[Image source : EPS]
ஒடிசா பாலசோர் பகுதி ரயில் விபத்து காரணமாக இதுவரை 18 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. 7 ரயில்கள் தடம் மாற்றம் செய்யப்பட்டுள்ன.
ஒடிசாவின் பாலசோர் மாவட்டத்திலுள்ள பாஹாநகர் சந்தை ரயில் நிலைய பகுதியில் கர்நாடகாவின் பெங்களூர் நகரில் இருந்து மேற்கு வங்கத்தின் ஹவரா நகருக்கு சென்ற ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயில் (தடம் புரண்டரயில்) மீது மேற்கு வங்கத்திலிருந்து சென்னை நோக்கி வந்து கொண்டிருந்த சென்னை – கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் மோதி கோர விபத்து ஏற்பட்டது. இந்த கோர சம்பவத்தில் எதிரே வந்த சரக்கு ரயிலும் விபத்தில் சிக்கியது.
இந்த கோர விபத்தின் காரணமாக பாலசோர் ரயில் தடம் வழியாக செல்லக்கூடிய 7 ரயில்கள் டாடா நகர் ரயில் நிலையம் வழியாக திருப்பி விடப்பட்டன. மேலும், அவ்வழியாக செல்ல இருந்த 18 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ள்ளது. இந்த ரயில் விபத்தில் இதுவரை 233 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சென்னை : தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒருவளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் ஒருசில இடங்களிலும்,…
பெங்களூரு : இந்தியா - பாகிஸ்தான் போர் பதற்றம் காரணமாக பாதியில் நிறுத்தப்பட்ட 18-ஆவது ஐ.பி.எல் சீசன் ஒரு வார…
சென்னை : வடக்குப்பட்டி ராமசாமி எனும் ஹிட் படத்தை கொடுத்த சந்தானம் அடுத்ததாக டிடி நெக்ஸ்ட் லெவல் எனும் திரைப்படத்தில் நடித்து…
சென்னை : இந்திய டெஸ்ட் கேப்டன் ரோஹித் சர்மா ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து விராட் கோலியும் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு…
சென்னை : தமிழ்நாட்டில் 2024-2025 கல்வியாண்டிற்கான 10-ம் வகுப்பு மற்றும் 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளது. இந்த…
விழுப்புரம் : மாவட்டம் திண்டிவனம் தைலாபுரத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் மாவட்ட தலைவர்கள் மற்றும் செயலாளர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.…