பணம் மற்றும் நகைக்காக 3 திருமணம் செய்த பெண்ணை காவல்நிலையத்தில் புகாரளித்த இராணுவவீரர்.
ஆந்திரா மாநிலம், விசாகப்பட்டினம் மாவட்டத்தை சேர்ந்த ரேணுகா என்ற பெண், ராணுவத்தில் பணியாற்றும் பிரசாத்தை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்நிலையில், தான் பணியாற்றும் லக்னோவிற்கு ரேணுகாவை அனைத்து சென்றுள்ளார். அங்கு பல லட்சம் மதிப்புள்ள தங்க நகைகளை வாங்கி கொடுத்துள்ளார்.
இதனையடுத்து தனது விசாகப்பட்டினம் மாநகராட்சியில் வேலை கிடைத்திருப்பதாக கூறி அங்கிருந்து புறப்பட்டு வந்துவிட்டார். அதன்பின் லக்னோவில் இருந்து, அடிக்கடி தொலைபேசி மூலம் ரேணுகாவிடம் பேசி வந்துள்ளார் பிரசாத். இதனையடுத்து, தனது தாயாருக்கு உடல்நிலை சரியில்லை என்று கூறி, ரூ.45 லட்சம் வரை பிரசாத்திடம் பணம் வாங்கியுள்ளார். இறுதியாக தனது தாயார் இறந்துவிட்டதாக கூறிஉள்ளார்.
இதனையடுத்து, கொரோனா பரவல் குறைந்ததையடுத்து, விசாகப்பட்டினம் வந்த பிரசாத்துக்கு பேரதிர்ச்சி காத்திருந்தது. அதன்பின் தான் அவருக்கு ரேணுகாவிடம் ஏமாந்தது தெரியவந்தது. இந்நிலையில், இதுகுறித்து ராணுவவீரர் பிரசாத் போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். ரேணுகாவிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்த விசாரணையில் அவர் ஏற்கனவே இரண்டு திருமணங்கள் செய்தது தெரியவந்தது.
சென்னை : நேற்று பல்வேறு மருத்துவத்துறை இளங்கலை படிப்பில் சேருவதற்கான நீட் நுழைவுத்தேர்வு நாடு முழுவதும் நடைபெற்றது. இதில் தமிழகத்தில்…
சென்னை : தமிழ் சினிமாவில் 80,90களில் கொடிகட்டி பறந்த காமெடியன்களில் மிக முக்கியமானவர் கவுண்டமணி. சினிமாவில் நடிப்பதை தாண்டி வேறு…
மதுரை : சென்னை காட்டாங்குளத்தூரில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் சைவ சித்தாந்த மாநாடு நடைபெற்றது. அதில் கலந்து கொள்ள…
சென்னை : நேற்று முதல் கத்திரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திர வெயில் காலம் ஆரம்பமாகியது என வானிலை ஆய்வு…
காஷ்மீர் : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதியன்று காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்ததை…
மயிலாடுதுறை : நேற்று (மே 4) மயிலாடுதுறையில் திமுக சார்பில் பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் திமுக எம்.பி…