Weightloss
இன்று பெரும்பாலானோருக்கு உடல் பருமன் என்பது மிகப்பெரிய பிரச்சனையாக உள்ளது. உடல் பருமன் பிரச்னை உள்ளவர்கள் உடல் ரீதியாக மட்டுமல்லாமல் மன ரீதியாகவும் பல பாதிப்புகளை சந்திக்கின்றனர். உடல் ரீதியாக பார்க்கும் போது, சுறுசுறுப்பாக வேலை செய்ய, ஏற்ற நேரத்தில் வேலையை முடிப்பது போன்ற சிக்கல்கள் காணப்படும். உடல் பருமன் காரணமாக உடல் ஆரோக்கியத்திலும் சில பாதிப்புகள் ஏற்படும்.
அதே சமயம் வெளியில் செல்லும் போதோ, நண்பர்கள், உறவினர்கள் மத்தியில் உருவ கேலிக்கு ஆளாகும் போது, அவர்கள் மன ரீதியாகவும் பாதிப்புக்குளாகின்றனர். தற்போது இந்த பதிவில் உடல் எடையை குறைக்க கூடிய பானங்கள் பற்றி பார்ப்போம்.
இந்த பதிவில் உடல் எடையை குறைக்க கூடிய 3 பானங்கள் பற்றி பார்ப்போம். இந்த பானங்கள் தயாரிக்க பெரிய அளவில் செலவு செய்யவேண்டிய அவசியம் இல்லை. இந்த பானங்களை காலையில் வெறும் வயிற்றில் குடிக்கலாம். அப்படி குடிக்க இயலாதவர்கள் சாப்பிட்ட பின் 2 மணி நேரத்திற்கு பின்பு குடிக்கலாம்.
பானம் 1
தேவையானவை
செய்முறை
முதலில் தேவையான பொருட்களை தயாராக வைத்துக் கொள்ள வேண்டும். முதலில் ஒரு பாத்திரத்தில் 200 மிலி தண்ணீரில், இஞ்சி சிறிய துண்டு , எலுமிச்சை சாறு சிறிதளவு, பெருங்காயம் பாதி கலந்து, அதனை கொதிக்க வைத்து, இறக்கிய பின் உப்பு தேவையான அளவு கலந்து சுட சுட அருந்த வேண்டும்.
பானம் 2
தேவையானவை
செய்முறை
முதலில் தேவையான பொருட்களை தயாராக வைத்துக் கொள்ள வேண்டும். முதலில் ஒரு பாத்திரத்தில் 200 மிலி தண்ணீரில், இஞ்சி சிறிய துண்டு, மிளகு 6, துளசி இலைகள் 5 முதல் 6 இலைகளை போட்டு கொதிக்க வைத்து இறக்கி, இறுதியாக தேவையான அளவு தேன் கலந்து பருக வேண்டும்.
பானம் 3
தேவையானவை
செய்முறை
முதலில் தேவையான பொருட்களை தயாராக வைத்துக் கொள்ள வேண்டும். முதலில் ஒரு பாத்திரத்தில் 200 மிலி தண்ணீரில், இஞ்சி சிறிய துண்டு, மிளகு 6, வெற்றிலை இலைகள் 3 ஆகியவற்றை போட்டு கொதிக்க வைத்து இறக்கி, இறுதியாக தேவையான அளவு தேன் கலந்து பருக வேண்டும்.
பயன்கள்
இந்த 3 பானங்களிலும் பொதுவாக ஜின்ஜிரால் நமது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தக் கூடியதாக உள்ளது. இது இதயம் சம்பந்தமான பிரச்சனைகள், கொலஸ்ட்ராலை குறைக்கிறது. சர்க்கரை அளவை குறைக்கிறது, இரத்த அழுத்தத்தை குறைக்கிறது. எனவே இந்த பானத்தை வாரத்திற்கு 3 முறையாவது குடிப்பது உடலுக்கு மிகவும் நல்லது.
டெல்லி : தங்கக் கடத்தல் மற்றும் பணமோசடி வழக்கு தொடர்பாக கன்னட நடிகை ரன்யா ராவுக்குச் சொந்தமான ரூ.34.12 கோடி…
பர்மிங்காம் : இந்திய அணிக்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்று வருகிறது. ஷுப்மான் கில்லின் இரட்டை சதத்தால்…
பொள்ளாச்சி : பொள்ளாச்சியைச் சேர்ந்த குருதீப் என்ற 10ஆம் வகுப்பு மாணவர், தனியார் பள்ளியில் பயின்று வந்த நிலையில், 2025ஆம்…
காரைக்கால் : மயிலாடுதுறை அருகே தமிழக வாழ்வுரிமை கட்சியின் காரைக்கால் மாவட்ட நிர்வாகி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை…
பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் இந்திய அணி 587 ரன்களை குவித்துள்ளது. இந்திய அணிக்கு தூணாக நின்று…
சென்னை : திருப்புவனம் இளைஞர் மரணத்தை கண்டித்து நாளை (ஜூலை 3, 2025) எழும்பூர், ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற இருந்த…