pachari payasam [file image]
கார்த்திகை தீபத்திருநாள் அன்று அனைவரது இல்லங்களிலும் ஒரு முக்கிய வழக்கமாக சுவாமிக்கு பாயாசம் நிவேதினம் படைக்கும் பழக்கம் இருக்கும். அந்த வகையில் இன்று பச்சரிசி மற்றும் தேங்காயை வைத்து ஒரு சூப்பரான பாயாசத்தை தயார் செய்யலாம்.
பச்சரிசி= கால் கப்
தேங்காய்= ஒரு கப்
வெல்லம் = முக்கால் கப்
தண்ணீர்= மூணு கப்
ஏலக்காய்= அரை ஸ்பூன்
முந்திரி= 10
உலர் திராட்சை= 10
பச்சரிசியை ஒரு மணி நேரம் ஊற வைத்து மிக்ஸியில் போடவும் .அதிலே ஒரு கப் தேங்காய் துருவலையும் சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.
பிறகு ஒரு பாத்திரத்தில் தண்ணீரை கொதிக்க வைத்து அரைத்த பச்சரிசி மற்றும் தேங்காய் விழுதை சேர்த்து மிதமான தீயில் கைவிடாமல் ஒரு பத்து நிமிடம் கிளற வேண்டும். மேலும் அடிப்பிடித்து விடாமல் பார்த்துக் கொள்ளவும்.
மற்றொரு பாத்திரத்தில் வெல்லம் சேர்த்து வெல்ல கரைசல் தயார் செய்து கொள்ளவும். தயார் செய்த வெல்ல கரைசலை பச்சரிசி மற்றும் தேங்காயுடன் சேர்த்து கிளறி விடவும்.
நீங்கள் அதிகமாக யோசித்துக் கொண்டே இருப்பவரா? அப்போ இந்த பதிவு உங்களுக்கு தான்..
ஒரு ஸ்பூன் நெய் ஊற்றி அதிலே முந்திரி திராட்சையை வறுத்து எடுத்து பச்சரிசி பாயாசத்தில் போட்டு கிளறி விடவும். இப்போது சுவையான பச்சரிசி தேங்காய் பாயாசம் தயார்.
இந்த வருடம் கார்த்திகைக்கு இந்த பாயாசத்தை சுவாமிக்கு வைத்து நிவேதனம் செய்யுங்கள்.
நம் பாயாசம் சுவைக்காக மட்டும் நான் சாப்பிடுகிறோம் என்று நினைப்போம். ஆனால் அது நம் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களையும் சேர்த்தே கொடுக்கிறது. நாவுக்கு ஏற்ற சுவையும் உடலுக்கேற்ற ஊட்டச்சத்தையும் இந்த பாயாசம் தருகிறது.
பச்சரிசியில் அதிக அளவு கார்போஹைட்ரேட் மற்றும் மாவுச்சத்து அதிகம் உள்ளது இது உடனடியாக உடலுக்கு எனர்ஜியை தரும்.
தேங்காயில் அதிக அளவு விட்டமின் ஈ விட்டமின் ஏ சத்து களும் கொழுப்பு சத்து ஆதிசத்துக்களும் நிறைந்து உள்ளது. இது நம் தோலுக்கு நல்ல பளபளப்பை தருகிறது. உடல் பருமனை அதிகரிக்க செய்யும். முடி வளர்ச்சிக்கும் கருமை நிறத்திற்கும் முக்கிய பங்கு வகிக்கிறது.
இதில் நாம் வெல்லம் சேர்த்து செய்துள்ளதால் இதில் உள்ள இரும்பு சத்து ஹீமோகுளோபின் அளவை அதிகரித்து ரத்த சோகை வராமல் தடுக்கிறது.
குளுக்கோஸ் மற்றும் மாவு சத்து அதிகம் நிறைந்துள்ளதால் சர்க்கரை நோய் உள்ளவர்கள் தவிர்ப்பது சிறந்தது.
எனவே இந்த கார்த்திகை அன்று அனைவரது இல்லங்களிலும் இந்தத் தித்திக்கும் பச்சரிசி தேங்காய் பாயாசம் செய்து அசத்துவோம்.
சென்னை : உடல்நலக்குறைவால் முதலமைச்சர் ஸ்டாலின் சிகிச்சைக்காக சென்னையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதன்படி, சென்னை கிரீம்ஸ்…
மதுரை : தமிழ்நாட்டில் திமுக கட்சி "ஓரணியில் தமிழ்நாடு" என்ற ஒரு முன்னெடுப்பைத் தொடங்கியது. இதன் மூலம் பொதுமக்களை உறுப்பினர்களாகச்…
மும்பை : கடந்த 2006 மும்பை ரயில் குண்டுவெடிப்பு வழக்கில் 12 பேர் மீதான தண்டனையை மும்பை உயர் நீதிமன்றம்…
டெல்லி : நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று முதல் தொடங்குவதை முன்னிட்டு, பிரதமர் மோடி புதுடெல்லியில் நாடாளுமன்றத்துக்கு வெளியே…
டெல்லி : பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியது. இன்று முதல் ஆகஸ்ட் 21ம் தேதி வரை…
சென்னை : முன்னாள் அதிமுக எம்.பி.யும், அமைப்புச் செயலாளருமான அன்வர் ராஜா இன்று திமுகவில் இணைந்தார். இவர் அதிமுக-பாஜக கூட்டணிக்கு…