sleep [Imagesource : India.com]
நம்மில் பெரும்பாலனவர்களுக்கு குப்புறபடுத்து தூங்கினால் தான் உறக்கமே வரும். இவ்விரு தூங்குவது முதுகு வலி, கழுத்து வலி, மூட்டு வலி போன்ற பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். குப்புற படுத்து தூங்கும்போது, தலை, கழுத்து மற்றும் முதுகு ஆகியவை நீண்ட நேரம் ஒரே நிலையில் இருக்கும். இதனால் பல்வேறு பிரச்சனைகள் ஏற்படலாம்.
குப்புற படுத்து தூங்குவதை விரும்புபவர்கள், தங்கள் தலை மற்றும் கழுத்திற்கு ஆதரவாக ஒரு தலையணையைப் பயன்படுத்தலாம். அதிலும் பெண்கள் குப்புற படுத்து தூங்கும் போது மார்பு வலி ஏற்படுகிறது. குப்புற படுக்கும் பொது மார்பகத்தின் மீது அழுத்தம் ஏற்படுவதால் நெஞ்சுவலி போன்ற பிற நோய்களும் ஏற்படலாம்.
குப்புற படுத்து தூங்குவது முகத்தின் அழகை பாதிக்கும் என நிபுணர்கள் கூறுகின்றனர். ஏனென்றால், குப்புற படுத்து தூங்குவதால் முகசருமம் போதுமான ஆக்சிசனை பெற முடியாமல் போவதால் சில சரும பிரச்சனைகளை மேற்கொள்ள வேண்டிய அவசியம் ஏற்படுகிறது. முக்கியமாக கர்ப்பமாக இருப்பவர்கள் குப்புற படுத்து தூங்குவதை தவிர்க்க வேண்டும். ஏனென்றால், இவ்வாறு படுப்பது தாய்க்கு மட்டுமல்ல குழந்தைக்கும் தீங்கு விளைவிக்கும்.
குப்புற படுத்து தூங்குவது, செரிமான மண்டலத்தில்பிரச்னைகளை ஏற்படுத்தும். குறிப்பாக அஜீரண கோளாறு ,நெஞ்செரிச்சல் போன்ற பிரச்சனைகளை உண்டாக்கும். எனவே உங்களின் செரிமான மண்டலம் ஆரோக்கியமாக செயல்பட வேண்டுமென்றால் , குப்புறபடுப்பதை தவிர்த்திடுங்கள்.
எனவே குப்புற படுத்து தூங்குவதை விட, வலது பக்கமாக அல்லது இடது பக்கமாக படுத்து தூங்குவது சிறந்தது. இவ்வாறு படுக்கும்போது, முதுகு மற்றும் கழுத்து ஆகியவை நேராக இருக்கும். இது தசைகள் மற்றும் மூட்டுகளுக்கு குறைவான அழுத்தத்தை ஏற்படுத்தும். மேலும், செரிமானம் மற்றும் சுவாசம் ஆகியவை மேம்படும்.
லீட்ஸ்: இந்திய கிரிக்கெட்டின் உருவாகி வரும் நட்சத்திரமான வைபவ் சூர்யவம்சி, இங்கிலாந்து அண்டர்-19 அணிக்கு எதிரான இளையோர் ஒருநாள் போட்டியில்…
வாஷிங்டன்: டொனால்ட் டிரம்பின் நெருங்கிய ஆதரவாளரும், மாகா இயக்கத்தின் முக்கிய பிரமுகருமான லாரா லூமர், எலான் மஸ்க் தொடங்கவுள்ள புதிய…
சிவகங்கை : மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவில் காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார், நகை திருட்டு வழக்கில் விசாரணைக்காக…
சென்னை: தமிழக வெற்றிக் கழகம் (தவெக), 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு 2 கோடி உறுப்பினர்களை சேர்க்கும் இலக்கை அடைய…
பர்மிங்காம்: இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் (ஜூலை 2-6, 2025, எட்ஜ்பாஸ்டன்), இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில்…
தூத்துக்குடி : சென்னை விமான நிலையத்தில் இருந்து தூத்துக்குடிக்கு ஜூலை 6, 2025 காலை 10:10 மணிக்கு புறப்பட இருந்த ஸ்பைஸ்ஜெட்…