நாம் மாலை நேரங்களில் தேநீருடன், ஏதாவது ஒரு உணவை விரும்பி சாப்பிடுவதுண்டு. அந்த வகையில், தற்போது இந்த பதிவில் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தக் கூடிய கேழ்வரகு முறுக்கு செய்வது எப்படி என்று பார்ப்போம்.
கேழ்வரகு முறுக்கு செய்வதற்கு தேவையான அனைத்து பொருட்களையும் தயாராக எடுத்துக் கொள்ள வேண்டும். பின் ஒரு பாத்திரத்தில் கேழ்வரகு மாவு மற்றும் கடலை மாவு போட்டு சல்லடையால் சலித்துக் கொள்ள வேண்டும். பிறகு ஒரு கரண்டியில் அல்லது வாணலியில் டால்டாவை போட்டு உருக்கி, சலித்து வைத்திருக்கும் மாவில் ஊற்றவேண்டும்.
அதன் பின்னர் மாவில் பூண்டு விழுது, மிளகாய்த் தூள் மற்றும் உப்பு எல்லாவற்றையும் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும். பிறகு அதில் கால் கப் தண்ணீர் ஊற்றி முறுக்கு மாவு பதத்துக்கு கெட்டியாக பிசைந்து கொள்ளவேண்டும்.
பிறகு முறுக்கு உரலில் மாவு கொள்ளும் அளவிற்கு நிரப்ப வேண்டும். பிறகு வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், ஊற வைத்திருக்கும் மாவை எண்ணெயில் வட்டமாக எண்ணெய் முழுவதும் பிழிய வேண்டும். பின் ஒரு நிமிடம் கழித்து திருப்பி போட வேண்டும். பிறகு மீண்டும் ஒரு நிமிடம் கழித்து எண்ணெய் அடங்கியதும் முறுக்கை எடுத்துவிடவேண்டும். இப்போது சுவையான கேழ்வரகு முறுக்கு தயார்.
லீட்ஸ்: இந்திய கிரிக்கெட்டின் உருவாகி வரும் நட்சத்திரமான வைபவ் சூர்யவம்சி, இங்கிலாந்து அண்டர்-19 அணிக்கு எதிரான இளையோர் ஒருநாள் போட்டியில்…
வாஷிங்டன்: டொனால்ட் டிரம்பின் நெருங்கிய ஆதரவாளரும், மாகா இயக்கத்தின் முக்கிய பிரமுகருமான லாரா லூமர், எலான் மஸ்க் தொடங்கவுள்ள புதிய…
சிவகங்கை : மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவில் காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார், நகை திருட்டு வழக்கில் விசாரணைக்காக…
சென்னை: தமிழக வெற்றிக் கழகம் (தவெக), 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு 2 கோடி உறுப்பினர்களை சேர்க்கும் இலக்கை அடைய…
பர்மிங்காம்: இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் (ஜூலை 2-6, 2025, எட்ஜ்பாஸ்டன்), இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில்…
தூத்துக்குடி : சென்னை விமான நிலையத்தில் இருந்து தூத்துக்குடிக்கு ஜூலை 6, 2025 காலை 10:10 மணிக்கு புறப்பட இருந்த ஸ்பைஸ்ஜெட்…