வாட்ஸ்அப்பில் ஆண் நண்பருடன் பேசியதற்காக சகோதரியை 17வயது சிறுவன் துப்பாக்கியால் சுட்டு கொன்றுள்ளார்.
வடகிழக்கு டெல்லியில் வசித்து வரும் 17 வயது சிறுவன் தனது சகோதரி ஆண் நண்பரிடம் வாட்ஸ்அப்பில் மெசேஜ் செய்ததற்காக துப்பாக்கியால் சகோதரியை சுட்டு கொன்றுள்ளார் .இந்த சம்பவம் குறித்து பேசிய துணை போலீஸ் கமிஷனர் வேத் பிரகாஷ் சூர்யா ,பள்ளியில் படித்து கொண்டே சலூன் கடையில் பணிபுரிந்து வருபவர் தான் அந்த 17 வயது சிறுவன் .இவரது 16 வயது சகோதரி தனது பள்ளி படிப்பை நிறுத்தி விட்டு வீட்டில் இருந்து வருகிறார்.
சகோதரி தினமும் ஆண் நண்பர் ஒருவரிடம் தொலைப்பேசியில் பேசுவதையும் , வாட்ஸ்அப்பில் மெசேஜ் அனுப்புவதையும் கண்ட சிறுவன் தனது சகோதரியை எச்சரித்துள்ளார் .ஆனால் சகோதரி மீண்டும் ஆண் நண்பருடன் பேசுவதை விடவில்லையாம் .இந்த நிலையில் கடந்த வியாழக்கிழமை மீண்டும் சகோதரி ஆண் நண்பருடன் பேசுவதை கண்ட சிறுவன் கண்டிக்க ,இருவரிடையே சண்டை நடந்துள்ளது . இதனால் ஆத்திரமடைந்த சிறுவன் சகோதரியின் வயிற்றில் துப்பாக்கியால் சுட்டு கொன்றுள்ளார் .
உடனடியாக சிறுமியின் பெற்றோர்கள் ஜாக் பிரவேஷ் சந்திரா மருத்துவமனையில் சிறுமியை அனுமதித்துள்ளனர் . அதனையடுத்து போலீசாருக்கு தகவல் கொடுக்க சிறுவனை கைது செய்து துப்பாக்கியை கைப்பற்றினர் . அவரிடம் நடத்திய விசாரணையில் ,சிறுவன் உபயோகித்த துப்பாக்கி மூன்று நான்கு மாதங்களுக்கு முன்பு காலமான அவரது நண்பரிடமிருந்து வாங்கியதாக கூறியுள்ளார்.மேலும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சிறுமி மீண்டு வருவார் என்று அதிகாரி கூறியுள்ளார்.
பஞ்சாப் : ஜம்முவில் தற்போது பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி, ஜம்மு விமானப்படை தளமான…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த நேற்றைய தினம் செய்தியாளர்கள் மத்தியில் விளக்கமளித்த இந்திய ஆயுதப் படைகளின் இரண்டு பெண்…
தர்மசாலா : இன்றைய ஆட்டத்தில் பஞ்சாப் - டெல்லி அணிகள் மோதுகின்றன. இந்த இரு அணிகள் மோதும், 58வது போட்டி…
லாகூர் : பாகிஸ்தான் முழுவதும் 12 இடங்களில் இன்று இந்திய ட்ரோன்கள் தாக்குதல் நடத்தி உள்ளன. அதன்படி, லாகூர், குஜ்ரான்வாலா,…
தர்மசாலா : பஞ்சாப் மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையேயான இன்று தர்மசாலாவில் நடக்கவிருக்கும் போட்டி, மழைக் காரணமாக தாமதமாகியுள்ளது. தரம்ஷாலாவில்…
சென்னை : மத்திய உள்துறை அமைச்சக அறிவுறுத்தலின்படி, சென்னையில் 3 இடங்களில் இன்று மாலை 4 மணிக்கு போர்க்கால பாதுகாப்பு…