நமது உடலில் ஏற்படும் பல வகையான பிரச்சனைகளை போக்கும் திறன் மிகுந்த ஒரு பழம் பப்பாளி.இந்த பப்பாளி பழத்தை தினமும் உணவில் சேர்ந்து வந்தால் அது நமது உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை தரவல்லது.பப்பாளியின் மருத்துவ குணங்களை பற்றி நாம் இந்த பதிப்பில் இருந்து படித்தறியலாம்.
பப்பாளியை குழந்தைகளுக்கு கொடுத்து வர அவர்களின் உடல் வளர்ச்சி துரிதமாக இருக்கும்.மேலும் எலும்புகளும் நன்கு வளர்ச்சி அடையும். பற்களும் நன்கு உறுதியாக இருக்கும்.
பப்பாளிக்காயை நாம் அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால் நமது உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை கரைத்து உடல் எடையை குறைக்கும்.
பப்பாளியை உணவில் தினமும் சேர்த்து வந்தால் கல்லீரலில் உள்ள வீக்கங்கள் குறையும்.
பப்பாளியை நன்கு மசித்து தேனுடன் கலந்து முகத்தில் பூசி காய்ந்தபின் சூடு நீரால் கழுவி வந்தால் முக சுருக்கங்கள் நாளடைவில் மறைந்து முகம் அழகாக மாறும்.
பப்பாளி விதைகளை அரைத்து பாலில் கலந்து குடித்து வந்தால் வயிற்றில் இருக்கும் பூச்சிகள் அழிந்து விடும்.
பப்பாளி பழத்தின் பாலை வாயில் புண்கள் இருக்கும் இடத்தில் பூசி வந்தால் வாய் புண்கள் மறைந்து போகும்.
பப்பாளி பாலை பசும் பாலுடன் கலந்து சேற்று புண்கள் இருக்கும் இடத்தில் பூசி வந்தால் சேற்று புண்கள் ஆறும்.
பப்பாளி விதையை அரைத்து தேள் கொட்டிய இடத்தில் பூசி வந்தால் விஷம் படிப்படியாக இறங்கும்.
சென்னை : மகாராஷ்டிராவில் இந்தியை கட்டாயமாக்கும் உத்தரவுக்கு தாக்கரே சகோதரர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் அறிவித்த நிலையில், பள்ளிகளில்…
பிரான்ஸ் : நடிகர் மற்றும் ரேஸரான அஜித் குமார் குட் பேட் அக்லி திரைப்படத்தை தொடர்ந்து மீண்டும் ரேஸிங்கில் ஈடுப்பட்டு…
அமெரிக்கா : அமெரிக்கா வரி மற்றும் செலவீன குறைப்பு மசோதாவில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கையெழுத்திட்டார். மசோதா சட்டமானதால்…
அமெரிக்கா : பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடியில் குற்றம் சாட்டப்பட்டு தப்பியோடியதாக கூறப்படும் தொழிலதிபர் நிரவ் மோடியின் சகோதரர் நேஹல்…
சென்னை : 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டம் தமிழ்நாடு முழுவதும் மக்களின் குறைகளைத் தீர்க்கவும், அரசு சேவைகளை வழங்கவும் தமிழக அரசு…
சென்னை : திருநெல்வேலி மேற்கு புறவழிச் சாலைப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதனை, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு,…