DeepFake Videos [Representative Image]
DeepFake : 75 சதவீத இந்தியர்கள் போலியான டீப்ஃபேக் வீடியோக்களை பார்த்துள்ளனர் என ஓர் ஆய்வறிக்கை வெளியாகியுள்ளது.
தொழில்நுட்ப உலகில் அதிவேகமாக வளர்ந்து வரும் AI எனும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் ஆதிக்கம் என்பது நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. இதன் மூலம் நல்லது எவ்வளவோ அதே போல தீமைகளும் நடக்க வாய்ப்புள்ளது என தொழில்நுட்ப வல்லுனர்களே எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.
AI தொழில்நுட்பத்தின் மூலம் ஒருவர் முகத்தை வேறு ஒருவர் போல மாற்றியமைக்கப்படும் டீப்ஃபேக் (DeepFake) வீடியோக்கள் தற்போது அதிக அளவில் சமூக வலைத்தளங்களில் உலா வருகிறன. இதில் எது உண்மை, எது பொய் வீடியோ என சாமானியர்களால் கண்டறிய சிரமப்படும் அளவுக்கு தயார் செய்து விடுகின்றனர் சில விஷமிகள். இந்த டீப்ஃபேக் வீடியோக்களால் பல நடிகைகள், நடிகர்கள், மற்ற பிரபலங்கள் கூட பாதிக்கப்பட்டுள்ளனர்.
இது பற்றி, McAfee எனும் தொழில்நுட்பத்துறை அமைப்பு ஒரு ஆய்வறிக்கைகையை தயார் செய்து தற்போது அதனை வெளியிட்டுள்ளது. அதன்படி, 75 சதவீத இந்தியர்கள் டீப்ஃபேக் வீடியோக்களை பார்த்துள்ளனர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், அதில் 38 சதவீத மக்கள் டீப்ஃபேக் வீடியோவை எதிர்கொண்டுள்ளனர் என்றும், அதில் 18 சதவீதம் பேர் அதனால் பாதிப்படைந்துள்ளனர் என்ற அதிர்ச்சி தகவலும் வெளியாகியுள்ளது. டீப்ஃபேக் வீடியோ பார்த்தவர்களில் 57 சதவீதம் பேர் தாங்கள் பார்த்தது உண்மை தான் என்றும் நம்புகின்றனர்.
டீப்ஃபேக் வீடியோவால் பாதிப்படைந்ததில் 31 சதவீதம் பேர் தங்கள் பணத்தை இழந்ததாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. டீப்பேக் வீடியோவால் பாதிப்படைந்ததில் 40 சதவீதம் பேர் தங்களின் குரல் மாற்றம் செய்த வீடியோவை பார்த்துள்ளனர் என்றும், பாதிக்கப்பட்டவர்களில் 39 சதவீதம் பேர் மட்டுமே புகார் அளித்துள்ளனர் என்றும் McAfee அமைப்பு தகவல் தெரிவித்துள்ளது.
அதே போல டீப்ஃபேக் வீடியோ மோசடியில் ஈடுபடும் நபர்களில் 55 சதவீதம் பேர் சைபர்கிரைம் குற்றத்தில் ஈடுபட இதனை செய்கிறார்கள் என்றும், மோசடியில் ஈடுபடுவதில், 52 சதவீதம் பேர் போலியாக ஆபாச படங்களை தயார் செய்கின்றனர் என்றும், 49 சதவீதம் பேர் மோசடி செய்வதற்காக டீப்ஃபேக் வீடியோக்களை பயன்படுத்துகின்றனர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மோசடியில் ஈடுபடும் நபர்களில் 44 சதவீதம் பேர் ஆள்மாறாட்டம் செய்வதற்காகவும், 37 சதவீதம் பேர் போலி செய்திகளை தயார் செய்யவும், 31 சதவீதம் பேர் தேர்தலில் வாக்களிக்கவும் இதனை பயன்படுத்தினர் என்று அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. 27 சதவீதம் பேர் வரலாற்றை திரித்து வீடியோ தயார் செய்யவும் (தற்போது சமூக வலைத்தளத்தில் பரவும் போலி IPL கிரிக்கெட் வீடியோக்கள் போல ) டீப்ஃபேக் (DeepFake) வீடியோ தயார் செய்கின்றனர் என்றும் McAfee அமைப்பு தங்கள் ஆய்வறிக்கையில் கூறியுள்ளது.
வாஷிங்டன்: அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், இந்தியாவுடன் விரைவில் வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளதாக ஜூலை 1, 2025 அன்று…
ஆந்திரா : 30 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த தீவிரவாதி அபுபக்கர் சித்திக், ஆந்திர மாநிலம் அன்னமையா மாவட்டத்தில் தமிழ்நாடு காவல்துறையின்…
சென்னை: மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் (மதிமுக) பொதுச்செயலாளர் வைகோ, 2026 தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலில் திமுக கூட்டணியில் தங்கள்…
வாஷிங்டன் : நாசா விண்வெளி ஆய்வை முன்னெப்போதையும் விட எளிதாக அணுகக்கூடியதாக மாற்ற உள்ளது. அதாவது, விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான…
சென்னை : மடப்புரம் கோவில் காவலாளி அஜித்குமார் போலீஸ் தாக்கியதில் உயிரிழந்த நிலையில், அவரது குடும்பத்தினரிடம் தொலைபேசி வாயிலாக தொடர்பு…
சிவகங்கை : அஜித்குமார் மரண வழக்கை சிபிஐ-க்கு மாற்றம் செய்வதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுபோன்ற செயல்கள் எக்காலத்திலும், எங்கும்…