கடந்த ஆண்டு பிரதமர் மோடி அமெரிக்கா பயணம் மேற்கொண்டபோது, இந்தியாவுக்கு வருகை தர வேண்டும் என ட்ரம்புக்கு அழைப்பு விடுத்திருந்தார். இதனை ஏற்றுக்கொண்ட ட்ரம்ப் 2 நாட்கள் பயணமாக வரும் 24-ம் தேதி இந்தியா வருகிறார். இந்த வருகையின்போது ட்ரம்ப் மற்றும் அவரது மனைவி மெலனியா ட்ரம்ப் ஆகியோர் டெல்லி மற்றும் அகமதாபாத் நகரங்களை சுற்றிப்பார்க்கின்றனர். மேலும் வல்லபாய் படேல் மைதானத்தில் மக்கள் பங்கேற்கும் பிரமாண்ட நிகழ்ச்சி ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பின்னர் வரும் நவம்பரில் அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது.
இந்த தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் ட்ரம்ப் போட்டியிட இருக்கும் நிலையில், அமெரிக்கவாழ் இந்தியர்களின் கவனத்தை ஈர்க்கவே, அவர் இந்த பயணத்தை மேற்கொள்கிறார் என கூறப்படுகிறது. ட்ரம்பை வரவேற்க குஜராத்தில் பணிகள் வேகமாக நடந்து வருகிறது. இதில் குறிப்பாக விமான நிலையத்தில் இருந்து மைதானம் வரை செல்லும் வழியெங்கும் அழகுபடுத்தப்படுகிறது. அந்தவழியில் உள்ள குடிசை பகுதிகளை மறைத்து அரை கிலோ மீட்டர் தூரத்திற்கு 8 அடி உயரத்திற்கு மதில் சுவர் எழுப்பப்படுகிறது. இந்த நடவடிக்கைக்கு தற்போது சமூகவலை தளத்தில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
அதில் இதுபோல் வெளிநாட்டு தலைவர்கள் வந்தால் மட்டும் சுவர்கள் எழுப்பப்பட்டு, இந்தியாவின் வறுமையை ஒழித்துவிடுகிறார்கள் என்று கூறி வருகிறார்கள். இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள நகராட்சி ஆணையம், குடிசை பகுதிகளை மறைக்க வேண்டிய எண்ணத்தில் சுவர் எழுப்பப்படவில்லை என்றும், ஏற்கனவே பழுதான சுவருக்கு பதிலாக புதிய சுவர் கட்டப்படுகிறது. மேலும் சுவரின் உயரம் 4 அடிக்கு மேல் இருக்காது, இதனால் குடிசைப்பகுதி மறைந்துவிடாது என தெரிவித்தார்.
டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…
வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…
சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…
காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…
காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…