லைஃப்ஸ்டைல்

Kerala payasam : நீங்க பாயாச பிரியரா…? அப்ப கேரளா ஸ்டைலில் இந்த ரெசிபியை ட்ரை பண்ணி பாருங்க..!

Published by
லீனா

நாம் அனைவரும் திருமண விழா, கோவில் திருவிழா உள்ளிட்ட விழாக்களுக்கு சென்றால், அங்கு அளிக்கப்படும் விருந்தில் பாயசம் முக்கியமான இடத்தை பிடிக்கிறது. பாயசத்தில் பலவகை உண்டு. பருப்பு பாயசம், பால் பாயாசம், அவல் பாயசம், சவ்வரிசி பாயசம் என பல வகைகளில் பாயாசம் செய்வர்.

பாயசம் கால்சியம், பொட்டாசியம் மற்றும் வைட்டமின் டி போன்ற ஊட்டச்சத்துக்களின் நல்ல ஆதாரமாகும். பாயசம் ஒரு லேசான உணவாகும், இது செரிமானத்திற்கு எளிதானது. பாயசத்தை நாம் எளிய முறையில் வீட்டிலேயே தயாரிக்கலாம். தற்போது இந்த பதிவில் கேரளா ஸ்டைலில் பருப்பு பாயாசம் செய்வது எப்படி என்று பார்ப்போம்.

தேவையானவை 

  • பருப்பு – அரை கிலோ
  • முந்திரி – 50 கிராம்
  • தேங்காய் – 1
  • ஜவ்வரிசி – 150
  • நெய் – 50 கிராம்
  • வெல்லம் – 1 கிலோ
  • ஏலக்காய் தூள் – 1 ஸ்பூன்

செய்முறை 

முதலில் தேவையான பொருட்களை தயாராக வைத்துக் கொள்ள வேண்டும். அரை கிலோ பருப்பை வறுத்து கழுவி எடுத்து, அதனை குக்கரில் 5 விசிலுக்கு வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். அதேபோல் ஒருகிலோ வெல்லத்தை தண்ணீரில் கரைத்து வடிகட்டி எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். தேங்காயை மிக்சியில் அரைத்து இரண்டு தடவை பிழிந்து, முதலாம் பால், இரண்டாம் பால் என தனித்தனியாக பிரித்து எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

பின் ஒரு கடாயில் நெய் ஊற்றி அதில் முந்திரி மற்றும் தேங்காயை சிறிய துண்டாக வெட்டி அவற்றை நெய்யில் போட்டு பொரித்து எடுத்துக் கொள்ள வேண்டும். பின் அதே நெய்யில் வேகவைத்துள்ள பருப்பை போட்டு கொள்ள வேண்டும். அதனுள்  கரைத்து வைத்துள்ள கரைசலை அதனுள் ஊற்ற வேண்டும்.

பின் பாயாசம் கொதித்தவுடன் அதனுள் இரண்டாம் பாலை சேர்த்து கிளறி விட்டு, அத்தானும் வேகவைத்துள்ள ஜவ்வரிசியை சேர்த்து, ஏலக்காய் தூள் சேர்த்து கிளறிவிட்டு கொதிக்க விட வேண்டும். பின் அதனுள் பொறித்து வைத்துள்ள தேங்காய் மற்றும் முந்திரியை போட்டு, முதலாம் பாலை ஊற்றி கொதிக்கவிடாமல் இறக்கிவிட வேண்டும்.

இந்த பாயசத்தை நாம் திருவிழாக்களில் மட்டுமல்ல, நமது வீடுகளிலும் செய்து சாப்பிடலாம். வீட்டில் செய்து சாப்பிடும் போது, நமக்கு சலிக்கும் வரை ஆசைதீர குடிக்கலாம்.

Published by
லீனா

Recent Posts

கில் மாதிரி விளையாட ஆசைப்படுகிறேன்…சாதனை படைத்த வைபவ் சூர்யவம்சி பேச்சு!

லீட்ஸ்: இந்திய கிரிக்கெட்டின் உருவாகி வரும் நட்சத்திரமான வைபவ் சூர்யவம்சி, இங்கிலாந்து அண்டர்-19 அணிக்கு எதிரான இளையோர் ஒருநாள் போட்டியில்…

18 minutes ago

மஸ்கின் கட்சியில் இந்த மூன்று அமெரிக்கர்கள் இணைவார்கள்! ட்ரம்ப் ஆதரவாளர் லாரா லூமர் கணிப்பு!

வாஷிங்டன்: டொனால்ட் டிரம்பின் நெருங்கிய ஆதரவாளரும், மாகா இயக்கத்தின் முக்கிய பிரமுகருமான லாரா லூமர், எலான் மஸ்க் தொடங்கவுள்ள புதிய…

20 minutes ago

மடப்புரம் அஜித் சகோதரர் நவீன் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதி! என்ன காரணம்?

சிவகங்கை : மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவில் காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார், நகை திருட்டு வழக்கில் விசாரணைக்காக…

2 hours ago

2 கோடி உறுப்பினர்களை சேர்க்க த.வெ.க மும்முரம்… ஆலோசனைக் கூட்டத்திற்கு அழைப்பு!

சென்னை: தமிழக வெற்றிக் கழகம் (தவெக), 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு 2 கோடி உறுப்பினர்களை சேர்க்கும் இலக்கை அடைய…

2 hours ago

சுப்மன் கில் பேட்டிங் பார்த்து சோர்ந்துட்டோம்! அரண்டு போன இங்கிலாந்து பயிற்சியாளர்!

பர்மிங்காம்: இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் (ஜூலை 2-6, 2025, எட்ஜ்பாஸ்டன்), இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில்…

4 hours ago

தூத்துக்குடி விமானத்தில் இயந்திர கோளாறு! அவசரமாக ஓடுபாதையில் நிறுத்தம்!

தூத்துக்குடி : சென்னை விமான நிலையத்தில் இருந்து தூத்துக்குடிக்கு ஜூலை 6, 2025 காலை 10:10 மணிக்கு புறப்பட இருந்த ஸ்பைஸ்ஜெட்…

5 hours ago