ஆப்கானிஸ்தான் விவகாரம் தொடர்பாக டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் உயர்மட்டக் குழு ஆலோசனை நடைபெற்று வருகிறது.
ஆப்கானிஸ்தானில், சுமார் 20 ஆண்டுகளுக்கு பிறகு, அமெரிக்கப் படைகள் வெளியேற தொடங்கியதை அடுத்து ஆட்சி அதிகாரத்தை தலிபான்கள் கைப்பற்றி உள்ளனர். பின்னர், அந்நாட்டு அதிபர் அஷ்ரப் கனி நாட்டை விட்டு வெளியேறிய நிலையில் ஆப்கானிஸ்தான் முழுவதுமாக தலிபான்கள் வசம் சென்றது.
ஆப்கானிஸ்தானில் கடந்த மாத இறுதியில் இருந்து அமெரிக்க படைகள் முழுமையாக வெளியேறிவிட்டனர். இதைத்தொடர்ந்து, அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட பல நாடுகளும் ஆப்கானிஸ்தானில் உள்ள தங்கள் நாட்டு மக்களை விமானங்கள் மூலமாக பாதுகாப்பாக மீட்டு வந்தனர்.
புதிய அரசு அமைப்பதில் தலிபான்கள் தீவிரம் காட்டி வருகின்றனர். ஆப்கானிஸ்தானில் உள்ள 34 மாகாணங்களில் 33 மாகாணங்கள் தலிபான்கள் கைவசம் உள்ளது. இந்நிலையில், பாகிஸ்தான் உளவுதுறையினர் மற்றும் தீவிரவாத அமைப்புகள் ஆப்கானிஸ்தானில் கைப்பற்றப்பட்ட ஆயுதங்கள் கொண்டு காஷ்மீரில் ஊடுருவல் முயற்சியில் ஏற்படலாம் என கூறப்படுகிறது.
இதனால், டெல்லியில் பிரதமர் மோடி இல்லத்தில் உயர்மட்டக் குழு ஆலோசனை நடைபெறுகிறது. இந்த ஆலோசனையில் உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலும் ஆலோசனையில் கலந்துகொண்டுள்ளனர். தலிபான் அமைப்புகளை சேர்ந்த சிலர் அடுத்தகட்டமாக சுதத்திரமடைய செய்யவேண்டும் என்று பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : இன்று தமிழ்நாட்டில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. தேர்வு எழுதியதில் 95.03% மாணவர்கள் தேர்ச்சி பெற்று…
சென்னை : தமிழ்நாட்டில் கடந்த மார்ச் 1, 2025 முதல் மார்ச் 22, 2025 வரையில் +2 பொதுத்தேர்வுகள் நடைபெற்றன.…
மதுரை : இன்று (மே 8) மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண நிகழ்வு காலை…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் நேற்று அதிகாலை பாகிஸ்தான் பகுதிக்குள் உள்ள பல்வேறு பயங்கரவாத அமைப்புகளின்…
இஸ்லாமாபாத் : நேற்று (மே 7) அதிகாலை 1.30 மணியளவில் இந்திய ராணுவம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிகளில்…
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…