Hibiscus [Imagesource : Repersentative]
பொதுவாகவே பூ என்றாலே நாம் அதனை ஒரு அலங்கார பொருளாக தான் பார்ப்பதுண்டு. ஆனால், செம்பருத்தி பூவை பொறுத்தவரையில், இதனை அழகுக்காக மட்டுமல்லாது, உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தக் கூடிய ஒரு பூவாக கூட பார்க்கலாம். தற்போது இந்த பதிவில் செம்பருத்தி பூவை வைத்து தோசை சுடும் முறை மற்றும் இந்த பூவின் நன்மைகள் பற்றி பார்ப்போம்.
செம்பருத்தி தோசை
நாம் நமது வீடுகளில் பலவகையான தோசைகளை செய்து சாப்பிட்டிருப்போம். ஆனால், செம்பருத்தி தோசை குறித்து பெரும்பாலனவர்களுக்கு தெரிவித்தில்லை.
தேவையானவை
செய்முறை
முதலில் தேவையான பொருட்களை தயாராக வைத்துக் கொள்ள வேண்டும். பின்பு எடுத்து வைத்துள்ள செம்பருத்திப் பூவின் இதழ்களை மட்டும் தனியாக பிரித்து நன்கு கழுவிஎடுத்து, அதனை மிக்ஸில் போட்டு சின்ன வெங்காயம், சீரகம், உப்பு, ஒரு கப் தோசை மாவு சேர்த்து மை போல அரைத்துக் கொள்ள வேண்டும்.
அதன் பின் அரைத்து வைத்துள்ள கலவையை மீதமுள்ள தோசை மாவில் கலந்து கொள்ள வேண்டும். பின் ஒரு கடாயில் எண்ணெய் தடவி சூடேறியதும், அதில் தோசையை மெல்லியதாக போட்டு அதன் மேல் சிறிய வெங்காயம் நறுக்கியது மற்றும் கொத்தமல்லி தழைகளை தூவி சுட்டு எடுத்தால் சுவையான செம்பருத்தி தோசை தயார்.
செம்பருத்தி பூவின் நன்மைகள்
செம்பருத்தி பூவை பொறுத்தவரையில், அதில் நமது உச்சந்தலை முதல் பாதம் வரை பல்வேறு நன்மைகளை அளிக்கும் ஆற்றல் உள்ளது. இரத்த அழுத்த பிரச்சனை உள்ளவர்கள் இதனை உணவில் சேர்த்துக் கொண்டால், இது இரத்த அழுத்தத்தை குறைத்து உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
இதயம் சம்பந்தமான பிரச்னை உள்ளவர்கள் இந்த பூவை உணவில் சேர்த்தால், இது உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை போக்கி, இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
இன்று பெரும்பாலானவர்கள் சந்திக்கின்ற பிரச்சனைகளில் ஒன்று சர்க்கரை நோய். இந்த பிரச்சனை உள்ளவர்களுக்கு இந்த பூ ஒரு சிறந்த மருந்தாகும். இந்த பூவை உணவில் சேர்ப்பதன் மூலம், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் குறைத்து, இன்சுலின் உணர்திறனை மேம்படுத்துதுகிறது.
மேலும், இது உடலுக்கு தீங்கு விளைவிக்கும் நச்சுக்களை வெளியேற்ற உதவுகின்றன. இது நமது உடலில் பல்வேறு நன்மைகளை அளிக்கிறது. எனவே மிகவும் எளிதாக கிடைக்க கூடிய இந்த செம்பருத்தி பூவை நாம் உணவில் சேர்த்து ஆரோக்கியத்தை பெறுவோம்.
சென்னை : தற்போது இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் என்பது அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதனால் இரு நாட்டு…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் இந்தியா முழுக்க போர்க்கால பாதுகாப்பு…
டெல்லி : பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூரை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் என்பது நாளுக்கு…
டெல்லி : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து நேற்று முந்தினம் இந்திய ராணுவம் பாகிஸ்தான் பகுதிக்குள் இருந்த பயங்கரவாதிகள் முகாம்கள்…
ஜம்மு காஷ்மீர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய எல்லையோரம் உள்ள மாநில…
ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்…