சத்தான சேமியா கொழுக்கட்டை செய்வது எப்படி?

Published by
லீனா

நம்மில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் கொழுக்கட்டையை விரும்பி சாப்பிடுவதுண்டு. இந்த கொழுக்கட்டையை பல வகைகள் உள்ளது. நமது வீடுகளில் விழாக்காலங்களில் செய்கின்ற பலகாரங்களில் கொழுக்கட்டையும் ஒன்று. தற்போது இந்த பதிவில் சுவையான சேமியா கொழுக்கட்டை செய்வது எப்படி என்று பார்ப்போம்.

தேவையானவை

  • சேமியா – 200 கிராம்
  • தேங்காய் – ஒன்று (துருவிக் கொள்ளவும்)
  • காய்ச்சிய பால் – 2 கப்
  • அரிசி மாவு – 3 டேபிள்ஸ்பூன்
  • நறுக்கிய வெங்காயம் – ஒரு கப்
  • பச்சை மிளகாய் – 5 (நறுக்கியது)
  • கடுகு, சீரகம், எள் – தலா அரை டீஸ்பூன்
  • உளுத்தம்பருப்பு – ஒரு டீஸ்பூன்
  • கறிவேப்பிலை – சிறிதளவு
  • எண்ணெய் – தேவையான அளவு
  • உப்பு – தேவையான அளவு

செய்முறை

முதலில் சேமியாவை வருது, 30 நிமிடம் பாலில் ஊற வைக்க வேண்டும். பின் கடாயில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை, வெங்காயம், நறுக்கிய பச்சை மிளகாய் ஆகியவற்றை வதக்க வேண்டும்.

அதன் பின் தேங்காய் துருவல் சேர்த்து, தீயை நிறுத்திவிட்டு கலக்க வேண்டும். பாலில் ஊறிய சேமியா, உப்பு, அரிசி மாவு, எள்ளு, சீரகம் ஆகியவற்றை அதில் கலக்க வேண்டும். பின் கையினால் நன்கு மசித்து கலந்து சிறுசிறு உருண்டைகளாக உருட்டி, ஆவியில் வேகவைத்து எடுக்க வேண்டும். இப்பொது சுவையான சேமியா கொழுக்கட்டை தயார்.

Published by
லீனா

Recent Posts

கில் மாதிரி விளையாட ஆசைப்படுகிறேன்…சாதனை படைத்த வைபவ் சூர்யவம்சி பேச்சு!

கில் மாதிரி விளையாட ஆசைப்படுகிறேன்…சாதனை படைத்த வைபவ் சூர்யவம்சி பேச்சு!

லீட்ஸ்: இந்திய கிரிக்கெட்டின் உருவாகி வரும் நட்சத்திரமான வைபவ் சூர்யவம்சி, இங்கிலாந்து அண்டர்-19 அணிக்கு எதிரான இளையோர் ஒருநாள் போட்டியில்…

2 hours ago

மஸ்கின் கட்சியில் இந்த மூன்று அமெரிக்கர்கள் இணைவார்கள்! ட்ரம்ப் ஆதரவாளர் லாரா லூமர் கணிப்பு!

வாஷிங்டன்: டொனால்ட் டிரம்பின் நெருங்கிய ஆதரவாளரும், மாகா இயக்கத்தின் முக்கிய பிரமுகருமான லாரா லூமர், எலான் மஸ்க் தொடங்கவுள்ள புதிய…

2 hours ago

மடப்புரம் அஜித் சகோதரர் நவீன் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதி! என்ன காரணம்?

சிவகங்கை : மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவில் காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார், நகை திருட்டு வழக்கில் விசாரணைக்காக…

4 hours ago

2 கோடி உறுப்பினர்களை சேர்க்க த.வெ.க மும்முரம்… ஆலோசனைக் கூட்டத்திற்கு அழைப்பு!

சென்னை: தமிழக வெற்றிக் கழகம் (தவெக), 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு 2 கோடி உறுப்பினர்களை சேர்க்கும் இலக்கை அடைய…

4 hours ago

சுப்மன் கில் பேட்டிங் பார்த்து சோர்ந்துட்டோம்! அரண்டு போன இங்கிலாந்து பயிற்சியாளர்!

பர்மிங்காம்: இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் (ஜூலை 2-6, 2025, எட்ஜ்பாஸ்டன்), இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில்…

6 hours ago

தூத்துக்குடி விமானத்தில் இயந்திர கோளாறு! அவசரமாக ஓடுபாதையில் நிறுத்தம்!

தூத்துக்குடி : சென்னை விமான நிலையத்தில் இருந்து தூத்துக்குடிக்கு ஜூலை 6, 2025 காலை 10:10 மணிக்கு புறப்பட இருந்த ஸ்பைஸ்ஜெட்…

7 hours ago