ORS
ORS-உப்பு சர்க்கரை நீர் கரைசலில் நன்மைகள் மற்றும் வீட்டிலேயே தயாரிக்கும் முறை பற்றி இப்பதிவில் காணலாம்.
ORS- உப்பு சர்க்கரை நீர் கரைசல் என்பது உடலில் ஏற்படும் நீரிழப்பை சரி செய்யக் கூடியதாகும். சோடியத்துடன் குளுக்கோஸ் சேர்த்து ஒரு குறிப்பிட்ட அளவில் நீரில் கலந்து கொடுக்கும்போது உடல் உடனே உட்கிரகித்து கொள்கிறது. இதனால் நீர் சத்து குறைபாடு ஏற்படாது.
1970 ஆம் ஆண்டு பங்களாதேஷில் போர் நடந்து கொண்டிருந்தபோது அங்குள்ள பெண்கள் மற்றும் குழந்தைகளை முகாம்களில் தங்க வைத்தனர். ஆனால் அங்கு தண்ணீர் வசதி இல்லாததால் அனைவருக்கும் காலரா தொற்று ஏற்பட்டது.
அந்த காலகட்டத்தில் காலராவிற்காக ஊசி மற்றும் குளுக்கோஸ் மூலமாக மருந்துகள் கொடுக்கப்படும். அப்போது கொல்கத்தாவை சார்ந்த டாக்டர் திலிப் மகலானபிஸ் உப்பு மற்றும் சர்க்கரை கரைசலை காலரா பாதிக்கப்பட்டவர்களுக்கு கொடுக்குமாறு பரிந்துரைத்தார்.
அதன்படி கொடுக்கப்பட்ட பின் பலருக்கும் குணமானது .இதைத்தொடர்ந்து 1971-1972 இல் இதைப் பற்றி ஆராய்ச்சி நடத்தப்பட்டது. 1978 இல் உலக சுகாதார அமைப்பு[WHO] இந்த கரைசலை டையரியா பாதிக்கப்பட்டவர்கள் எடுத்துக் கொள்ளலாம் என கூறியது. அதன்படி அன்றிலிருந்து இன்று வரை பல லட்சம் மக்கள் ORS கரைசலால் காப்பாற்ற பட்டு வருகிறார்கள்.
வயிற்றுப்போக்கு ,வாந்தி இருப்பவர்களுக்கு நீர்ச்சத்து குறைபாடு அதிகம் ஏற்படும் இதனை தடுக்க உப்பு சர்க்கரை கரைசலை கொடுக்கலாம் மேலும் கோடை காலங்களில் ஏற்படும் நீர் வரட்சியை தடுக்கவும் ஓ ஆர் எஸ் எடுத்துக் கொள்ளலாம்.
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே இதை எடுத்துக் கொள்ளலாம். கிட்னி பிரச்சனை இருப்பவர்கள் மருத்துவரின் ஆலோசனை கேட்டு எடுத்துக் கொள்ளவும்.
ஒரு லிட்டர் தண்ணீரை கொதிக்க வைத்து ஆற வைத்து அதில் ஒரு பாக்கெட் ORS கலந்து எடுத்துக் கொள்ளவும், பெரியவர்கள் என்றால் ஒவ்வொரு வயிற்றுப்போக்குக்கும் பிறகு 1-2 டம்ளர் எடுத்துக் கொள்ளலாம் .
குழந்தைகள் என்றால் ஐந்து கிலோ எடைக்கு 50 ML விதம் எடுத்துக் கொள்ளவும். அதாவது ஒரு குழந்தை 10 கிலோ எடை இருந்தால் 100ml கொடுக்க வேண்டும். ஒருவேளை வாந்தி செய்து விட்டால் 15 நிமிடம் கழித்து ஸ்பூனில் சிறிது சிறிதாக கொடுக்க வேண்டும்.
ஒரு லிட்டர் கொதிக்க வைத்து ஆற வைத்த தண்ணீரில் ஆறு ஸ்பூன் சர்க்கரை மற்றும் அரை ஸ்பூன் உப்பு சேர்த்து கலக்கினால் உப்பு சர்க்கரை நீர் கரைசல் தயாராகிவிடும்.
சரியான முறையில் தயாரித்து குடித்தால் எந்த ஒரு பக்க விளைவும் ஏற்படுத்தாது .ஆனால் ஒரு சில அவர்களுடைய தோதுக்கு ஏற்ப ஒரு டம்ளர் தண்ணீரில் சிறிது ORS கலந்து எடுத்துக் கொள்வார்கள். அவ்வாறு எடுத்துக் கொள்ளும் போது உடலில் உப்பு சத்து குறைபாடு ஏற்படலாம்.
நீச்சத்து குறைபாடு ஏற்பட்டால் உயிரிழப்பு கூட ஏற்படலாம். குறிப்பாக குழந்தைகளுக்கு அதிகம் ஏற்படுகிறது இதனை தவிர்க்க நம் உடலில் நீரிழப்பு ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
அதுவும் இந்த கோடை காலங்களில் வீட்டை விட்டு கிளம்பும்போதும் வீட்டுக்கு வந்த பிறகும் ஒரு டம்ளர் ஓஆர்எஸ் எடுத்துக் கொள்வது நல்லது.
டெல்லி : ஜம்மு- காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா திங்கள்கிழமை…
மகாராஷ்டிரா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் ஓய்வு…
டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ (BCCI), நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனை…
ஊட்டி : நீலகிரி மாவட்டத்தின் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புகழ்பெற்ற மலர் கண்காட்சி மே 15, 2025 அன்று…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளின் இயக்குநர் ஜெனரல் நிலை…
டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு…