விஷால் நடிப்பில் வெளிவந்து ‘சண்டகோழி’ திரைப்படம் மாபெரும் வெற்றியடைந்தது. இந்த திரைப்படத்தை இயக்குனர் லிங்குசாமி இயக்கி இருந்தார். மேலும், யுவன் சங்கர் ராஜா இசையமைத்த பாடல்கள் அனைத்தும் ஹிட் ஆகியிருந்தன. இந்நிலையில் அதன் 2ஆம் பாகம் உருவாக அறிவிப்பு வெளியாகி அதன் சூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதன் வெளியீடு ஏப்ரல் மாதம் 14ஆம் தேதியன்று தமிழ் புத்தாண்டை முன்னிட்டு வெளியாக உள்ளது. source : www.dinasuvadu.com
சல்மான்கான் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்து ரசிகர்களிடம் நல்ல வரவேற்ப்பை பெற்று வரும் டைகர் ஜிந்த ஹே திரைப்படமானது, நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மேலும், இப்படம் இதற்கு முந்திய படங்களை போல் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இப்படம் வெளியாகி 5 நாட்கள் ஆனது. 5 நாட்களில் 175 கோடி வசூல் சாதனை செய்துள்ளது. source : www.dinasuvadu.com
3வது நாளாக ரசிகர்களுடன் நடிகர் ரஜினிகாந்த் சந்தித்து புகைப்படங்கள் எடுக்க போகிறார். இந்த சந்திப்பில் மதுரை, விருதுநகர், நாமக்கல், சேலம் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த ரசிகர்கள் கலந்து கொண்டுள்ளனர்.பின்னர் அவர்கள் ரஜினியை சந்தித்து புகைப்படம் எடுத்துக்கொள்கிறார்கள்.
மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்த ;அலைபாயுதே’ படத்தின் மூலம் நடிகராகி பிறகு தமிழ்நாட்டின் சாக்லேட் பாயாக வளம் வந்தவர் நடிகர் மாதவன். பின்னர் பாலிவுட்டிலும் சென்று அங்கும் வெற்றிவாகை சூடினார். தனது இரண்டாவது இன்னிங்க்சை ‘இறுதி சுற்று’ படம் மூலம் தொடங்கிய மாதவன், விக்ரம் வேதா என வெற்றிகளோடு சென்று கொண்டிருக்கிறார். இந்நிலையில் சமீபத்தில் டிவிட்டர் பக்கத்தில், ‘ நான் 28 வருடத்துக்கு முன்னர் எனது பள்ளி பருவத்தில் லட்சியம் என எழுதியது, தான் பணக்காரனாக ஆக வேண்டும், […]
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனிக்கு உலகம் முளுவதும்ம் பெரும்பாலான ரசிகர் பட்டாளம் உள்ளது. அவர் ஐபிஎல்-இல் விளையாட ஆரம்பித்த உடன் தமிழ்நாட்டில் அவருக்கு ரசிகர் பட்டாளம் மிகவும் அதிகமாக உள்ளது. இதனை அவரே பல பெட்டிகளில் சொல்லி இருக்கிறார். மேலும் அவர் சென்னை எனது இன்னொரு தாய் வீடு எனவும் கூறியுள்ளார். இந்நிலையில் விஜய் ஆண்டனியை வைத்து நான் படத்தை இயக்கி இருந்த ஜீவா சங்கர் இயக்கும் ஒரு விளம்பர படத்தில் தோனி […]
சியான் விக்ரம் நடிப்பில் வெளியாகி, ஹரியின் மாஸ் இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றியடைந்த திரைப்படம் ‘சாமி’ இதில் த்ரிஷா, விவேக், கோட்டா சீனிவாச ராவ் போன்றவர்கள் நடித்து இருப்பார்கள். சமீபத்தில் அதன் சூட்டிங் போட்டோக்கள் வெளியாகி இருந்தன. அதில் சாமி முதல் பாகத்தில் கொல்லப்பட்ட பெருமாள் பிச்சையின் 29ஆம் ஆண்டு நினைவு தினம் என எழுதப்பட்டு கீழே பாபிசிம்ஹா, ஜான் விஜய், ஓ.ஏ.கே.சுந்தர் ஆகியோர் இருக்கும் புகைப்படமும், விக்ரம் பெருமாள் பிச்சையின் வீட்டிலிருந்து வெளியே வரும் படமும் […]
தமிழ் சினிமாவின் நம்பிக்கை நட்சத்திரம் சிவகர்த்திகேயன் தான். கொடுக்கின்ற டிக்கெட் விலைக்கு படம் எப்படியும் நம்மை திருப்திபடுத்திவிடும். அதனை நிருபிக்கும் வகையில் தற்போது வேலைக்காரன் வசூல் வேட்டை நடத்தி வருகிறது. வெளியான முதல் நான்கு நாட்களில் மட்டும் 35 கோடி வசூல் செய்து பெரிய சாதனையை நிகழ்த்தியுள்ளது. இது தமிழ்நாடு வசூல் மட்டும்தான். இன்னும் வெளிமாநிலம், வெளிநாடு என சேர்த்தால் மொத்தம் சுமார் 45 கோடி வசூல் செய்திருக்கும் என வினியோகிஸ்தர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த வசூலை […]
திருவண்ணாமலையில் விபத்தில் உயிரிழந்த ரசிகர் மன்ற நிர்வாகியின் உடலுக்கு நடிகர் கார்த்தி கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார். திருவண்ணாமலையைச் சேர்ந்த ஜீவன்குமார், கார்த்தி மக்கள் நல மன்ற மாவட்ட செயலாளராக உள்ளார். நேற்றுமுன் தினம் தாம்பரம் இரும்புலியூரில் நடைபெற்ற கார்விபத்தில் ஜீவன்குமார், அவரது நண்பர் தினேஷ் ஆகிய இருவர் உயிரிழந்தனர். இந்நிலையில் திருவண்ணாமலையில் உயிரிழந்த ஜீவன்குமாரின் இறுதிச்சடங்கு நடைபெற்றது. இதில் நடிகர் கார்த்தி கலந்து ஜீவன்குமாருக்கு அஞ்சலி செலுத்தினார். அப்போது துக்கம் தாங்காமல் , நடிகர் கார்த்தி […]
இயக்குனர் அட்லி மிக குறுகிய காலத்திலேயே பெரிய நட்சத்திரங்கள் கால்சீட் கொடுக்கும் அளவுக்கு பெரிய இயக்குனராகிவிட்டார். சமீபத்தில் இவர் இயக்கத்தில் வெளிவந்த மெர்சல் திரைப்படம் வசூலை வாரிக்குவித்தது. இந்நிலையில் இவர் அடுத்து யாரை இயக்க போகிறார் என ரசிகர்களின் கேள்விக்கு பதிலளிக்கும் வகையில் ஒரு செய்தி உலாவருகிறது. அது என்னவென்றால், தெலுங்கு முன்னணி நடிகர் பிராபாஸை இயக்க போவதாக கோலிவுட் வட்டாரம் தெரிவிக்கிறது. இந்த கதையயை மெர்சல் படத்திற்கு முன்னாடியே பிரபாசை இயக்க இருந்ததாகவும் கூறபடுகிறது. இந்த […]
தமிழ் சினிமாவில் வெளியாகும் படங்களை உடனுக்குடன் வெளியிட்டு படக்குழுவினருக்கு நஷ்டத்தை ஏற்படுத்துவதில் தமிழ் ராக்கர்ஸ், தமிழ் கன் போன்ற இணையத்தளங்கள் முன்னிலையில் உள்ளனர். இந்நிலையில் வரும் 29ம் தேதி வெளிவரவுள்ள ‘பலூன்’ படத்தின் இயக்குனர் சினிஷ் இந்த இணையதளங்களுக்கு ஓர் கோரிக்கையினை வைத்துள்ளார். அதன் படி, அவர் “தமிழ் ராக்கர்ஸ் பாஸ் உங்களை எப்படியும் தடுக்க முடியாதுனு தெரியும், இருந்தாலும் பலூன் படத்திற்காக 1 வாரம் டைம் குடுங்க, அதுக்குள்ளே என் தயாரிப்பாளர் தப்பிச்சிடுவாரு” என […]
சியான் விக்ரம் நடிப்பில் விரைவில் வரவிருக்கும் திரைப்படம் ‘ஸ்கெட்ச்’ இப்படத்தை சிம்புவை வைத்து வாலு படத்தை இயக்கிய விஜய் சந்தர் இயக்கியுள்ளார். இப்படத்தில் சியான் விக்ரமுக்கு ஜோடியாக முதல்முறையாக தமன்னா நடிக்கிறார். இப்படத்திற்கு தமன் இசையமைக்கிறார். மேலும் இந்த படத்தில் இரண்டு பாடல்களை விக்ரம் பாடியுள்ளதாக தமன் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.மேலும் இப்படத்தில் ஆண்ட்ரியா, சித்ஸ்ரீராம் , ஸ்வேதா மேனன், ஸ்ரேயா கோஷல் ஆகியோர் பாடல்களை பாடியுள்ளனர். மேலும் இப்படம் வரும் ஜனவரி மாதம் வெளியாகும் […]
இயக்குனர் தனா எழுதி, இயக்கிய ‘படைவீரன்’ படத்தில் விஜய் யேசுதாஸ், பாரதிராஜா, அம்ரிதா, அகில் ஆகியோர் நடித்துள்ளனர். கார்த்திக் ராஜா இசையமைத்துள்ள இப்படத்தினை மதிவாணன் தயாரித்துள்ளார். இந்நிலையில் இப்படத்தில் இடம்பெறும் ‘லோக்கல் சரக்கு பாரீன் சரக்கு’ என்னும் பாடலை நடிகர் தனுஷ் பாடியுள்ளார். தற்போது இப்படத்தின் லிரிக் வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது. https://www.youtube.com/watch?time_continue=3&v=drVNDPY_hTw
தற்போதுள்ள முன்னணி கதாநாயகிகளுள் ஒருவரான காஜல் அகர்வால் “இன்னும் கொஞ்சம் நாட்கள் தான் நடிப்பேன். வேறு தொழிலுக்கு போகப்போகிறேன். அப்படி போய்விட்டால் மீண்டும் சினிமாவிற்கு வரமாட்டேன்” என்று கூறியுள்ளார். இது குறித்து விளக்கம் அளித்துள்ள காஜல், கூறுகையில், “சினிமா நிரந்தரமானது அல்ல. நடிகைகள் எப்போதும் சினிமாவில் நடித்துகொண்டிருப்போம் என நினைக்கிறார்கள். மார்க்கெட் போய்விட்டால் என்ன செய்வது. ஏதாவது ஒரு தொழில் தொடங்க வேண்டும். நானும் இது பற்றி முடிவெடுத்து வருகிறேன்” என்று தெரிவித்துள்ளார். இவரது இந்த […]
அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்த தெறி படம் மூலம் பிரபலமானார் நடிகை மீனாவின் மகள் நைனிகா. ரசிகர்கள் அவரை தெறி பேபி என்று அழைத்து வருகிறார்கள். மலையாளத்தில் வெளியான பாஸ்கர் தி ராஸ்கல் படத்தை சித்திக் பாஸ்கர் ஒரு ராஸ்கல் என்ற பெயரில் தமிழில் ரீமேக் செய்துள்ளார். இந்த படத்தில் அரவிந்த்சாமி, அமலா பால், நைனிகா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். விஜய் அங்கிள் பிடிக்குமா, அரவிந்த்சாமி அங்கிள் பிடிக்குமா என்று நைனிகாவிடம் பேட்டி ஒன்றில் கேட்கப்பட்டது. அதற்கு அந்த […]
சந்திரமௌலி இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் ஷாலினி பாண்டே, நாசர், ஜெயசித்ரா, ஷிவானி படேல், லிவிங்ஸ்டன், அம்பிகா, யோகி பாபு, சதீஷ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் படம் ‘100% காதல்’. இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் அவர்களே இசையமைத்து வருகின்றார். விறுவிறுப்பாக நடந்து வரும் இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் நிறைவுற்று வரும் ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியாகும் என்று படக்குழு தெரிவித்துள்ளது. மேலும் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு இப்படத்தின் போஸ்டர் ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
நடிகை சமந்தா தனது திருமணத்திற்கு பிறகு தற்போது தமிழில் சிவகார்த்திகேயனுடன் ஓர் படத்திலும், விஷாலின் ‘இரும்புத்திரை’ படத்திலும் நடித்து வருகிறார். மித்ரன் இயக்கும் இப்படத்தில் அர்ஜூன் வில்லனாக நடிக்கிறார். விஷால் மேஜர் கதிரவனாக வருகிறார். இந்நிலையில் இப்படத்தில் சமந்தாவின் ரோல் பற்றிய தகவலை நடிகர் விஷால் தன் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். சமந்தா இப்படத்தில் மனநல மருத்துவராக நடிக்கிறாராம். இதில் அவரின் பெயர் டாக்டர் ரதி தேவி என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் “வரும் ஜனவரி 2018 ல் […]
நடிகை நயன்தாரா நேற்று டிசம்பர் 25ம் தேதியுடன் தனது சினிமா பயணத்தை மேற்கொண்டு 14 வருடங்கள் நிறைவு பெற்றுள்ளது. இதனால் அந்த நாளை நயன்தாரா ரசிகர்கள் மிக விமர்சையாக கொண்டாடினர். இந்த நிலையில் நயன்தாரா கிறிஸ்துமஸ் விழாவை மிகவும் ஸ்பெஷலாக விக்னேஷ் சிவனுடன் கொண்டாடியுள்ளார். அப்போது எடுக்கப்பட்ட ஒரு புகைப்படத்தை விக்னேஷ் சிவன் தன்னுடைய டுவிட்டரிலும் ஷேர் செய்ததோடு நயன்தாராவுக்கு தனது வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
‘கலகலப்பு-2’ படத்தினை தொடர்ந்து நடிகர் ஜீவா தனது அடுத்த படத்தை டான் சாண்டி இயக்கத்தில் நடிக்கவுள்ளார். ஜீவாவின் 29வது படமாக உருவாகும் இந்த படத்தில், இவருக்கு ஜோடியாக ‘அர்ஜுன் ரெட்டி’ படத்தின் புகழ் ஷாலினி பாண்டே நடிக்க போகிறார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து படத்தின் இயக்குநர் கூறுகையில், “காமெடி த்ரில்லர் ஜேனரில் இந்த படம் உருவாகிறது. இதற்கு `விக்ரம் வேதா’ புகழ் சாம் சி.எஸ் இசையமைக்கிறார். ரூபன் படத்தொகுப்பைக் கவனிக்கிறார். இந்தப் படத்தில் ரசிகர்களை ஆச்சர்யப்படுத்தும் […]
நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாகிய ‘விக்ரம் வேதா’ படம் பெரும் வெற்றியை அளித்தது, தற்போது, அவரின் நடிப்பில் ’96’ படம் வெளியாகவுள்ளது. இந்நிலையில் விஜய் சேதுபதி தற்போது தெலுங்கில் “உய்யலவடா நரசிம்ம ரெட்டி” படத்தில் முக்கிய ரோலில் நடித்து வருகிறார். இப்படத்தில் சிரஞ்சீவி ரெட்டியாக நடிக்கிறார். சுரேந்தர் ரெட்டி இயக்கும் இப்படத்தை ராம் சரண் தயாரிக்கிறார். இதில் விஜய் சேதுபதி, விடுதலை போராளியாக இருந்த நரசிம்ம ரெட்டிக்கு விசுவாகமாக இருந்த உப்பயாவாக நடிக்கிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
‘ஐ.எம்.டி.பி’ என்பது ஓர் தகவல் அறியும் இணையதளம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தளத்தில் படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், வீடியோ கேம் விளையாட்டுகள் குறித்த அனைத்து விதமான தகவல்களையும் நாம் அறிந்துகொள்ளலாம். இந்த தளத்தினை 8.3 மில்லியன் பதிவாளர்கள் பதிவு செய்துள்ளனர். மேலும், இந்த தளம் ஆண்டுதோறும் தனது வலைத்தளத்தில் சிறந்த படங்களுக்கான ரேட்டிங்கையும் வெளியிடும். அதன் படி, 2017ம் ஆண்டின் முதல் 10 இடங்களை பிடித்த இந்திய திரைப்படங்களின் வரிசையினை அண்மையில் வெளியிட்டுள்ளது. இதோ அந்த திரைப்படங்களின் […]