மருத்துவர்களின் கூற்றுப்படி, தினமும் காலையில் பால் மற்றும் டீ காபியில் பிஸ்கட்டை நினைத்து சாப்பிடுவது குழந்தைகளுக்கு பல்வேறு சிக்கலை ஏற்படுத்தும். குறிப்பாக மலச்சிக்கல் அல்சர் போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும் பிற்காலத்தில் டைப் 2 டயாபடிக் வருவதற்கு கூட வாய்ப்பு உள்ளது.

எனவே பிஸ்கட் சாப்பிடுவதை குறைத்து அதற்கு மாறாக வேக வைத்த பயிறு வகைகள் மற்றும் பழங்களை உணவில் அதிகம் எடுத்துக்கொண்டு உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவோம்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

SRHvsMI
Ajith Kumar Racing
ponmudi - highcourt
Vijay -Waqf Amendment Bill
Munaf Patel FINE
Dhankar