இந்தியாவின் ராணுவ வலிமையை உலகமே வியந்து பார்த்தது – பிரதமர் மோடி.!

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் மிகவும் முக்கியமான ஒன்று, இது புதிய தொடக்கங்களுக்கான கூட்டத்தொடர் என்று பிரதமர் மோடி செய்தியாளர் சந்திப்பில் பேசியுள்ளார்.

Parliament Session 2025 - pm modi

டெல்லி : நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று முதல் தொடங்குவதை முன்னிட்டு, பிரதமர் மோடி புதுடெல்லியில்   நாடாளுமன்றத்துக்கு வெளியே இன்று கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன்னர் செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது, அவர் பேசுகையில், ”நாடு முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது,  நல்ல மழை பெய்து வருவதால் விவசாயிகளுக்கு நல்ல பயன் கிடைக்கும்.மழைக்கால கூட்டத்தொடர் ஆக்கப்பூர்வமாக நடைபெறும் என நம்புகிறேன். மழைக்கால கூட்டத்தொடர் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. கூட்டத்தொடரை சுமுகமாக நடத்த எதிர்க்கட்சிகளுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்தார்.

தொடர்ந்து பேசிய அவர், ”நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் வெற்றி கொண்டாட்டத்திற்கான காலம். சர்வதேச விண்வெளி நிலையத்தில் இந்திய தேசியக்கொடி பறந்தது. ஆக்ஸியம் 4 திட்டத்தின் கீழ் விண்வெளிக்கு சென்று திரும்பிய சுபான்ஷு சுக்லாவுக்கு பாராட்டுகள்.

பயங்கரவாதிகளின் இருப்பிடங்களுக்கே சென்று அவர்களை தீரத்துடன் அழித்துள்ளோம். இந்திய ராணுவத்தின் வீரத்தை உலகிற்கு பறைசாற்றும் விதமாக ஆபரேஷன் சிந்தூர் அமைந்தது. ஆப்ரேசன் சிந்தூரின்போது ஒட்டுமொத்த உலகமும் இந்திய ராணுவத்தின் வலிமையை கண்டது. ஆப்ரேசன் சிந்தூரின் இலக்குகள் 100% எட்டப்பட்டன. பாகிஸ்தானின் தீவிரவாத கட்டமைப்புகளை தாக்கி அழித்துள்ளோம்.

22 நிமிடங்களில் பயங்கரவாத நிலைகளை இந்தியா தாக்கி அழித்தது. நக்சலைட்டுகள் முழுவதும் ஒழிக்கப்படுவார்கள். நக்சலைட்டுகள் பிடியில் இருந்த 100க்கும் மேற்பட்ட மாவட்டங்கள் மீட்கப்பட்டுள்ளன. உலகின் 3ஆவது பெரிய பொருளாதாரம் என்ற நிலையை இந்தியாவிரைவில் எட்டும்” என்று கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்