sangu poo tea
சங்கு பூ டீ – சங்கு பூ டீயின் நன்மைகள் மற்றும் சங்கு பூ டீ செய்முறை பற்றி இப்பதிவில் பார்ப்போம்.
சங்கு பூக்கள் நாளிலிருந்து ஐந்து எடுத்துக் கொள்ளவும். சூடான ஒரு டம்ளர் தண்ணீரில் இந்த பூக்களை போட்டால் ஒரு சில வினாடிகளிலே அதன் சாறு இறங்கி தண்ணீரின் நிறம் மாறும். பூவில் உள்ள நிறம் அனைத்தும் தண்ணீருக்கு சென்றுவிடும்.
இப்போது அந்த இதழ்களை வெளியே எடுத்து விட்டு பருகலாம். உடல் எடை குறைக்க நினைப்பவர்கள், அதில் 4-5 சொட்டு எலுமிச்சை சாறு சேர்த்துக் கொள்ளவும்.
சர்க்கரை நோயாளிகளுக்கும் ,இதய நோயாளிகளுக்கும் இது மிகச் சிறந்த டீ ஆகும். இதை அப்படியே எடுத்துக் கொள்வது சிறந்தது. மற்றவர்கள் இதில் சுவைக்காக இனிப்பு சேர்த்து பயன்படுத்தலாம்.
பொதுவாக ஊதா நிறத்தில் இருக்கும் அனைத்து உணவு பொருட்களிலுமே ஆந்தோசைனின் என்ற ஆன்ட்டி ஆக்சிடென்ட் இருக்கும். ஆனால் மற்ற பொருட்களை விட சங்கு பூவில் அதிக அளவு உள்ளது.
100 கிராம் பூவில் 540 மில்லி கிராம் ஆந்தோசைனைன் காணப்படுகிறது. இது இருதய அடைப்பு ஏற்படுவதை தடுக்கும் .கொலஸ்ட்ராலை குறைக்கும். சர்க்கரை நோயாளிகளுக்கு உகந்த டீ.
மேலும் கண்களில் ரெட்டினால் செல்கள் பாதிப்படைவதை தடுக்கும். குறிப்பாக சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்படும் கண் பிரச்சனையை குறைக்கும் தன்மை இந்த சங்குப்பூ டீக்கு உள்ளது. மேலும் உணவில் உள்ள மாவுச்சத்தை உடலில் அதிகம் சேராமல் பாதுகாக்கிறது.
மாதவிடாய் நேரங்களில் அதிக உதிரப்போக்கு ஏற்படுவதை குறைக்கும் தன்மை இந்த சங்குப் போட்டிக்கு உள்ளது.இதில் பிளேவனாய்ட்ஸ் இருப்பதால் கொலாஜின் உற்பத்தியை அதிகரித்து விரைவில் முதுமை அடைவதை தடுக்கிறது.
மன அழுத்தத்தை குறைக்கக்கூடிய அற்புதமான தன்மையும் சங்கு பூவுக்கு உள்ளது. மூளையில் மகிழ்ச்சி ஹார்மோன் என்று சொல்லக்கூடிய டோபமைன் , செரட்டோனின், ஆக்சிடோசின் போன்ற ஹார்மோன்களை அதிகரிக்கச் செய்யும். இதனால் மனக்கவலை போன்ற மனம் சார்ந்த அனைத்துப் பிரச்சனைகளையும் தீர்க்கும் அற்புதமான டீயாகும்.
அதுமட்டுமின்றி கேன்சர் செல்களை அளிக்கக்கூடிய தன்மை உள்ளது. குடல் புழுக்களை வெளியேற்றி வயிற்றை சுத்தப்படுத்துகிறது.உள் காயத்தால் ஏற்படும் உடல் வலியை குறைத்து உடலுக்கு புத்துணர்வை தரும்.
சங்கு பூ டீயை அதிக அளவு எடுத்துக் கொள்வதை தவிர்க்கவும். வயிற்றுப்போக்கு, குமட்டல் போன்றவற்றை ஏற்படுத்தும். காலை நேரம் அல்லது மாலை நேரங்களில் இந்த டீயை அருந்தலாம்.
ஆகவே தினமும் குடிக்கும் டீ, காபிக்கு பதில் இந்த டீயை வாரத்தில் மூன்று நாட்கள் எடுத்து வந்தால் உடலில் பல ஆரோக்கிய நன்மைகள் பெருகும்.
டெல்லி : தங்கக் கடத்தல் மற்றும் பணமோசடி வழக்கு தொடர்பாக கன்னட நடிகை ரன்யா ராவுக்குச் சொந்தமான ரூ.34.12 கோடி…
பர்மிங்காம் : இந்திய அணிக்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்று வருகிறது. ஷுப்மான் கில்லின் இரட்டை சதத்தால்…
பொள்ளாச்சி : பொள்ளாச்சியைச் சேர்ந்த குருதீப் என்ற 10ஆம் வகுப்பு மாணவர், தனியார் பள்ளியில் பயின்று வந்த நிலையில், 2025ஆம்…
காரைக்கால் : மயிலாடுதுறை அருகே தமிழக வாழ்வுரிமை கட்சியின் காரைக்கால் மாவட்ட நிர்வாகி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை…
பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் இந்திய அணி 587 ரன்களை குவித்துள்ளது. இந்திய அணிக்கு தூணாக நின்று…
சென்னை : திருப்புவனம் இளைஞர் மரணத்தை கண்டித்து நாளை (ஜூலை 3, 2025) எழும்பூர், ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற இருந்த…