Assam Rifle
தெற்கு மணிப்பூரில் உள்ள இந்திய-மியான்மர் எல்லைக்கு அருகே அசாம் ரைபிள் படை வீரர் ஒருவர் சக வீரர்களை துப்பாக்கியால் சுட்டுவிட்டு தன்னை தானே சுட்டு கொண்டு தற்கொலை செய்து கொண்டார். ஏஆர் பட்டாலியன் வளாகத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
இந்த சம்பவத்தில் துப்பாக்கி குண்டு பாய்ந்த 6 படை வீரர்களும் மருத்துவமனையில் சிகிச்சை அனுமதிக்கப்பட்டுள்ளன. இச்சம்பவம் குறித்து மணிப்பூர் போலீசார் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில்” காயமடைந்த அனைவரும் சிகிச்சைக்காக ராணுவ மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும், காயமடைந்தவர்கள் நலமுடன் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆளுநர் தேநீர் விருந்து- காங்கிரஸ் புறக்கணிப்பு..!
இந்த சம்பவத்துக்கும் மாநிலத்தில் நடந்து வரும் மோதலுக்கும் தொடர்பு இல்லை என போலீசார் திட்டவட்டமாக தெரிவித்தனர். தற்கொலை செய்து கொண்ட அசாம் ரைபிள் படை வீரர் வன்முறையால் பாதிக்கப்பட்ட மணிப்பூரில் உள்ள சுராசந்திபூரில் வசிப்பவர் என கூறப்படுகிறது. தற்போது வரை துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட நோக்கம் தெளிவாக தெரியவில்லை. இது குறித்து அதிகாரி விசாரணை நடத்தி வருகின்றனர்.
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…
நியூயார்க் : டிரம்ப் போப் ஃபிரான்சிஸ் மறைவை தொடர்ந்து, அடுத்த போப் யாராக இருக்கும் என கேட்கப்பட்ட கேள்விக்கு, "நானே போபாக…
சென்னை : இன்று (மே 3) முதல் மே 5 வரையில் சென்னை காட்டாங்குளத்தூர் பகுதியில் உள்ள எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழக…