aval
பெரும்பாலும் தற்போதைய காலகட்டத்தில் ஆண்கள், பெண்கள் இருவருக்குமே இருக்கக்கூடிய ஒரு மிக முக்கியமான பிரச்சினை தொப்பை தான். அடிவயிற்றுப் பகுதியில் தங்கிய கொழுப்பு காரணமாக தொப்பை ஏற்படுகிறது. இந்த கொழுப்பை குறைப்பதற்கு என்ன செய்வது என்று தெரியாமல் பலர் மருந்துகளை எடுத்து கொள்கின்றனர்.
சிலர் இயற்கையாக உடற்பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். உடற்பயிற்சி மேற்கொள்வது அவசியம் தான். ஆனால் அதே சமயம் தொப்பையை குறைப்பதற்கு உணவு முறைகளிலும் சில மாற்றங்களை கொண்டு வர வேண்டும். இன்று நாம் தொப்பையை குறைக்க காலை நேரத்தில் சாப்பிடக்கூடிய உணவு ஒன்றை தெரிந்து கொள்வோம் வாருங்கள்.
ஊற வைத்தல் : முதலில் நான்கு ஸ்பூன் சீரகத்தை சிறிதளவு தண்ணீரில் ஊறவைத்து எடுத்துக்கொள்ளவும். பிறகு மற்றொரு கிண்ணத்தில் அவலை சேர்த்து, அதனுடன் தேவையான அளவு தயிர் சேர்த்து சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்றாக கலக்கி, அவற்றையும் ஒரு அரைமணி நேரம் அப்படியே ஊற வைத்துவிட வேண்டும்.
வேகவைத்தல் : அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து ஊற வைத்துள்ள சீரகத்தை அதில் சேர்த்து அதனுடன் சிறிதளவு தண்ணீர் சேர்க்க வேண்டும். பின்பு சீரகம் நன்கு கொதித்ததும், அதனை நன்றாக ஆறவைத்து அதில் உள்ள தண்ணீரை வடிகட்டி எடுத்து வைத்துக் கொள்ளவும். இந்த சீரகத் தண்ணீரில் பாதியளவு எலுமிச்சையை பிழிந்து நன்றாகக் கலந்து வைத்துக் கொள்ளவும்.
அவல் : பின் ஊற வைத்துள்ள தயிருடன், இந்த சீரக தண்ணீரை அருந்தி சாப்பிட வேண்டும். நிச்சயம் தொப்பை குறைய இந்த உணவு மிகவும் உதவும்.
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) கொடியில் யானை சின்னத்தைப் பயன்படுத்துவதற்கு இடைக்காலத் தடை கோரி பகுஜன் சமாஜ்…
பாண்டிச்சேரி : புதுச்சேரியில் பாஜகவை சேர்ந்த தீப்பாய்ந்தான், ராஜசேகரன், செல்வம் ஆகிய மூன்று பேரை நியமன சட்டமன்ற உறுப்பினர்களாக நியமிக்க…
திண்டுக்கல் : பழனி முருகன் கோயிலில் ரோப் கார் சேவை வரும் ஜூலை 15, 2025 முதல் 31 நாட்களுக்கு…
லார்ட்ஸ் : லண்டனில் உள்ள லார்ட்ஸில் நடைபெற்று வரும் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டியின்…
சென்னை : உலக மக்கள்தொகை தினத்தில், மத்திய அரசுக்கு ஒரு நினைவூட்டல் என தொகுதி மறுவரையறை குறித்து இன்று உலக…
சென்னை : தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடத்தும் குரூப் 4 தேர்வு தொடர்பாக வினாத்தாள் கசிவு குறித்து…