அகமதாபாத்தில் உள்ள ஒரு ஜவுளி ஆலையில் கழிவு தொட்டியை சுத்தம் செய்யும்போது ஏற்பட்ட விஷவாயுவை சுவாசித்தால், 4 பேர் உயிரிழந்துள்ளனர்.
குஜராத் மாநிலம், அகமதாபாத் மாவட்டத்தில் சிரிபால் குடும்பத்திற்கு சொந்தமான “விஷால் பேப்ரிக்ஸ்” எனும் அருகே ஒரு ஜவுளி தொழிற்சாலையில் ரசாயன கழிவுகளை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்ட நான்கு தொழிலாளர்கள், கழிவு தொட்டியின் உள்ளே விஷ வாயுவை சுவாசித்ததால், மூச்சுத்திணறி உயிரிழந்துள்ளனர்.
இதுகுறித்து அம்மாவட்ட டி.எஸ்.பி. நிதேஷ் பாண்டே கூறுகையில், இரசாயன கழிவு தொட்டியின் உள்ளே விஷ வாயுவை சுவாசித்ததில் தொழிலாளர்கள் நான்கு உயிரிழந்ததாகவும், இந்த சம்பவம் குறித்து விசாரணை நடந்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
ரசாயன கழிவுத் தொட்டியை சுத்தம் செய்யும் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்படவில்லை என்று குற்றம் சாட்டி, சுயாதீன சட்டமன்ற உறுப்பினர் ஜிக்னேஷ் மேவானி விசாரணை நடத்த வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.
அதுமட்டுமின்றி, கடந்த ஆண்டு அகமதாபாத் நகரில் சிரிபால் குழுவைச் சேர்ந்த மற்றொரு தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில், எட்டு தொழிலாளர்கள் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
சென்னை : இந்தியா முழுவதும் நடந்த பாதுகாப்பு ஒத்திகையில் ஒரு பகுதியாக மே 7-ம் தேதியான இன்று சென்னை மற்றும்…
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
மும்பை : ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் வேளையில், இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஓய்வு பெறுவதாக…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா ராணுவம் வெற்றிகரமாக தீவிரவாதிகள் முகாம்களை அழித்துள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர்…
கொல்கத்தா : ஐபிஎல் 2025-இன் 57-வது போட்டியில், நடப்பு சீசனில் லீக் சுற்றுடன் நடையை கட்டவுள்ள சென்னை மற்றும் பிளே…