Prime Minister Narendra Modi [Image Source : PTI]
ரயில் விபத்து நிகழ்ந்த ஒடிசா மாநிலத்திற்கு இன்று பிரதமர் மோடி செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஒடிசாவில் நேற்று ஒரே இரவில் மூன்று ரயில்கள் இடையே ஏற்பட்ட விபத்தால், நாட்டையே பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த கோர ரயில் விபத்தில் 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள நிலையில், கிட்டத்தட்ட 800க்கும் மேற்பட்டோர் அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ரயில் விபத்தை தொடர்ந்து மத்திய, மாநில அரசு அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று நிலைமை குறித்து ஆய்வு செய்து வருகின்றனர். விபத்து நேர்ந்த பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்த சமயத்தில், ஒடிசா ரயில் விபத்தை தொடர்ந்து டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி, அதிகாரிகளுடன் இன்று ஆலோசனை மேற்கொள்ள உள்ளதாக கூறப்பட்டது.
இந்த கூட்டத்தில் மீட்பு பணிகள், நிவாரணம், சிகிச்சை விவரங்கள் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது. இந்த நிலையில், தற்போது மற்றோரு தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, பிரதமர் மோடி இன்று ஒடிசாவுக்கு விரைந்து, விபத்து நடைபெற்ற இடத்தில் நடைபெறும் மீட்பு பணிகளை பிரதமர் மோடி நேரில் பார்வையிட உள்ளார்.
இன்று ஒடிசா செல்லும் பிரதமர் நரேந்திர மோடி, முதலில் பாலசோரில் விபத்து நடந்த இடத்தை பார்வையிட உள்ளார். பின்னர் கட்டாக் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் சந்தித்து நலம் விசாரிக்கிறார். ரயில் விபத்து மீட்பு ஈடுபட பல்வேறு பகுதிகளில் இருந்து ராணுவ குழுக்கள் அனுப்பப்பட்டுள்ளன.
சென்னை : மகாராஷ்டிராவில் இந்தியை கட்டாயமாக்கும் உத்தரவுக்கு தாக்கரே சகோதரர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் அறிவித்த நிலையில், பள்ளிகளில்…
பிரான்ஸ் : நடிகர் மற்றும் ரேஸரான அஜித் குமார் குட் பேட் அக்லி திரைப்படத்தை தொடர்ந்து மீண்டும் ரேஸிங்கில் ஈடுப்பட்டு…
அமெரிக்கா : அமெரிக்கா வரி மற்றும் செலவீன குறைப்பு மசோதாவில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கையெழுத்திட்டார். மசோதா சட்டமானதால்…
அமெரிக்கா : பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடியில் குற்றம் சாட்டப்பட்டு தப்பியோடியதாக கூறப்படும் தொழிலதிபர் நிரவ் மோடியின் சகோதரர் நேஹல்…
சென்னை : 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டம் தமிழ்நாடு முழுவதும் மக்களின் குறைகளைத் தீர்க்கவும், அரசு சேவைகளை வழங்கவும் தமிழக அரசு…
சென்னை : திருநெல்வேலி மேற்கு புறவழிச் சாலைப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதனை, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு,…