ஒடிசா ரயில் விபத்தில் காயமடைந்த 793 பேர் டிஸ்சார்ஜ்..!

ஒடிசா ரயில் விபத்தில் காயமடைந்த 793 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.
ஒடிசாவில் நேற்று இரவு மூன்று ரயில்கள் மோதி விபத்துக்குள்ளான சம்பவம் நாட்டையே வேதனைக்குள்ளாக்கியுள்ளது. 3 ரயில்கள் ஒன்றின் மீது ஒன்று மோதி பெரும் விபத்துக்குள்ளானதில் 288 பேர் பலி மற்றும் 1000க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.
இதில் காயமடைந்த பயணிகள் கோபால்பூர், காந்தபாரா, பாலசோர், பத்ரக் மற்றும் சோரோ ஆகிய மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில், ரயில் விபத்தில் காயமடைந்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 1175 பேரில் 793 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளதாக ஒடிசா மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
மேலும், இதில் 382 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை நடைபெற்று வருகிறது. 2 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தற்பொழுது வரை தமிழ்நாட்டை சேர்ந்த யாரும் உயிரிழக்கவில்லை என்று ஒடிசா சென்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.