Students died [Image Source : inshorts]
ஆந்திராவில் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டதை அடுத்து, 9 மாணவர்கள் தற்கொலை செய்துகொண்ட சோகம் நிகழ்ந்துள்ளது.
ஆந்திரப் பிரதேசத்தில் இடைநிலைத் தேர்வு வாரியத்தால் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வுகள் நடந்தப்பட்டது. இதில் 10 லட்சம் மாணவர்கள் தேர்வெழுதினர். பிறகு, கடந்த ஏப்ரல் 26ம் தேதி (புதன் கிழமை) 11 மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. இந்த தேர்வில் 11ம் வகுப்பில் 61 சதவீத தேர்ச்சியும், 12ம் வகுப்பில் 72 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இதையடுத்து, குறைவான மதிப்பெண் மற்றும் தேர்வில் தோல்வியுற்றதால் 9 மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். மேலும் இரு மாணவர்கள் தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது. அதில், ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் பி.தருண் என்ற 17 வயது மாணவன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. பின்னர், 16 வயது சிறுமி ஒருவர் திரிநாதபுரத்தில் உள்ள அவரது வீட்டில் தற்கொலை செய்துகொண்டார்.
விசாகப்பட்டினத்தின் கஞ்சரபாலம் பகுதியில் உள்ள 18 வயது இளைஞர் ஒருவர் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். மேலும், சித்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த 17 வயது மாணவர்கள் இருவர் தேர்வில் தோல்வியடைந்ததால் தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது. இவ்வாறு மாணவர்கள் தேர்வில் தோல்வியுற்றதற்காக தற்கொலை செய்துகொண்டுள்ளது மாநிலம் முழுவதும் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…
வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…
சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…
காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…
காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…