Potato Lolly pop [Imagesource : Representative]
நம் வீடுகளில் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவருமே விரும்பி சாப்பிடக்கூடிய ஒரு காய்கறி வகை என்றால் அது உருளைக்கிழங்கு. இந்த உருளைக்கிழங்கை வைத்து, கூட்டு, பொரியல், குழம்பு என பலவகையான உணவுகளை தயார் செய்வதுண்டு.
இந்த உருளைக்கிழங்கில் நமது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தக் கூடிய பல வகையான சத்துக்கள் உள்ளது. இதில், பொட்டாசியம், இரும்பு, மெக்னீசியம், நார்சத்து மற்றும் வைட்டமின்கள் அதிகமாக காணப்படுகிறது. தற்போது இந்த பதிவில் உருளைக்கிழங்கை வைத்து வித்தியாசமான முறையில் லாலி பப் செய்வது எப்படி என்று பார்ப்போம்.
தேவையானவை
Potato Lolly Pop செய்முறை
முதலில் தேவையான பொருட்களை தயாராக வைத்துக் கொள்ள வேண்டும். பின்பு கேரட், உருளைக்கிழங்கை வேகவைத்து அதன் தோலை உரித்து வைத்துக் கொள்ள வேண்டும். அதன்பின் பின் பிரட்டை சிறிதளவு தண்ணீரில் ஊற வைத்து பின்னர் தண்ணீரை பிழிந்து விட்டு எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
பின் இஞ்சி மற்றும் பச்சை மிளகாய் கொத்தமல்லி இலை ஆகியவற்றை மிக்ஸியில் போட்டு நன்கு அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். இன்னொரு பாத்திரத்தில் உருளைக்கிழங்கு, கேரட் மற்றும் இஞ்சி கலவை, சீரகப்பொடி, சாட் மசாலா உப்பு சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ள வேண்டும்.
பிசைந்து வைத்த உருளைக்கிழங்கு கலவையில் ஊற வைத்த பிரட்டை தண்ணீரை பிழிந்து விட்டு , கான்பிளவர் மாவு சேர்த்து நன்கு பிசைந்து கொள்ள வேண்டும். அதன்பின் பிறகு உருளைக்கிழங்கு கலவையை எடுத்து உள்ளங்கையில் வைத்து உருண்டையாக உருட்டி வைக்க வேண்டும்.
பின் அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் விட்டு சூடானதும் ஒவ்வொரு உருண்டையாக போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும். அதன் பின் பொரித்தெடுத்த உருளைக்கிழங்கு உருண்டையில் லாலிபாப் ஸ்டிக்கை வைத்து அதனை பரிமாறலாம்.
இப்போது சுவையான உருளைக்கிழங்கு லாலிபப் தயார். உருளைக்கிழங்கை நாம் குழம்பு, பொரியல் என ஒரே மாதிரியான முறையில் செய்து சாப்பிடுவதை விட இப்படி வித்தியாசமான முறையில் செய்தால் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். குறிப்பாக குழந்தைகளுக்கு இந்த உணவு மிகவும் பிடித்தமான ஒன்றாக இருக்கும்.
அகமதாபாத் : இன்று அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத்…
அகமதாபாத் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில்…
சென்னை : இன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது…
ஈரோடு : பண்ணை வீட்டில் தனியாக இருந்த தம்பதி கொலை செய்யப்பட்டதாக நேற்று இரவு ஈரோடு பகுதி போலீசாருக்கு தகவல்…
நெல்லை : இன்னும் ஒரு வருடத்திற்குள் தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளதால் தற்போதே கூட்டணி குறித்த பேச்சுக்கள் அரசியல்…
மும்பை : WAVES 2025 மாநாடு நேற்று மும்பையில் தொடங்கியது. பிரதமர் நரேந்திர மோடி நேற்று விழாவில் கலந்து கொண்டு…