உங்க கண்ணம் கொழு கொழுன்னு வர ஜவ்வரிசியை இப்படி பயன்படுத்துங்க .!

Published by
K Palaniammal

கொழுகொழு கண்ணம்  –  பார்ப்பதற்கு முத்துக்கள் போன்று இருக்கும் இந்த ஜவ்வரிசி மரவள்ளி கிழங்கில் இருந்து தான் தயாரிக்கப்படுகிறது. இந்த ஜவ்வரிசி  தமிழ்நாட்டு விருந்தில் முக்கிய இடம் பிடித்துள்ளது. குறிப்பா கல்யாண விருந்தில் எவ்வளவு தான் விதவிதமான உணவுகள் இருந்தாலும் கடைசியாக இந்த ஜவ்வரிசியில் செய்த பாயாசத்தை உண்டால்தான் அந்த விருந்து முழுமை  அடையும். அந்த வகையில் இதில் உள்ள சத்துக்கள் மற்றும் எந்தெந்த வகையில் நம் உணவில் சேர்த்துக் கொள்ளலாம் என்பது பற்றியும் இந்த பதிவில் பார்ப்போம்.

தேவையான பொருட்கள்:

  • ஜவ்வரிசி =50கி
  • முந்திரி =4 முழு பருப்பு
  • பால் =200ml
  • மிளகு =1/2 ஸ்பூன்
  • பச்சை மிளகாய் =2
  • சீரகம் =1/2 ஸ்பூன்

செய்முறை:
முந்தைய நாள் இரவே முந்திரியையும் ,ஜவ்வரிசியையும் ஊற வைத்துக் விட வேண்டும். பிறகு பச்சை மிளகாய் மற்றும் முந்திரியை மட்டும் மிக்ஸியில் அரைத்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் ஜவ்வரிசி மற்றும் அரைத்த முந்திரி விழுதையும் சேர்க்கவும்.

அதிலே சீரகம் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து கொதிக்க வைக்கவும் கொதித்த  பிறகு மிதமான தீயில் ஐந்து நிமிடம் வேகவைத்து மிளகுத்தூள் சேர்க்கவும். பிறகு அடுப்பை அணைத்துவிட்டு காய்ச்சிய பால் 200ml சேர்த்து இறக்கவும், இப்போது சுவையான ஜவ்வரிசி கஞ்சி ரெடி.

இதை குழந்தைகளுக்கு இனிப்பு சேர்த்தும் செய்து கொடுக்கலாம் பச்சை மிளகாயை தவிர்த்து விட்டு முந்திரியை மட்டும் அரைத்து அதனுடன் சர்க்கரையும் சேர்த்து பாயாசம் போல் தயார் செய்து கொடுக்கலாம். அல்லது கிச்சடியாகவும் சமைத்து சாப்பிடலாம். இவ்வாறு வாரத்தில் மூன்று நாட்கள் காலை அல்லது இரவு உணவாக தொடர்ந்து எடுத்து வந்தால் உடல் எடை கிடுகிடுவென்று அதிகரிக்கும்.

தசை வளர்ச்சி:

இதில் உள்ள அதிக புரதம் தசையை வலுவூட்டவும் ,செல்களை புதுப்பிக்கவும், ரத்த ஓட்டத்தை சீராக்கவும் உதவுகிறது .

அல்சர்:
ஜவ்வரிசிக்கு ஜீரண சக்தி அதிகம் உள்ளது. இதில் உள்ள வளவளப்புத் தன்மை அல்சர் புண்களை விரைவில் குணப்படுத்தும்.

கர்ப்பிணி பெண்கள்:
ஜவ்வரிசியில்  விட்டமின் பி6 மற்றும் ஃபோலேட் இருப்பதால் கருவில் உள்ள குழந்தையின் வளர்ச்சியை மேம்படுத்துகிறது மேலும் குழந்தையின் நரம்பு குழாய் சம்பந்தப்பட்ட குறைபாடுகளை தடுக்கிறது.

இதய நோய் மற்றும் ரத்த அழுத்தம்:

இதில் உள்ள பொட்டாசியம் ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்கிறது. மேலும் மாரடைப்பு மற்றும் பக்கவாதம் வராமல் தடுக்கிறது.
கொலஸ்ட்ரால் மற்றும் ட்ரை கிளிசரைடு அளவை குறைத்து இதய நோய் ஏற்படும் அபாயத்தை குறைக்கிறது என ஆய்வில் கூறப்படுகிறது.

சர்க்கரை நோய்:
இதில் உள்ள ஸ்டார்ச் செரிமானமாக அதிக நேரம் எடுத்துக் கொள்ளும் இதனால் செரிமானம் மெதுவாக நடக்கிறது இதன் மூலம் சர்க்கரையின் அளவும் குறைக்கப்படுகிறது மேலும் உடனடி எனர்ஜியையும் தரும்.

இதில் உள்ள அடர்த்தியான கார்போஹைட்ரேட் உடலுக்கு தேவையான அத்தியாவசியமான கொழுப்பு திசுக்களை உருவாக்க உதவுகிறது .எனவே உடல் எடை குறைவாக இருப்பவர்கள் ஜவ்வரிசியை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டு இயற்கையான முறையில் உடல் எடையை அதிகரித்து ஆரோக்கியத்தை பேணி காப்போம்.

Recent Posts

அச்சப்படாதீங்க மக்களே வெளியே வாங்க…தைரியம் கொடுத்த ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா!

டெல்லி : ஜம்மு- காஷ்மீரின் பூஞ்ச் ​​மாவட்டத்தில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா திங்கள்கிழமை…

1 hour ago

விராட் கோலி ஓய்வு: ‘அந்தக் கண்ணீரை நான் நினைவில் கொள்வேன்’ – அனுஷ்கா சர்மாவின் உருக்கமான பதிவு.!

மகாராஷ்டிரா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் ஓய்வு…

2 hours ago

மே 30 இறுதிப்போட்டி? மீண்டும் ஐபிஎல்லை தொடங்க திட்டம் போட்ட பிசிசிஐ!

டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ (BCCI), நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனை…

3 hours ago

5 நாள் பயணமாக உதகை சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!

ஊட்டி : நீலகிரி மாவட்டத்தின் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புகழ்பெற்ற மலர் கண்காட்சி மே 15, 2025 அன்று…

3 hours ago

”நெருங்கவே முடியாது.., அனைத்து ராணுவ பிரிவுகளும் தயார் நிலையில் உள்ளன” – துணை அட்மிரல் ஏ.என். பிரமோத்.!

டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளின் இயக்குநர் ஜெனரல் நிலை…

4 hours ago

“எங்களின் இலக்கு பயங்கரவாதிகள் தான்” இந்திய ஏர் மார்ஷல் பார்தி பேச்சு!

டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு…

4 hours ago