SAMBAR [iMAGESOURCE : REPRESENTATIVE]
நமது வீடுகளில் நாம் அடிக்கடி சாம்பார் வைப்பது வழக்கம். சாம்பாருக்கு பருப்பு, காய்கறிகள் எவ்வளவு முக்கியமோ, அதே அளவு சாம்பார் மசாலாவும் முக்கியமானது. இந்த மசாலாவை நாம் கடைகளில் தான் வாங்குவதுண்டு. ஆனால், நாம் இந்த மசாலாவை கடைகளில் விலைகொடுத்து வாங்குவதை விட, வீட்டிலேயே சுத்தமாக சுவையாக தயார் செய்யலாம்.
தற்போது இந்த பதிவில் வீட்டிலேயே சாம்பார் மசாலா போடி செய்வது எப்படி என்று பார்ப்போம்.
தேவையானவை
செய்முறை
முதலில் தேவையான பொருட்களை தயாராக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். பின்பு அடுப்பில் கடாயை வைத்து, கடாய் சூடான பின்பு அதில் உளுந்தம் பருப்பு, கடலைப்பருப்பு இரண்டையும் வறுத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். மல்லியையும் தனியாக வறுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்பு சீரகம், மிளகு, வெந்தயம் மூன்றையும் சேர்த்து தனியாக வறுத்து வைத்துக்கொள்ள வேண்டும். பின்பு அரிசியை போட்டு அந்த அரிசி பொன்னிறமாக வரும் வரை வறுத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். அதன் பின் வரமிளகாய் பெருங்காயகட்டி கருவேப்பிலை மூன்றையும் போட்டு சிறிதளவு வறுத்து தனியாக எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.
அதேபோல் தேங்காய் துருவலையும் பொன்னிறமாக வரும் வரை வறுத்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். இப்பொழுது வறுத்து வைத்துள்ள அனைத்து பொருட்களையும் மிக்ஸியில் போட்டு அதனுடன் சிறிதளவு மஞ்சள் பொடி சேர்த்து அரைத்து எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
நாம் அரைத்து வைத்துள்ள இந்த சாம்பார் பொடியை ஒரு பாட்டில் கொட்டி நமக்கு தேவைப்படும் போது உபயோகித்துக் கொள்ளலாம். கடைகளில் நாம் சாம்பார் பொடி வாங்கி பயன்படுத்துவதை விட இந்த சாம்பார் பொடியை நம் வீடுகளில் செய்வது மிகவும் மணமாகவும், சுவையாகவும் சுகாதாரமாகவும்இருக்கும்.
டெல்லி : பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக இன்று (மே 7) அதிகாலை 1.44 மணியளவில் இந்திய ராணுவம்…
சென்னை : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக இன்று (மே 7) அதிகாலை 1.44 மணியளவில்…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இன்று அதிகாலை 1.44 மணியளவில் இந்திய ராணுவம், பாகிஸ்தான் மற்றும்…
இஸ்லாமாபாத் : கடந்த ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பஹல்காம் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 25 இந்தியர்கள் மாறும்…
மும்பை: ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே மும்பையில்…