ஒடிசாவில் உள்ள கலஹந்தி மாவட்டத்தை சேர்ந்தவர் 26 வயதுடைய பெண்மணி ஆவார்.இவரது கணவர் வெளியூரில் தங்கி வேலைபார்த்து வருகிறார்.எனவே வீட்டில் தனது மாமியாருடன் வசித்து வருகிறார்.
இந்நிலையில் கடந்த 11 -ம் தேதி புதன் கிழமை அன்று பவானிபட்னா அருகே உள்ள கிராமத்தில் தனது வீட்டில் மாமியாருடன் இருந்துள்ளார்.அப்போது கணவரின் நண்பர் என்று ஒருவர் சில பொருட்களை வீட்டிற்கு கொண்டு வந்துள்ளார்.
அப்போது இரவு நேரம் ஆகியதால் இன்று தங்கிவிட்டு நாளை காலை செல்லுங்கள் என்று அந்த பெண்ணின் மாமியார் கூறியுள்ளார்.அதனால் அந்த நபரும் நண்பரின் வீட்டிலேயே தங்கி நண்பரின் மனைவி கையால் சாப்பிட்டுள்ளார்.
பின்னர் மறுநாள் காலை வியாழன் கிழமை தனது இருசக்கர வாகனத்த்தில் அந்த நபர் அவரது வீட்டிற்கு திரும்பியுள்ளார்.அப்போது நண்பரின் மனைவி பக்கத்தில் உள்ள வங்கிக்கு பணம் எடுக்க கிளம்பியுள்ளார்.
பின்னர் போகும் வழியில் நண்பரின் மனைவியை சந்தித்த அந்த நபர் வங்கியில் தான் இறக்கிவிடுவதாக கூறி தனது இரு சக்கர வாகனத்தில் ஏற்றியுள்ளார்.அந்த பெண்ணும் தனது கணவரின் நண்பர் என்ற எண்ணத்தில் வாகனத்தில் எறியுள்ளார்.
பின்னர் அந்த நபர் சிறிது தூரம் சென்றவுடன் ஆள்நடமாட்டம் இல்லாத இடத்தில் வாகனத்தை நிறுத்தி ஒதுக்குபுறமான இடத்திற்கு அந்த பெண்ணை கடத்தி சென்றுள்ளார்.மேலும் கைபேசியில் அழைத்து தனது இரண்டு நண்பர்களை வரவழைத்துள்ளார்.
பின்னர் தனது நண்பரின் மனைவி என்று கூட பாராமல் ஈவு இரக்கம் இல்லாமல் அந்த பெண்ணை ஒருவர் மாற்றி ஒருவர் பலாத்காரம் செய்துள்ளனர்.பின்னர் அதே இடத்தில் அந்த பெண்ணை விட்டு சென்ற அவர்கள் அந்த பெண்ணிடம் இருந்த ஏ டீ எம் கார்டை பறித்து சென்றுள்ளன.
இதன் காரணமாக அந்த பெண் காவல்துறையினரிடையே புகார் அளித்துள்ளார்.புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் அந்த மூன்று நபரையும் கைது செய்துள்ளனர்.
பின்னர் அவர்களிடம் இருந்த ஒரு ஸ்கூட்டார் மற்றும் அந்த பெண்ணின் ஏ டி எம்மையும் காவல்துறையினர் கைப்பற்றினர்.
இந்நிலையில் நண்பனுக்காக உயிரையே கொடுக்கும் நண்பர்கள் இருக்கும் இந்த நாட்டில் நண்பனுக்கு பெரும் துரோகத்தை அளித்த இந்த நபரின் செயல் அனைவரிடத்திலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
ஜெய்ப்பூர் : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் ஜெய்ப்பூர் சவாய் மான்சிங் மைதானத்தில்…
நடிகரும் மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன், கிரேஸி மோகன் எழுதிய '25 புத்தகங்கள்' வெளியீட்டு விழாவில் இன்று…
ஜெய்ப்பூர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் ஜெய்ப்பூர் சவாய் மான்சிங் மைதானத்தில்…
டெல்லி : ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் உள்ள பைசரன் புல்வெளியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில்…
சென்னை : பல்வேறு சிக்கல்களைக் கடந்து, கடந்த 2019ஆம் ஆண்டு தென்னிந்திய நடிகர் சங்க கட்டிட பணிகள் தொடங்கிய நிலையில்…
சென்னை : இந்திய கிரிக்கெட் அணி மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளின் நட்சத்திர பேட்ஸ்மேனாக உள்ளார் விராட் கோலி.…