J.P.Nadda Raj [Image-ani]
பிரதமராக மோடி ஆட்சிக்கு வந்த பின் இந்தியாவின் மதிப்பு உயர்ந்துள்ளதாக பாஜக தேசிய தலைவர் நட்டா கூறியுள்ளார்.
ராஜஸ்தானில் பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய பாஜகவின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, பாஜக அரசின் 9ஆண்டுகால சாதனைகளைப் பாராட்டி பேசினார். அப்போது பேசிய அவர், பிரதமர் நரேந்திர மோடி ஆட்சிக்கு வந்தபிறகு தான் இந்தியாவின் மதிப்பு உயர்ந்துள்ளது. 2014க்கு முன் இந்தியாவில் 2ஜி & 3ஜி ஊழல்கள் என நிறைந்திருந்தது.
இந்தியா ஊழல் நாடாக அறியப்பட்டது, பிரதமர் மோடி ஆட்சிக்கு வந்த பிறகு, உலகில் இந்தியாவின் மதிப்பு உயர்ந்தது. உலகில் மிகப்பெரிய அரசியல் கட்சியாக பாஜக திகழ்வதாகவும், நாட்டில் உள்ள அனைத்து கட்சிகளும் குடும்ப கட்சிகளாக மாறிவிட்டன என அவர் கூறினார்.
மேலும் இந்தாண்டு இறுதியில் ராஜஸ்தானில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருப்பதை முன்னிட்டு, ராஜஸ்தானில் பாஜக தலைவர்கள் பொதுக்கூட்டங்கள் நடத்தி வருகின்றனர். இதேபோல் இன்று ஜெய்ப்பூரில் சவாய் ஸ்தல் காந்தி மைதானத்தில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பொதுக் கூட்டத்தில் உரையாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.
தூத்துக்குடி : பிரதமர் நரேந்திர மோடி, மாலத்தீவு மற்றும் இங்கிலாந்து உள்ளிட்ட நான்கு நாள் வெளிநாட்டுப் பயணத்தை முடித்துவிட்டு, இன்று…
தூத்துக்குடி : பிரதமர் நரேந்திர மோடி, மாலத்தீவு பயணத்தை முடித்துவிட்டு, ஜூலை 26, 2025 அன்று மாலை 7:50 மணிக்கு…
தூத்துக்குடி : பிரதமர் நரேந்திர மோடி, மாலத்தீவு பயணத்தை முடித்துக்கொண்டு, ஜூலை 26 இன்று அன்று மாலை 7:50 மணிக்கு தூத்துக்குடி…
சென்னை : இன்றயை தலைமுறையினர் பலருக்கும் பேவரைட் இயக்குனராக மாறியிருக்கும் இயக்குனர்களில் ஒருவர் லோகேஷ் கனகராஜ். இவர் கமல்ஹாசன், ரஜினி, விஜய்,…
மான்செஸ்டர் : இங்கிலாந்துக்கு எதிரான மான்செஸ்டரில் நடைபெறும் நான்காவது டெஸ்ட் போட்டியில் (ஜூலை 23-27, 2025), இந்திய அணியின் இரண்டாவது…
அரியலூர் : பிரதமர் நரேந்திர மோடி, ஜூலை 27, 2025 அன்று அரியலூர் மாவட்டத்தில் உள்ள கங்கைகொண்ட சோழபுரம் சோழீஸ்வரர் கோவிலுக்கு…