ஆபரேஷன் சிந்தூர் : 80 பயங்கரவாதிகள் உயிரிழப்பு! பழிதீர்த்த இந்திய ராணுவம்! 

பாகிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு பகுதிகள் என 9 இடங்களில் ஆபரேஷன் சிந்தூர் என இந்திய ராணுவம் நடத்திய தாக்குதலில் 80க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர் என தகவல் வெளியாகியுள்ளது.

Operation Sindoor

டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இன்று அதிகாலை 1.44 மணியளவில் இந்திய ராணுவம், பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிகளில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது வான்வெளி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் இதுவரை 100க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் உயிரிழந்திருக்க கூடும் என உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வெளியாகி வருகின்றன.

இந்திய ராணுவம் இன்று அதிகாலை நடத்திய தாக்குதலில் 4 இடங்கள் பாகிஸ்தான் எல்லைக்குள் இருந்தன. மீதம் உள்ள 5 இடங்கள் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிகளில் இருந்தன. இந்த தாக்குதல்களில் ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பின் தலைமையிடம் உட்பட 4 இடங்கள், லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பின் 3 இடங்கள் மற்றும் ஹிஸ்புல் முஜாஹிதீன் பயங்கரவாத குழுக்களின் 2 இடங்கள் தாக்கப்பட்டன.

  1. மர்காஸ் சுப்ஹான் அல்லா, பஹவல்பூர் – ஜெய்ஷ்-இ-முகமது
  2. மர்காஸ் தைபா, முரிட்கே – லஷ்கர்-இ-தொய்பா
  3. சர்ஜால், தெஹ்ரா கலான் – ஜெய்ஷ்-இ-முகமது
  4. மெஹ்மூனா ஜோயா, சியால்கோட் – ஹிஸ்புல் முஜாஹிதீன்
  5. மர்காஸ் அஹ்லே ஹதீஸ், பர்னாலா – லஷ்கர்-இ-தொய்பா
  6. மர்காஸ் அப்பாஸ், கோட்லி – ஜெய்ஷ்-இ-முகமது
  7. மஸ்கர் ரஹீல் ஷாஹித், கோட்லி – ஹிஸ்புல் முஜாஹிதீன்
  8. ஷவாய் நல்லா முகாம், முசாபராபாத் – லஷ்கர்-இ-தொய்பா
  9. சையத்னா பிலால் முகாம், முசாபராபாத் – ஜெய்ஷ்-இ-முகமது

இந்திய ராணுவம் நடத்திய ஆபரேஷன் சிந்தூர் பதிலடி தாக்குதலில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிகளில் இருந்த பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் நடத்திய தாக்குதலில் சுமார் 80 – 90க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக தனியார் செய்தி நிறுவனங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன. பஹாவல்பூர் (ஜெய்ஷ்-இ-முகமது) மற்றும் முரிட்கே (லஷ்கர்-இ-தொய்பா) ஆகிய இடங்களில் இந்திய ராணுவம் மிகப்பெரிய தாக்குதல்களை நடத்தியுள்ளன. இந்த இரண்டு முக்கிய பயங்கரவாத முகாம்களிலும் தலா சுமார் 25-30 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர் என தகவல் வெளியாகி உள்ளது.

இந்திய உளவுத்துறை தற்போது மற்ற இலக்கு முகாம்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை சரிபார்த்து வருகிறது. இதனால் உயிரிழந்த பயங்கவாதிகளின் எண்ணிக்கையானது கூடும் என கூறப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்