Ooman chandy pinarayi [FileImage]
முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி மறைவுக்கு, கேரள முதல்வர் பினராயி விஜயன் தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.
கேரள முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி இன்று, அதிகாலை உடல்நலக்குறைவால் காலமானார். 79 வயதான இவர் கடந்த சில மாதங்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு, பெங்களூருவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை 4 மணிக்கு உம்மன் சாண்டி காலமானார்.
அவரது மறைவிற்கு அரசியல் தலைவர்கள் பலரும் தங்களது இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் கேரள முதல்வர் பினராயி விஜயன், தனது இரங்கலை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டிவீட்டில், கேரளாவின் அரசியல் உம்மன் சாண்டியின் மறைவுடன் ஒரு அத்தியாயம் முடிவுக்கு வருகிறது.
ஒரு நிர்வாகியாக, அரசியல் தலைவராக, மக்கள் பிரதிநிதியாக நமது மாநிலத்திற்கு அவர் ஆற்றிய பங்களிப்புகள் முன்னுதாரணமாகக் கருதப்படுகிறது. அவரது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் ஆதரவாளர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார்.
டெல்லி : ஜம்மு- காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா திங்கள்கிழமை…
மகாராஷ்டிரா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் ஓய்வு…
டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ (BCCI), நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனை…
ஊட்டி : நீலகிரி மாவட்டத்தின் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புகழ்பெற்ற மலர் கண்காட்சி மே 15, 2025 அன்று…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளின் இயக்குநர் ஜெனரல் நிலை…
டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு…