Earthquake [Image Source : newsonair]
ஜம்மு காஷ்மீர் பகுதியில் கடந்த 24 மணி நேரத்தில் 5 முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் பகுதிகளில் கடந்த 24 மணி நேரத்தில் 5 நிழலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளது. இதில் முதல் நிலநடுக்கம் நேற்று (சனிக்கிழமை) பிற்பகல் 2.03 மணியளவில், ஜம்மு காஷ்மீரின் மலைப்பாங்கான ரம்பன் மாவட்டத்தில் 3.0 ரிக்டர் அளவில் ஏற்பட்டுள்ளது.
இரண்டாவது நிலநடுக்கம் லடாக்கின் லே பகுதியில் இரவு 9.44 மணியளவில் 4.5 ரிக்டர் அளவில் 10 கிமீ ஆழத்தில் ஏற்பட்டுள்ளது. இந்தியா-சீனா எல்லை அருகே நிலநடுக்கம் ஏற்பட்ட 15 நிமிடங்களில் ஜம்மு காஷ்மீர் மாநிலம் தோடா மாவட்டத்தில் இரவு 9.55 மணியளவில் 4.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
இன்று அதிகாலை 2:16 மணியளவில் 4.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம், லடாக்கில் உள்ள லே மாவட்டத்திலிருந்து 295 கிமீ வடகிழக்கே மீண்டும் ஏற்பட்டுள்ளது. மேலும், ஐந்தாவது மற்றும் கடைசி நிலநடுக்கம் ஜம்மு காஷ்மீரில் உள்ள கத்ராவிலிருந்து கிழக்கே 80 கிமீ தொலைவில் 11 கிமீ ஆழத்தில் 4.1 ரிக்டர் அளவில் ஏற்பட்டுள்ளது என்று நிலஅதிர்வுக்கான தேசிய மையம் தெரிவித்துள்ளது.
செங்கல்பட்டு : மாவட்டம் திருவிடந்தை இடத்தில நேற்று பாமக சார்பில் சித்திரை முழு நிலவு, வன்னியர் இளைஞர் பெருவிழா மாநாடு பிரமாண்டமாக…
சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…
சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…
லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…