mango seed
Mango seeds-மாம்பழத்தின் விதை பகுதியில் உள்ள நன்மைகளைப் பற்றி இப்பதிவில் காணலாம் .
மாம்பழம் என்றாலே சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே விரும்பி சாப்பிடக்கூடிய பழம். இந்த மாம்பழங்களை விட மாம்பழத்தின் விதைப்பகுதியில் அதிக அளவு சத்து உள்ளது.
மீன்களுக்கு சமமான புரதச்சத்துக்களையும் கொண்டுள்ளது. அது மட்டுமல்லாமல் வைட்டமின் ஏ, வைட்டமின் பி, வைட்டமின் சி, வைட்டமின் பி12, நார் சத்துக்கள், மெக்னீசியம் பேட்டி ஆசிட் அதிகம் உள்ளது.
மாம்பழத்தை சாப்பிட்டுவிட்டு அதன் கொட்டைகளை வீசி விடாமல் நான்கிலிருந்து ஐந்து நாட்கள் காயவைத்து அதை உடைத்தால் அதிலிருந்து பருப்பு இருக்கும் .அதை சிறிதாக நறுக்கி மூன்றில் இருந்து நான்கு நாட்கள் காயவைத்து நெய்யில் வறுத்து அரைத்து வைத்துக் கொள்ளவும் .தேவைப்படும்போது நெய் அல்லது தேனிலோ கலந்து சாப்பிடலாம்.
ஒரு ஸ்பூன் மாவிதை பொடியை ஒரு ஸ்பூன் தேனில் கலந்து அல்லது ஒரு ஸ்பூன் உருக்கிய நெய்யில் கலந்தோ காலை அல்லது மதிய வேலைகளில் எடுத்துக் கொள்ளலாம் இரவு நேரத்தில் எடுத்துக் கொள்வதை தவிர்க்க வேண்டும்.சிறிய குழந்தைகளுக்கு கால் ஸ்பூன் அளவு கொடுத்தால் போதும் .
பொதுவாக மாம்பழம் உஷ்ணத்தை கொடுக்கக் கூடியது .ஆனால் அதில் உள்ள பொக்கிஷமான விதைப்பகுதி உடல் உஷ்ணத்தை குறைக்க கூடியது .நாவறட்சி ,நடுக்கம் போன்றவற்றை குணப்படுத்தும்.
மேலும் மூலம் ,பவுத்திரம் போன்றவற்றையும் முற்றிலும் குணமாக்குகிறது. கண் பார்வை திறனை அதிகரிக்கிறது.
உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் இந்த விதை பொடியை தண்ணீரில் ஒரு ஸ்பூன் சேர்த்து கொதிக்க வைத்து நாட்டு சக்கரை கலந்து இரண்டு மாதங்கள் எடுத்துக்கொள்ளும் போது உடல் எடை குறையும்.
அதுபோல் தைராய்டு பிரச்சனை ,ஹார்மோன் சார்ந்த பிரச்சினை உள்ளவர்களும் மாவிதை பொடிகளை எடுத்துக் கொள்ளலாம்.
வயிற்றுப்போக்கு ,வயிற்று கடுப்பு போன்றவை இருப்பவர்கள் இந்த மாவிதை பொடிகளை தேனில் கலந்து எடுத்துக் கொள்ளலாம்.
மேலும் நீரிழிவு நோயாளிகள், பிளட் பிரஷர் உள்ளவர்கள் எடுத்துக்கொள்ளும் போது கட்டுக்குள் வைக்கப்படுகிறது.
குழந்தைகளுக்கு வயிற்றில் உள்ள புழுக்கள் தொந்தரவு இருந்தால் ஆங்கில மருந்துகள் எடுத்துக் கொள்வதை விட இந்த இயற்கையான பொடியை கொடுத்து வரும்போது குடல் புழுக்களை அளித்து விடும்.
பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் அதிக ரத்தப்போக்கு இருந்தால் இந்த மாவிதை எடுத்துக் கொள்ளும் போது கட்டுப்படுத்தும்.
எனவே இந்த மாம்பழ சீசனை தவறவிடாமல் மாம்பழத்தின் கொட்டைகளை தூக்கி வீசி விடாமல் அதன் விதைகளை சேகரித்து காற்று புகாத டப்பாவில் அடைத்து வைத்து தேவைப்படும் நேரங்களை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
மதுரை : தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உதயசூரியபுரம் எனும் ஊரில் நேற்று இரவு பெண் ஒருவர் தலை துண்டிக்கப்பட்டு…
சென்னை : தமிழ்நாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி அமைத்து நாளையோடு (மே 7) 4 ஆண்டுகள் நிறைவுற்று…
டெல்லி : ஏப்ரல் 22 காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்ற நடவடிக்கைகள்…
சென்னை : சென்னையில் இன்று காலை முதலே கோயம்பேடு, தி நகர், அசோக் நகர், சாலிகிராமம், விருகம்பாக்கம் ஆகிய பல்வேறு…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு…
தஞ்சாவூர் : நேற்று (மே 5) இரவு தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள உதயசூரியபுரத்தில் பெண் ஒருவர் தலை…