மேற்குவங்கம், அசாம் மாநிலத்தில் முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில், மாலை 5 மணி நிலவரப்படி அசாமில் 71.62 சதவீத வாக்குகளும், மேற்குவங்கத்தில் 77.99 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது.
மேற்கு வங்கத்தில் 30 தொகுதிகளிலும், அசாமில் 47 தொகுதிகளிலும் முதல்கட்ட வாக்குப்பதிவு, இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. மேற்கு வங்கத்தில் உள்ள 30 தொகுதிகளில் மொத்தமாக 191 வேட்பாளர்கள் களம் காண்கின்றனர். அசாமில் 47 தொகுதிகளில் 264 வேட்பாளர்கள் போட்டியிடுகினறனர்.
இந்த தேர்தலில் 73 லட்சத்துக்கும் மேற்பட்ட வாக்காளர்கள் வாக்களித்து வரும் நிலையில், இதற்காக 10,288 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. அசாம் மாநிலத்தில் காலை முதல் முதல்வர், அமைச்சர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் ஆர்வமாக வந்து வாக்களித்து வருகின்றனர்.
இந்த வாக்குப்பதிவு முடிய இன்னும் ஒரு மணி நேரம் உள்ள நிலையில், வாக்குப்பதிவு நடைபெறும் இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தற்பொழுது மாலை 5 மணி நிலவரப்படி அசாமில் 71.62 சதவீத வாக்குகளும், மேற்குவங்கத்தில் 77.99 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
சென்னை : பாமக தலைவர் பதவி தொடர்பாக ராமதாஸ், அன்புமணி இடையே மோதல் நிலவுகிறது. இதனால் அன்புமணி ஆதரவாளர்களை பதவிகளில்…
சென்னை : போதைப் பொருள் விவகாரம் தொடர்பாக நடிகர் ஸ்ரீகாந்திடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை போதைப்பொருள் தடுப்பு…
சென்னை : நேற்றைய தினம் மதுரையின் வண்டியூர் பகுதியில் உள்ள அம்மா திடலில் ஒரு பிரமாண்டமான முருகன் மாநாடு நடைபெற்றது.…
சென்னை : மதுரையில் நேற்றைய தினம் முருக பக்தர்கள் மாநாடு, இந்து முன்னணி மற்றும் பாஜகவின் ஒருங்கிணைப்பில் மிகப் பிரமாண்டமாக…
ஈரான் : இஸ்ரேல் உடனான மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், ஹார்மூஸ் நீரிணையை (ஜலசந்திமூடுவதற்கான தீர்மானத்தை நாடாளுமன்றம் நிறைவேற்றியுள்ளது. இது, ஈரானின்…
அயர்லாந்து : இயக்குநர் எச் வினோத் இயக்கிய 'ஜன நாயகன' திரைப்படம் தான் முழுநேர அரசியலில் இறங்குவதற்கு முன் நடிக்கும்…